இந்தியாவை சீண்டிய டிரம்ப்.. போதைப்பொருள் நாடு பட்டியலில் சேர்த்த அமெரிக்கா! பாக், சீனாவுக்கு இடம்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: போதைப்பொருட்கள் கடத்துவது மற்றும் போதைப்பொருள் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியில் பாகிஸ்தான், சீனாவுடன் இந்தியாவை சேர்த்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். இந்த பட்டியலில் மொத்தம் 23 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இதன்மூலம் மீண்டும் டிரம்ப் நம்நாட்டை சீண்டுகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரிகளை விதித்துள்ளார். இதனால் இருநாடுகள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களாக டிரம்ப் நம் நாட்டின் மீது சாப்ட் கார்னரை காட்ட தொடங்கினார்.

donald trump drug india

பிரதமர் மோடியை புகழ்ந்ததோடு, நேற்று முன்தினம் பிரதமர் மோடிக்கு போன் செய்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். மேலும் மோடியை நண்பன் என்றும் அழைத்தார்.

அதுமட்டுமின்றி நீண்ட இழுபறிக்கு பிறகு மீண்டும் இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக பேச்சுவார்த்தை தொடங்கியது. நேற்று முன்தினம் அமெரிக்க பிரதிநிதிகள் டெல்லி வந்து மத்திய வர்த்தக துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் இருநாடுகள் இடையேயான உறவு மேம்படும் என்ற தகவல் வெளியானது.

இதற்கிடையே தான் தற்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போதைப்பொருள் கடத்தல் மற்றும் போதைப்பொருள் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவை சேர்த்து திமிரை காட்டி உள்ளார். இந்த பட்டியிலில் பாகிஸ்தான், சீனாவுடன் இந்தியா சேர்க்கப்பட்டுள்ளது. மொத்தம் 23 நாடுகள் இந்த பட்டியலில் உள்ளது.

அதன்படி பாகிஸ்தான், சீனா, இந்தியா, பஹாமாஸ், பெலிஸ், பொலிவியா, பர்மா, கொலம்பியா, கோஸ்டாரிகா, டொமினிகன் குடியரசு, ஈக்வடார், எல் சால்வடார், குவாத்தமாலா, ஹைட்டி, ஹோண்டுராஸ், ஜமைக்கா, லாவோஸ், மெக்சிகோ, நிகரகுவா, பனாமா, பெரு மற்றும் வெனிசுலா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் பெயர்கள் உள்ளன.

அமெரிக்காவின் நாடாளுமன்றத்தில் (காங்கிரஸ்) இதுதொடர்பான தாக்கல் செய்யப்பட்ட அதிபர் தீர்மானத்தில் இந்த நாடுகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவில் சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்தை முறியடிக்கும் வகையிலான இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளதோடு, அத்தகைய வர்த்தகத்தை முறியடிப்பதாக தீர்மானத்தில் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+