மீண்டும் போர்? மொத்த ஈரானும் நாளை வெடித்து சிதறும்.. குண்டு வீச தயாரான டிரம்ப்.. அமெரிக்கா வார்னிங்
வாஷிங்டன்: ஈரானுடனான 2 வார காலத்துக்கான போர் நிறுத்தம் நாளை மாலைக்குள் முடிவடைகிறது. இந்நிலையில் தான் நாளை மாலைக்குள் ஈரான் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் ஈரானின் பெரும்பாலான பகுதிகளில் குண்டுகள் வெடிக்க தொடங்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் வார்னிங் விடுத்துள்ளார்.

ஈரான் - அமெரிக்கா இடையேயான போர் தற்காலிகமாக 2 வாரம் காலம் நிறுத்தப்பட்டது. இந்த காலக்கட்டம் என்பது ஈரான் - அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தைக்கான காலமாக இருந்தது.
அதன்படி ஈரானும், அமெரிக்காவும் பாகிஸ்தானில் முதற்கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தியது. அதில் உடன்பாடு எட்டப்படவில்லை.
2ம் கட்ட பேச்சுவார்த்தை
இதையடுத்து பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்து 2வது கட்ட பேச்சுவார்த்தைக்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அமெரிக்க குழு பாகிஸ்தான் புறப்பட்டுள்ளது. அமெரிக்காவின் துணை அதிபர் ஜேடி வான்ஸ் தலைமையில் மத்திய கிழக்கு நாடுகளுக்கான சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்கோஃப் மற்றும் ஆலோசகர் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் உட்பட ஒரு உயர்மட்ட அமெரிக்க தூதுக்குழு பாகிஸ்தானுக்கு கிளம்பி உள்ளது.
பேச்சுவார்த்தைக்கும் மறுக்கும் ஈரான்
ஆனால் ஈரான் பேச்சுவார்த்தைக்கு செல்ல மறுக்கிறது. இதுதான் டிரம்பை கோபப்படுத்தி உள்ளது. இதற்கிடையே தான் 2 வார காலத்துக்கான போர் நிறுத்தம் நாளை மாலையுடன் முடிவுக்கு வர உள்ளது.
இப்படியான சூழலில் தான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திடீரென்று ஈரானுக்கு கடும் வார்னிங் விடுத்துள்ளார். இதுதொடர்பாக பிபிஎஸ் செய்தி நிறுவனத்துக்கு டொனால்ட் டிரம்ப் பேட்டியளித்துள்ளார்.
டிரம்ப் பகீர் வார்னிங்
''போர்நிறுத்தக் காலம் முடிந்தால் என்ன நடக்கும்?'' என்று டொனால்ட் டிரம்பிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு டிரம்ப், ''பெரும்பாலான இடங்களில் குண்டுகள் வெடிக்க தொடங்கும்'' என்று கூறியுள்ளார். இதன்மூலம் ஈரான் நாளை மாலைக்குள் ஒப்பந்தம் செய்யாவிட்டால் ஈரானில் பல இடங்களில் குண்டுகள் வெடிக்கும் என்று டிரம்ப் வார்னிங் செய்துள்ளார்.
அணுஆயுதங்கள் இருக்க கூடாது
இந்த சமயத்தில் ஈரான் பேச்சுவார்த்தை வருமா? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு டிரம்ப், ''எனக்குத் தெரியாது. ஆனால் , அவர்கள் அங்கே (பாகிஸ்தான்) வர வேண்டும். நாங்களும் அங்கே வர ஒப்புக்கொண்டோம். இது முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்டது தான். அவர்கள் (ஈரான்) வருகிறார்களா? இல்லையா? என்று பார்ப்போம்.
அவர்கள் வரவில்லை என்றாலும் பரவாயில்லை. ஈரானிடம் அணுஆயுதங்கள் இருக்க கூடாது. இது தான் எங்களின் எளிதான கோரிக்கை. இப்போது பேச்சுவார்த்தைக்கு செல்லும் குழு எனது டீம்'' என்றார். டிரம்பின் இந்த மிரட்டலால் நாளை முதல் மீணடும் ஈரான் - அமெரிக்கா இடையே யுத்தம் தொடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
முற்றும் மோதல்
ஏற்கனவே ஹார்முஸ் ஜலசந்தி விஷயத்தில் அமெரிக்கா - ஈரான் இடையே கடும் மோதல் உள்ளது. 2 நாட்களுக்கு முன்பு ஹார்முஸ் ஜலசந்தியை திறந்த ஈரான் மீண்டும் மூடியது. ஹார்முஸ் ஜலசந்தியின் அருகே அமெரிக்காவின் நவீன விமானம் தாங்கி போர்க்கப்பல்களில் போர் விமானங்களுடன், வீரர்கள் உள்ளனர். இவர்களை அங்கிருந்து நகர்த்த வேண்டும் எனறு ஈரான் கூறியது. ஆனால் டிரம்ப் அதனை ஏற்கவில்லை. இந்த விஷயத்தில் ஏற்கனவே இருநாடுகள் இடையே மோதல் நடந்து வரும் நிலையில் தான் தற்போது ஈரான் 2ம் கட்ட பேச்சுவார்த்தையில் அமெரிக்காவுடன் டீலை முடிக்க வேண்டும். இல்லாவிட்டால் ஈரான் மீது குண்டுகள் வீசப்படும் என்று டிரம்ப் மிரட்டி உள்ளது. இது புதிய பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
16 மாதமாச்சே.. மோடியை பார்த்ததும் டொனால்ட் டிரம்ப் கொடுத்த ரியாக்சன்! ஜி7 மாநாட்டில் சுவாரசியம் -
லீக்கான அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம்.. அட இதெல்லாம் இருக்கா.. ஈரானுக்கு இனி ராஜவாழ்க்கை! -
14 பாயின்ட்.. மொத்த போரும் முடிவுக்கு வந்தது.. கதவை திறங்க, கப்பல் கிளம்பட்டும்! -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
போர் முடிந்தது.. சுவிட்ச் போட்டது போல் பெட்ரோல் விலை நாளைக்கே குறையுமா..? வாய்ப்பில்ல ராஜா, ஏன்? -
பஞ்சாயத்து ஓவர்.. அமெரிக்கா-ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம்! டிரம்ப் சொன்ன குட் நியூஸ் -
நான் வந்துட்டேன்னு சொல்லு.. தலைநிமிர்ந்த தங்கம்! ஒரே அறிவிப்பால் திடுக்குனு உயர்ந்த விலை! என்னாச்சு? -
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
டிரம்ப்-ன் 80வது பிறந்தநாள்.. சண்டையில் துவங்கி சண்டையில் முடிந்தது.. எப்படி? -
அடுத்த 60 நாட்கள் ரொம்ப முக்கியம்.. அமெரிக்கா ஈரான் போரில் மாற்றம்! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
தங்கம் விலை 3 நாளில் 300 டாலர் உயர்வு.. அய்யய்யோ..! ஷாக் கொடுத்த Gold Price.. இனி தினமும் அதிரடி தான்! -
இஸ்ரேலை கழற்றிவிட நேரம் வந்தாச்சு.. டிரம்ப் எடுக்கப்போகும் முக்கிய முடிவு.. நெதன்யாகு ஷாக்!












Click it and Unblock the Notifications