கிரீன்லாந்தை விலைக்கு வாங்க விரும்பும் டிரம்ப்.. தீவின் உண்மையான விலை எவ்வளவாம் தெரியுமா?
வாஷிங்டன்: டென்மார்க் நாட்டின் தன்னாட்சி பிராந்தியமாக உள்ள கிரீன்லாந்தை வாங்க அமெரிக்கா விரும்புவதாக டொனால்டு டிரம்ப் கூறி வருகிறார். அமெரிக்காவின் பாதுகாப்புக்கும் மிக முக்கியமான பகுதியாக கிரீன்லாந்து உள்ளதால் வெகுகாலமாகவே கிரீன்லாந்து மீது அமெரிக்கா கண்வைத்துள்ளது. தற்போதைய காலகட்டத்தில் ஒரு பிராந்தியத்தை மற்றொரு நாடு வாங்க முடியுமா? உண்மையில் கிரீன்லாந்தின் விலை எவ்வளவு இருக்கும்? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
அமெரிக்க அதிபராக வரும் 20 ஆம் தேதி பதவியேற்க உள்ள டொனால்டு டிரம்ப், தனது வழக்கமான ஸ்டைலில் அதிரடியான கருத்துக்களை பேசி வருகிறார். அமெரிக்க பொருட்களுக்கு வரி விதித்தால் அதே அளவுக்கு திருப்பி வரி விதிப்பேன் என்பது தொடங்கி மத்திய கிழக்கு நாடுகளுக்கு விடுத்த எச்சரிக்கை வரை டிரம்ப் உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் பேசி வருகிறார். அந்த வகையில், கிரீன்லாந்து தீவை விலைக்கு வாங்கும் விருப்பத்தையும் டொனால்டு டிரம்ப் வெளிப்படுத்தி வருகிறார்.

டென்மார்க்கின் தன்னாட்சி பிரதேசமாக கிரீன்லாந்து உள்ளது. இந்த கிரீன்லாந்த் தீவின் விலை 12.5 பில்லியன் முதல் 77 பில்லியன் டாலர் வரை போகும் என்று அமெரிக்காவை சேர்ந்த பிரபல ரியல் எஸ்டேட் டெவலப்பரான டேவிட் பார்க்கர் தெரிவித்துள்ளார். கிரீன்லாந்து மீது டிரம்ப் ஆர்வம் காட்டுவது இது முதல் முறையல்ல. கடந்த 2019 ஆம் ஆண்டே டிரம்ப், கிரீன்லாந்து குறித்து பேசினார். கிரீன்லாந்து தீவை அமெரிக்கா வாங்க வேண்டும் என்று டிரம்ப் கூறியிருந்தார்.
பனிப்போர் கால கட்டத்தில் இருந்தே கிரீன்லாந்து மிகவும் முக்கியமான இடமாக பார்க்கப்படுகிறது. 1946 ஆம் ஆண்டில் அப்போதைய அமெரிக்க அதிபர் ஹாரி ட்ருமன், கிரீன்லாந்து தீவை 100 மில்லியன் டாலர் மதிப்புக்கு தங்கம் கொடுத்து வாங்க விருப்பம் காட்டினார். எனினும், டென்மார்க் இதை நிராகரித்தது. அமெரிக்கா இது போல தீவுகளை இதற்கு முன்பாக பலமுறை வாங்கியுள்ளது. அலஸ்கா, லூயிசியானா, யுஎஸ். விர்ஜின் ஆகிய தீவுகளை அமெரிக்கா விலை கொடுத்து வாங்கியுள்ளது.
ஆர்க்டிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்களுக்கிடையில் அமைந்துள்ள இந்த தீவு அமெரிக்காவின் பாதுகாப்புக்கும் மிகவும் முக்கியத்துவம் வாயந்ததாக உள்ளது. இதனால் கிரீன்லாந்து மீது அமெரிக்கா நீண்ட காலமாகவே ஒரு கண் வைத்துள்ளது. அமெரிக்காவின் பாதுகாப்பு முக்கியத்துவத்தையும் கருத்தில் கொண்டால் கிரீன்லாந்தின் மதிப்பு தற்போது மதிப்பிட்டதை விட பலமடங்கு அதிகரிக்கும் என்கிறார் டேவிட் பார்கர்.
கிரீன்லாந்து போன்ற ஒரு நாட்டிற்கு விலையை மதிப்பிடுவது கொஞ்சம் சிக்கலானது. ஏனெனில் அந்த நாட்டின் ஜிடிபி, பொருளாதார செயல்பாடு ஆகியவற்றையும் கவனத்தில் எடுக்க வேண்டும். கிரீன்லாந்தின் ஜிடிபி 3.236 பில்லியன் டாலராக உள்ளது. உண்மையான மதிப்பு என்பது வரும்கால வளர்ச்சி மற்றும் கனிமவளங்கள், எண்ணெய் மதிப்பு ஆகியவற்றையும் உள்ளடக்கியது.
பனாமா கால்வாய் போன்ற தேசிய சொத்துக்களை வாங்குவது எளிது. ஆனால், ஒரு நிலத்தையோ, பிராந்தியத்தை வாங்குவது என்பது அரிதானது. தேசிய பெருமை, ஜனநாயகம், சர்வதேச விதிகள் ஆகியவை காரணமாக இப்படி ஒரு தீவையே வாங்குவது என்பது கிட்டத்தட்ட சாத்தியம் இல்லாத ஒன்று. கிரீன்லாந்திற்கு விலை கூட இருக்கலாம். ஆனால் அதை வாங்குவது என்பது எளிது அல்ல" என்கிறார் பார்கர்.
-
அமீரகத்தில் குண்டு விழுந்தால் அமெரிக்கா அலறுவது ஏன்.. ஈரான் கையில் எடுத்துள்ள பகீர் திட்டம்! -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
இதை வச்சு தான் சீன் போட்டீங்களா? எப்15 போர் விமானத்தை குருவி போல் சுட்ட ஈரான்? அமெரிக்காவுக்கு ஆப்பு -
டிரம்புக்கு மூக்குடைப்பு. ஈரானை தாக்க தயாரான. அமெரிக்கா போர் விமானங்களை விரட்டியடித்த இலங்கை! -
போச்சு.. ஈரானின் ஈரலை அறுத்த அமெரிக்கா! நடன்ஸ் அணுமையம் மீது இஸ்ரேல் அட்டாக்! நெருங்கும் கிளைமேக்ஸ்? -
Hormuz: ஹார்முஸ் ஜலசந்தி திறக்குமா? திறக்காதா? 48 மணி நேரம் கெடு விதித்த டிரம்ப்.. ஈரான் அளித்த ரிப்ளை -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
எல்லா பிரச்சினைக்கும் டிரம்ப் தான் காரணம்.. சரியா திட்டமிடல.. சிஐஏவின் ex தலைவர் காட்டம் -
வல்லரசின் அஸ்தமனம்! அமெரிக்காவின் 20 ஆண்டு உழைப்பை நொறுக்கிய ஈரான்! ஈராக்கில் இருந்து US வெளியேறியது -
3ம் உலகப்போர் வாசலில் நிற்கும் உலகம்? ஈரானை வீழ்த்த அணு குண்டை கையில் எடுக்கும் இஸ்ரேல், அமெரிக்கா? -
ஹார்முஸ் ஜலசந்திக்கு பாதுகாப்பு அளிக்க தயார்.. ஒன்று கூடிய 20 நாடுகள்! ஈரானுக்கு எகிறும் பிரஷர் -
முரண்டு பிடிக்கும் டிரம்ப்.. எதிர்பாராத நேரத்தில் அமெரிக்காவுக்கு ரஷ்யா அனுப்பிய டீல்? என்ன மேட்டர்












Click it and Unblock the Notifications