"மொத்த மக்களும் கொல்லப்படுவார்கள்".. இன்று இரவு ஈரான் என்ற நாடே இருக்காது.. டிரம்ப் பகீர் மிரட்டல்
வாஷிங்டன்: ''இன்று இரவு ஈரான் என்ற நாடே இருக்காது. மொத்த மக்களும் அழிக்கப்படுவார்கள்'' என்று டொனால்ட் டிரம்ப் ஆக்ரோஷமாக ட்ரூத் சமூக வலைதளதம் வழியாக மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் ஈரானுக்கு பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் போர் புரிந்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் 28 ம் தேதி இந்த போர் தொடங்கியது. ஒரு மாதத்தை கடந்தும் போர் முடிவுக்கு வரவில்லை. தொடர்ந்து மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றன. அதுமட்டுமின்றி தற்போது நாளுக்கு நாள் ஈரான் - அமெரிக்கா இடையேயான மோதல் உச்சமடைந்து வருகிறது.
தற்போது இந்த போர் 3ம் உலகப்போரை நோக்கி செல்கிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் ஈரான் மீதான தாக்குதலை இஸ்ரேலும், அமெரிக்காவும் இன்று முதல் தீவிரப்படுத்தி உள்ளது. அதுமட்டுமின்றி ஈரான் நாட்டையே அழிப்பேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார்.

கடும் கோபத்தில் டிரம்ப்
கடந்த சில நாட்களாகவே டொனால்ட் டிரம்ப் இத்தகைய மிரட்டலை விடுத்து வந்தாலும் கூட இன்று அவர் தெரிவித்துள்ள வார்த்தைகள் மிகவும் காட்டமாக உள்ளன. இதனால் ஈரான் மக்கள் பெரும் பீதியில் உறைந்துள்ளனர். இதுதொடர்பாக டொனால்ட் டிரம்ப் இன்று தனது ட்ரூத் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:
டிரம்ப் சொன்னது என்ன?
''இன்று இரவு ஒரு நாட்டின் (ஈரான்) நாகரிகமே (மக்கள்)அழிந்துவிடும். இதனை செய்ய நான் ஒருபோதும் விரும்பவில்லை. ஆனால் அது நடக்கும். இப்போது முழுமையான ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள அதேநேரத்தில் புத்திசாலித்தனமான பயங்கரவாதத்துக்கு அப்பாற்பட்ட சிந்தனையாளர்கள் அங்கு உள்ளதால் ஏதாவது சிறப்பான மாற்றம் நடக்கலாம். இது நடக்குமா என்பது யாருக்கு தெரியும்?.
உலகின் நீண்ட நெடிய வரலாற்றில் மிக முக்கியமான தருணங்களில் ஒன்றாக இன்றைய இரவு இருக்கலாம். 47 ஆண்டு கால அராஜகம், ஊழல், மரணங்கள் முடிவுக்கு வரும். ஈரான் மக்களுக்கு கடவுள் அருள் கொடுக்கட்டும்'' என்று ஆக்ரோஷமாக மிரட்டல் விடுத்துள்ளார். இதன்மூலமாக அவர் ஈரான் என்ற நாடே இருக்காது என்று தெரிவித்துள்ளார்.
தொடங்கிய தாக்குதல்
ஏற்கனவே இன்று ஈரான் மீது இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. ஷிராஸில் உள்ள பெட்ரோ கெமிக்கல் தளம் உள்பட ஈரானின் பல்வேறு இடங்களில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளது. அதேபோல் அமெரிக்காவும் ஈரானில் போக்குவரத்தை சீர்குலைக்கம் வகையில் பாலங்கள், ரயில் பாலங்களை குறிவைத்து தாக்கி வருகிறது. இப்படியான சூழலில் டிரம்பின் இந்த மிரட்டல் ஈரானுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறி உள்ளது.
பின்னணி என்ன?
திடீரென்று ஈரான் மீது தாக்குதலை தீவிரப்படுத்துவதன் பின்னணியில் முக்கிய விஷயம் உள்ளது. அதாவது ஈரான் தனக்கு சொந்தமான ஹார்முஸ் ஜலசந்தியை மூடி வைத்துள்ளது. இதுதான் தற்போது மொத்த உலக நாடுகளுக்கும் பிரச்சனையாக மாறி உள்ளது. ஏனென்றால் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக தான் கச்சா எண்ணெய் மற்றும் கேஸ் வர்த்தகத்தில் 20 சதவீதம் வரை நடக்கும். தற்போது ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடி வைத்துள்ளதாக பல நாடுகள் கச்சா எண்ணெய், கேஸ் தட்டுப்பாட்டை நோக்கி செல்கின்றன.
அதுமட்டுமின்றி அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடுகளான கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் உள்ளிட்ட நாடுகள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக தான் வர்த்தகம் மேற்கொண்டு வருகின்றன. இந்த நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்துவது மட்டுமின்றி, வர்த்தகத்தையும் முடக்கி வைத்துள்ளது. இது டிரம்புக்கு பெரும் பிரச்சனையாக மாறி உள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதற்கான காலக்கெடு இன்று இரவு 8 மணியுடன் முடிவுக்கு வர உள்ளது. இன்னும் ஈரான் அதனை திறக்கவில்லை. இப்படி ஈரான் பணியாத நிலையில் அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து தற்போது தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
நள்ளிரவில் பாய்ந்த அமெரிக்க ஏவுகணைகள்... அதிகாலையில் திருப்பி அடித்த ஈரான்! மீண்டும் வெடிக்கும் போர் -
ஈரான் பந்தர் அப்பாஸில் அமெரிக்க தாக்குதல்.. வேலையை காட்டிய டிரம்ப்.. அப்போ அமைதி எல்லாம் கனவுதான் -
குவைத்தில் தாக்குதல்.. புகுந்து அடித்த அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்த ஈரான்.. உச்சகட்ட பதற்றத்தில் வளைகுடா! -
இந்தியாவால் ஆடிப்போன சீனா... அமெரிக்காவுடன் இணைந்து மாஸ்டர் மூவ்.. உற்று பார்க்கும் உலக நாடுகள் -
இரவோடு இரவாக பொழிந்த குண்டு மழை.. அமைதி பேச்சுவார்த்தை நடக்கும் போது டிரம்ப் தாக்குதல்.. பதற்றம் -
மீண்டும் வெடிக்கும் போர்..? ஈரானின் பதில் தாக்குதலில் ஷாக்கான அமெரிக்கா.. சிக்கிய F-35 பைட்டர் ஜெட்! -
சமாதான பேச்சுவார்த்தைக்கு நடுவே வேலையை காட்டிய டிரம்ப்.. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா திடீர் தாக்குதல் -
பாகிஸ்தான் கூட டிரம்ப்பை மதிக்கல.. அமெரிக்காவை சீண்டும் ஷெரீப் அரசு.. இனி தான் இருக்கு சம்பவம்! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம்












Click it and Unblock the Notifications