டிரம்ப் கையை பாருங்க.. அதென்ன கறுப்பா? பயங்கரமா தள்ளாடுகிறாரே.. அமெரிக்க அதிபருக்கு என்னதான் ஆச்சு?
வாஷிங்டன்: அமெரிக்க அதிபரான டிரம்ப் கைகளில் திடீரென மர்ம மார்க் தோன்றியுள்ளன. மேலும், அவர் தள்ளாடும் வீடியோ ஒன்றும் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. ஒரு பக்கம் டிரம்ப் திடீர் திடீரென வரி போட்டு உலகை அலறவிடும் நிலையில், டிரம்ப் தொடர்பான இந்த தகவல்கள் பேசுபொருளாகி உள்ளன.
அமெரிக்காவில் டிரம்பிற்கு முன்பு அதிபராக இருந்தவர் பைடன். அவரது பதவிக்காலத்தில் கடைசி இரு ஆண்டுகள் அவரது உடல்நிலை குறத்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.

டிரம்ப்
அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாகவும் இதனால் அவரால் அதிபர் பதவிக்கான வேலைகளைச் சரிவரச் செய்ய முடிவதில்லை என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. அப்போது எதிர்க்கட்சி வரிசையில் இருந்த டிரம்ப் கூட இந்த விமர்சனத்தைக் கடுமையாக முன்வைத்தார். இதன் காரணமாகவே ஒரு கட்டத்தில் பைடன் அதிபர் போட்டியில் இருந்தும் கூட விலக வேண்டிய சூழல் ஏற்பட்டது.
அதென்ன கறுப்பா இருக்கு
இதற்கிடையே இப்போது டிரம்பும் இதே விமர்சனங்களை எதிர்கொள்ளத் தொடங்கியுள்ளார்.78 வயதான டிரம்பின் உடல்நிலை குறித்து கேள்விகள் எழுந்துள்ளது. கடந்த வாரம் தான் அதிபர் டிரம்பின் கையில் பின்புறத்தில் காயம் காணப்பட்டது. அந்த குறிப்பிட்ட இடத்தில் மட்டும் தோல் கறுப்பு நிறத்தில் மாறி வீக்கம் போல இருந்தது. இதை ஆங்கிலத்தில் bruise என்பார்கள். இதற்கிடையே இப்போது அவரது உள்ளங்கையில் இரு இடங்களில் மீண்டும் இதேபோல காயம் ஏற்பட்டு இருக்கிறது.
நேற்று திங்கள்கிழமை பிற்பகல் தைவான் செமிகண்டக்டர் உற்பத்தி நிறுவனத்தின் முதலீடு குறித்து வெள்ளை மாளிகையில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அதில் டிரம்ப் பங்கேற்றுப் பேசிய நிலையில், அப்போது தான் அவரது உள்ளங்கையில் கறுப்பு நிறத்தில் இரண்டு காயங்கள் தென்பட்டன. இது டிரம்பின் உடல்நிலை குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன. ட்விட்டரில் பலரும் டிரம்பின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்கள்.
நெட்டிசன்கள் சொல்வது என்ன
இது தொடர்பாக நெட்டிசன் ஒருவர், "மீண்டும் டிரம்பின் வலது கையின் உள்ளங்கையில் காயம் உள்ளது. சிராய்ப்பு காயங்கள் போலத் தெரிகிறது. இன்று வெள்ளை மாளிகையில் அவர் பேசும் போது இது தெளிவாகத் தெரிந்தது. அவர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். இது அவருக்கும் கூட தெரியும்" என்று பதிவிட்டுள்ளார். மேலும் மற்றொரு நபர் டிமென்ஷியா பிரச்சினை இருப்பவர்களுக்கே இதுபோல கைகளில் காயம் ஏற்படும் எனப் பதிவிட்டுள்ளார்.
நெட்டிசன்கள் இதுபோல ஒவ்வொரு கருத்துகளைக் கூறி வரும் நிலையில், மற்றொரு வீடியோ இப்போது வெளியாகியுள்ளது. டிரம்பிற்கு கோல்ப் விளையாட்டு பிடிக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் அதிபர் பதவியில் இருந்தாலும் அடிக்கடி கோல்ப் விளையாடுவார். இதற்கிடையே கோல்ப் வண்டியில் இருந்து இறங்கும் போது தடுமாறுவது போன்ற வீடியோ அவரது உடல்நிலை குறித்த விவாதத்தை அதிகரித்துள்ளது.
வினோத விளக்கம் தந்த வெள்ளை மாளிகை
இதற்கிடையே டிரம்ப் கைகளில் பின்புறம் கறுப்பாகக் காயம் போல இருப்பதற்கு வெள்ளை மாளிகை வினோதமான ஒரு விளக்கத்தைக் கொடுத்துள்ளது. இது தொடர்பாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட், "அதிபர் டிரம்ப் மக்களுக்காக வேலை செய்பவர். அவரது அர்ப்பணிப்பு அசைக்க முடியாதது, ஒவ்வொரு நாளும் அதை அவர் நிரூபித்து வருகிறார். டிரம்பை சந்திக்க ஒவ்வொரு நாளும் பல நூறு பேர் வருகிறார்கள். அவர்கள் டிரம்புடன் கைகுலுக்குகிறார்கள். இதனால் ஏற்பட்ட காயம் தான் அது" என்று கூறியிருக்கிறார்.
இந்த விளக்கமும் கூட இணையத்தில் பேசுபொருள் ஆகியுள்ளது. கைகுலுக்குவதால் காயம் ஏற்படும் என்பதைக் கேள்விப்பட்டதே இல்லை என ஒரு தரப்பினர் கூறி வருகிறார்கள். மற்றொரு தரப்பினர் கைகுலுக்குவதாலேயே காயம் ஏற்படுகிறது என்றால் டிரம்பிற்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது உண்மைதான் என்றும் கூறி வருகிறார்கள். டிரம்ப் கைகளில் உள்ள அந்த மர்ம மார்க் அமெரிக்காவில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications