நாயுடன் விளையாடிய ஜோ பிடனுக்கு காலில் பாதிப்பு- நலம்பெற டொனால்ட் டிரம்ப் வாழ்த்து
வாஷிங்டன்: அமெரிக்கா அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பிடன் நாயுடன் விளையாடிக் கொண்டிருந்த போது காலில் சுளுக்கு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனைக்கு சென்று திரும்பினார் ஜோபிடன். அவர் முழுமையாக குணமடைய அதிபர் டொனால்ட் டிரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் (ஜோ பைடன்) வெற்றி பெற்றார். ஆனால் அவரது வெற்றியை ஏற்க மறுத்து மல்லுக்கட்டுகிறார் பதவியில் இருக்கும் அதிபர் டொனால்ட் டிரம்ப்.

மேலும் ஏராளமான தேர்தல் தொடர்பான வழக்குகளும் ஜோ பிடனின் வெற்றிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை தள்ளுபடி செய்யப்பட்டு டிரம்ப்க்கு பின்னடைவை தந்தது.
Get well soon! https://t.co/B0seiO84ld
— Donald J. Trump (@realDonaldTrump) November 30, 2020
இதனால் வேறுவழியே இல்லாமல் அதிகார மாற்றத்துக்கு டிரம்ப் ஒப்புதல் தெரிவித்துவிட்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் ஜோ பிடன் வார இறுதிநாட்களில் தமது வளர்ப்பு நாயுடன் விளையாடிக் கொண்டிருந்த போது காலில் சுளுக்கு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு சென்று திரும்பினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த வீடியோவை தமது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருக்கும் டொனால்ட் டிரம்ப், ஜோ பிடன் விரைவில் குணமடைய வாழ்த்துகள் எனவும் தெரிவித்துள்ளார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications