உலகின் செல்வாக்கு மிகுந்தவர்கள்.. டைம் லிஸ்ட்! டிரம்ப், முகம்மது யூனுஸ்க்கு இடம்.. இந்தியர்கள் இல்லை
வாஷிங்டன்: சர்வதேச அளவில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியவர்கள், ஏற்படுத்த கூடியவர்கள், பிரபலங்கள் டாப் 100 பேரை ஒவ்வொரு ஆண்டும் பிரபல ஆங்கில பத்திரிக்கையான டைம் மேகசின் (TIME magazine) வெளியிட்டு வருகிறது. இந்த 2025 ஆண்டுக்கான உலகின் செல்வாக்கு மிகுந்த தலைவர்கள் லிஸ்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப், வங்கதேச தலைவர் முகம்மது யூனுஸ் இடம்பித்துள்ளனர். இந்த லிஸ்டில் இந்தியர்கள் யாரும் இடம்பெறவில்லை.
உலகில் செல்வாக்கு மிகுந்த நபர்களின் பட்டியலை அவ்வப்போது பிரபல ஆங்கில பத்திரிக்கையான டைம் மேகசின் வெளியிட்டு வருகிறது. சர்வதேச அளவில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியவர்கள், ஏற்படுத்த கூடியவர்கள், பிரபலங்கள் இதில் இடம்பெற்று இருப்பார்கள்.

எல்லா வருடமும் 100 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு இந்த பட்டியல் வெளியிடப்படும். சினிமா, மக்கள் பணி, அரசியல், விளையாட்டு என்று பல்வேறு துறைகளில் இருந்து முக்கிய நபர்களை தேர்வு செய்வார்கள் அந்த வகையில், 2025 -ஆம் ஆண்டில் செல்வாக்கு மிகுந்த நபர்களின் பட்டியலை டைம் வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், முகம்மது யூனுஸ், டெஸ்லா நிறுவன சி இ ஒ எலான் மஸ்க் உள்ளிட்டவர்கள் இடம் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு ஷாக்சி மாலிக், பாலிவுட் நடிகர் ஆலியா பட் உள்ளிட்டவர்கள் இடம் பெற்று இருந்த நிலையில், இந்த ஆண்டில் இந்தியர்கள் யாரும் இடம் பெறவில்லை. டைம் இதழின் ஆண்டு பட்டியல் பல்வேறு கேட்டகிரிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
தலைவர்கள், ஐகான்கள், டைடன்ஸ் என பல்வேறு வகையாக பிரிக்கப்பட்டு வகைப்படுத்தப்பட்டுள்ளது. அரசியல் தலைவர்களில் அமெரிக்க அதிபர் டிரம்ப், எலான் மஸ்க், மெக்சிகோ அதிபர் தேர்தலுக்கான ரேசில் முதலிடம் வகிக்கும் கிளவுடியா ஷெயின்பவும் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். அதேபோல், ஜேடி வான்ஸ், ராபர்ட் கே ஃபென்னடி ஜேஆர், கீர் ஸ்டார்மர், ஜேவியர் மிலேய், டெட்ரோஸ் அதோனம், கேப்ரியேசுஸ், பிரைட்ரிச் மெர்ஸ் ஆகியோரும் இந்த லிஸ்டில் உள்ளனர்.
இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும் வெர்டெக்ஸ் பாராமெடிக்கல்ஸ் நிறுவனத்தி சி இ ஓவான ரேஷ்மா கேவல்ரமணியும் இந்த லிஸ்டில் இடம் பிடித்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications