வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தேர்தலில் தோற்றால்.. நான் அமெரிக்காவை விட்டு வெளியேறும் நிலை வரும்.. பிரச்சாரத்தில் ட்ரம்ப் பேச்சு

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அதிபர் தேர்தலில் தோற்றால் அமெரிக்காவை விட்டு, தான் வெளியேற வேண்டியிருக்கும் என்று அந்த நாட்டின் அதிபரும், குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளருமான, டொனால்ட் ட்ரம்ப் தனது பிரச்சாரத்தின்போது தெரிவித்துள்ளார்.

நவம்பர் 3ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஜார்ஜியா மாகாணத்தில், மேகானில், நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய டொனால்ட் ட்ரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

"நான் ஒரு வேளை இந்த தேர்தலில் தோற்றால் என்ன நடக்கும் என்று கற்பனை செய்தீர்களா? நான் அவ்வளவு சிறப்பாக உணர மாட்டேன். எனவே நாட்டை விட்டு வெளியேற வேண்டி வந்தாலும் வரும். எனக்கு தெரியாது" என்று தெரிவித்துள்ளார் டொனால்ட் டிரம்ப்.

அமெரிக்க அதிபர் தேர்தல்: உலகின் காற்று மாசுபாட்டுக்கு இந்தியா, சீனா,ரஷ்யா காரணமாம்.. சொல்வது டிரம்ப்அமெரிக்க அதிபர் தேர்தல்: உலகின் காற்று மாசுபாட்டுக்கு இந்தியா, சீனா,ரஷ்யா காரணமாம்.. சொல்வது டிரம்ப்

நிறைய பணம்

நிறைய பணம்

நான் இந்த உலகத்திலேயே சிறப்பான பணம் வசூலிப்பாளன். நான் நினைத்து இருந்தால் இன்னும் அதிகமான பணத்தை தேர்தல் செலவீனத்துக்கு பெற்றிருக்க முடியும். ஆனால் எனக்கு அது வேண்டாம்.

ஆப்ரஹாம் லிங்கன் சூப்பர்

ஆப்ரஹாம் லிங்கன் சூப்பர்

அமெரிக்க அதிபர் வரலாற்றில் அதிபர் தோரணையில் சிறப்பாக நடந்து கொண்டதே நானாகத்தான் இருப்பேன். ஆனால் ஆப்ரஹாம் லிங்கன் மட்டும் இதில் விதிவிலக்கு. அவர் தொப்பி அணியும் ஸ்டைலை முறியடிப்பது ரொம்ப கஷ்டம். இவ்வாறு டொனால்ட் ட்ரம்ப் பேசியுள்ளார்.

தேர்தல் நிதி

தேர்தல் நிதி

தேர்தல் செலவுக்காக டொனால்ட் ட்ரம்ப் தரப்பு 247 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு நிதி திரட்டியுள்ளது. அதே நேரம் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன், தரப்பில் 383 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு நிதி திரட்டி உள்ளனர் என்பது குறிபிடத்தக்கது.

 வாழ்த்து

வாழ்த்து

இதனிடையே நவராத்திரியையொட்டி, ஜோ பிடன் இந்துக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆனால் ட்ரம்ப் வாழ்த்து கூறவில்லை என்று இந்திய நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகிறார்கள். ட்ரம்புக்கு பண்முகத் தன்மையில் நம்பிக்கையில்லையா என்று கேட்டு பல பதிவுகளை பார்க்க முடிகிறது.

English summary
"Could you imagine if I lose, I am not going to feel so good, maybe I will have to leave the country, I don't know", this is what President Donald Trump has said at a rally on Friday evening in Macon, Georgia.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X