"ஈரான் போர் 4 வாரங்களுக்கு தொடரும்.!" திட்டவட்டமாக அறிவித்த டிரம்ப்.. பற்றி எரியும் மத்திய கிழக்கு!
வாஷிங்டன்: அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தாக்குதலைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. இதனால் நிலைமை மிக மோசமாக மாறி வருகிறது. ஈரான் உடனான போர் சிறப்பாக நடந்து வருவதாகத் தெரிவித்த டிரம்ப், இதில் 48 ஈரான் தலைவர்கள் கொல்லப்பட்டதாகவும் இந்த மோதல் 4 வாரங்கள் வரை தொடரலாம் என்றும் தெரிவித்தார்.
அமெரிக்கா இஸ்ரேல் இணைந்து கடந்த இரு நாட்களாக ஈரான் மீது தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது. ஏற்கனவே இதில் ஈரானின் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டுள்ளார். இருப்பினும், ஈரான் பதிலடி நடத்தும் சூழலில், அமெரிக்கா- இஸ்ரேல் தாக்குதல்களும் தொடர்கிறது. இதனால் மத்திய கிழக்கில் உச்சக்கட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது.

4 வாரங்கள் தொடரும்
இதற்கிடையே ஈரான் போர் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் சில முக்கிய கருத்துகளைக் கூறியுள்ளார். அதாவது ஈரானுடனான தற்போதைய மோதல் நான்கு வாரச் செயல்முறை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். பிரிட்டிஷ் நாளிதழான தி டெய்லி மெயிலுக்கு அளித்த நேர்காணலில் அவர் மேலும், "இது எப்போதும் நான்கு வாரச் செயல்முறைதான். நான்கு வாரங்கள் அல்லது அதற்கும் குறைவான காலம் கூட ஆகலாம்" எனக் குறிப்பிட்டார். அமெரிக்க- இஸ்ரேல் தாக்குதல்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் சூழலில் இந்த கருத்துகள் வந்துள்ளது.
அமெரிக்க வீரர்கள்
அமெரிக்கா இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உட்படப் பல முக்கிய இராணுவ மற்றும் அரசியல் தலைவர்கள் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக தெஹ்ரான் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தியது.. இது மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் மோதலை ஏற்படுத்தியுள்ளது.. இந்த போரில் இதுவரை மூன்று அமெரிக்க வீரர்கள் உயிரிழந்துள்ளதையும் டிரம்ப் உறுதிப்படுத்தினார். அதேநேரம் அவர்கள் யார் என்ற தகவல்கள் அறிவிக்கப்படவில்லை. போரில் உயிரிழந்த அமெரிக்கர்களைப் பாராட்டிய டிரம்ப், "அவர்கள் சிறந்த மனிதர்கள்" என்று மட்டும் குறிப்பிட்டார்.
ஈரானில் நடத்தப்பட்ட இந்த நடவடிக்கை குறித்து டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல்ஸ் பக்கத்தில், "உலகின் மிகச் சிக்கலான, மிகப் பெரிய ராணுவத் தாக்குதல்களில் ஒன்று. போர் நடவடிக்கைகள் முழு வீச்சில் தொடர்கின்றன.. எங்கள் அனைத்து இலக்குகளும் அடையும் வரை அவை தொடரும். நீண்ட தூர ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுதங்களைக் கொண்ட ஈரான் ஆட்சி ஒவ்வொரு அமெரிக்கருக்கும் தீவிர அச்சுறுத்தலாக இருக்கும். ஈரான் தலைவர்கள் நாகரிகத்திற்கு எதிராகவே போர் தொடுத்தார்கள்.
48 தலைவர்கள்
அதேநேரம் இந்த போரில் பல ஆபத்துகள் இருப்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். நான் அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற பிறகு நடக்கும் முதல் அமெரிக்கப் போர் மரணங்கள் இவை.. அதேநேரம் இந்த போரில் நாங்கள் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறோம். இதுவரை ராணுவ நடவடிக்கை பெரும்பாலும் திட்டமிட்டபடியே நடந்து வருகிறது. அவர்களின் ஒட்டுமொத்த தலைவர்களையும் நாங்கள் அழித்துவிட்டோம் - 48 பேர் ஈரான் தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பதற்றம் அதிகரித்த போதிலும், பேச்சுவார்த்தைக்கு நான் தயாராக இருக்கிறேன்" என்றார்.
மீண்டும் பேச்சுவார்த்தை?
ஈரான் உடன் பேச்சுவார்த்தைகள் விரைவில் நடைபெறுமா என்று கேட்கப்பட்டபோது, "எனக்குத் தெரியாது" என்று பதிலளித்தார்.. அவர் மேலும், "ஈரான் பேச்சுவார்த்தையை இப்போது விரும்புகிறார்கள்.. ஆனால் அவர்கள் கடந்த வாரம் பேசியிருக்க வேண்டும், இந்த வாரம் அல்ல" எனக் குறிப்பிட்டார்.
பஹ்ரைன், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் மற்றும் ஜோர்டான் தலைவர்களுடன் பேசிய அவர், ராணுவத் தளபதிகளுடன் கலந்தாலோசித்த பிறகு மீண்டும் அமெரிக்க மக்களுக்கு உரையாற்றவுள்ளதாகவும் கூறினார். மோதல் தீவிரமடையும் நிலையில், அமெரிக்கா பல வாரத் ராணுவ நடவடிக்கைக்குத் தயாராக உள்ளது என்பதையே டிரம்பின் சமீபத்திய கருத்துகள் காட்டுகின்றன.
-
டிரம்ப்பால் ஈரானுக்கு சுக்கிர திசை.. தினமும் எண்ணெய் வருமானம் இவ்வளவா... குவைத், சவுதிக்கே ட்விஸ்ட் -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
Iran: அமெரிக்காவின் F18 போர் விமானத்தை குருவியை சுடுவது போல சுட்டு வீழ்த்திய ஈரான் ராணுவம்.. வீடியோ! -
ஈரான் போரால்.. எமெர்ஜென்சியை அறிவித்த ஆசிய நாடு! அடுத்து இந்தியாதான்! எச்சரிக்கும் நிபுணர்கள் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
ஈரான் போரில் தலையைவிட்ட புடின்.. ரஷ்யாவின் 'நிழல்' ஆட்டம்! பறந்து போன பார்சல்.. ஆபரேஷன் ஹிடன் ஹேண்ட் -
ஈரானை காலி பண்ணாம விடாதீங்க.. டிரம்புக்கு நெருக்கடி கொடுக்கும் சவுதி பட்டத்து இளவரசர்? ஏன் தெரியுமா? -
Iran us war: போரில் ஜெயிச்சுட்டோம்.. அணு ஆயுதம் வைத்துக்கொள்ள மாட்டோம் என ஈரான் சம்மதம்.. டிரம்ப் பேச்சு! -
கச்சா எண்ணெய் யுத்தம்.. கத்தாரும் சவுதியும் காலி? குட்டி ஆப்ரிக்க நாட்டிற்கு அடித்த மெகா ஜாக்பாட்! -
போர் ஒருபக்கம் இருக்கட்டும்.. 10 கப்பல்களில் எண்ணெய் பரிசாக கொடுத்த ஈரான்! டிரம்ப் பெருமிதம் -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்!












Click it and Unblock the Notifications