"கோல்டன் விசா.." டிரம்ப் சொன்ன மேட்டர்! அப்போ கிரீன் கார்டு முறை நிறுத்தம்? இந்தியர்களுக்கு சிக்கல்?
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் இப்போது புதிதாக கோல்டன் கார்டு விசா முறையை அறிவித்துள்ளார். இதன் மூலம் 5 மில்லியன் டாலர் அதாவது ரூ.43 கோடி கொடுத்தால் கோல்டன் விசா கிடைக்கும். இதற்கிடையே அதிபர் டிரம்ப் முன்மொழிந்துள்ள கோல்டன் விசா தொடர்பாகக் கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
அமெரிக்க அதிபரான டிரம்ப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். நேற்றைய தினம் அதிபர் டிரம்ப் புதிதாக கோல்டன் கார்டு விசா முறையை அறிமுகம் செய்துள்ளார்.

இதன் மூலம் 5 மில்லியன் டாலர் கொடுத்தால் அமெரிக்காவின் கோல்டன் கார்டு விசா கிடைக்கும். இதற்கிடையே இந்த கோல்டன் கார்டு விசா குறித்து டிரம்ப் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
கோல்டன் கார்டு விசா
அமெரிக்காவில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய அதிபர் டிரம்ப், 'கோல்ட் கார்டு' விசா மூலம் என்ன நடக்கும் என்பது குறித்து விரிவாக விளக்கிப் பேசினார். அவர் மேலும் பேசுகையில், "நம்பர் ஒன் மாணவரை வேலைக்கு எடுக்க விரும்பும் நிறுவனங்களுக்கு இது ஏற்றதாக இருக்கும். இந்தியா, சீனா, ஜப்பான் எனப் பல நாடுகளில் இருந்தும் நமது நாட்டிற்குப் படிக்க வருகிறார்கள். அவர்கள் ஹார்வர்டு, வார்டன் ஸ்கூல் ஆஃப் ஃபைனான்ஸ், யேல் பல்கலைக்கழகங்களுக்குப் படிக்கச் செல்கிறார்கள்.
அவர்கள் கல்லூரியில் முதல் மாணவராகத் தேர்வாகிறார்கள். இதனால் அவர்களை வேலைக்கு அமர்த்த பல நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன. ஆனால், அந்த நபர் கல்லூரி படிப்பிற்கு பிறகு நாட்டில் இருக்க முடியுமா இல்லையா என்பது தெரிவதில்லை. இதனால், அவர்களுக்கு வழங்கப்படும் வேலைவாய்ப்பு ஆஃபர் ரத்து செய்யப்படுகிறது.. அந்த டாப் மாணவரை அமெரிக்காவிலேயே தங்க வைக்க நான் விரும்புகிறேன். அதற்கு தான் நான் இந்த திட்டத்தை முன்மொழிந்துள்ளேன்.
டிரம்ப் சொல்வது என்ன
அமெரிக்க நிறுவனங்களுக்கு 'கோல்ட் கார்டு' என்பது விசா மட்டுமில்லை.. அது ஒரு ஆட்சேர்ப்பு கருவி. விசா தொடர்பான சிக்கல்கள் பற்றிக் கவலைப்படாமல், தகுதி வாய்ந்த ஊழியர்களை தங்கள் நிறுவனத்தில் பணியமர்த்தும் ஒரு வாய்ப்பை இந்த கோல்டன் விசா வழங்குகிறது.. இந்த நிறுவனங்கள் தேவையான அளவுக்கு கோல்டன் விசா வாங்கலாம்.. அதை ஆட்சேர்ப்பிற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்" என்றார்.
இந்த கோல்டன் விசா திட்டம் டிரம்பின் பொருளாதார கொள்கைகளுடன் ஒத்துப்போகிறது. 'கோல்ட் கார்டு' திட்டத்தில் பங்குபெறும் நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியர்களை எளிதாக வேலைக்கு அமர்த்துவது மட்டுமின்றி, நாட்டின் பொருளாதாரத்திற்கும் பங்களிப்பார்கள். ஒவ்வொரு விசாவிற்கும் $5 மில்லியன் (ரூ.43 கோடி) கட்டணம் செலுத்த வேண்டும். அந்த தொகையில் குறிப்பிட்ட ஒரு பகுதி தேசிய கடனை அடைக்கப் பயன்படுத்தப்படுமாம்.
அமெரிக்காவின் கடனை அடைக்கப் பயன்படும்
அமெரிக்க நிறுவனங்கள் நிச்சயம் இந்த கோல்டன் கார்டு விசா திட்டத்தைப் பயன்படுத்தும் என்றும் இதன் மூலம் நாட்டின் கடன் அடைக்கப்படும் என்றும் டிரம்ப் குறிப்பிட்டார். மேலும், அமெரிக்காவில் தொடர்ந்து இருக்கும் நிறுவனங்களுக்கு மற்றொரு ஊக்குவிப்பு திட்டத்தையும் டிரம்ப் அறிவித்துள்ளார். அதாவது அமெரிக்காவிற்கு வெளியே இருந்து செயல்படும் நிறுவனங்களுக்கு வரி விதிக்கப்படும் அதே நேரம், அமெரிக்காவுக்குள் இருந்து செயல்படும் நிறுவனங்களுக்கு வரி விலக்கு அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "நீங்கள் அமெரிக்காவிலேயே இருந்து செயல்பட்டால் வரி எதுவும் உங்களுக்கு இல்லை.. அதேநேரம் வெளிநாட்டிற்குப் போக விரும்பினால் வரி எதிர்கொள்ள நேரிடும்.. மக்களுக்கு வேலைவாய்ப்பு தர இதுபோன்ற திட்டங்கள் தேவைப்படும்" என்றார்.
கிரீன் கார்டு vs கோல்டன் கார்டு
வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் இப்போது அமெரிக்காவில் நிரந்தரமாகத் தங்க கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. அதேநேரம் இந்த கோல்டன் கார்டு விசா முறை அறிமுகம் செய்தவுடன் கிரீன் கார்டு முறையை படிப்படியாக முடிவுக்குக் கொண்டு வரவும் அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இருப்பினும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை.
-
ஈரானுக்கு மேலும் 10 நாட்கள் அவகாசம்.. வழிக்கு வந்த டிரம்ப்! போருக்கு குட்டி பிரேக்! -
போர் ஒருபக்கம் இருக்கட்டும்.. 10 கப்பல்களில் எண்ணெய் பரிசாக கொடுத்த ஈரான்! டிரம்ப் பெருமிதம் -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
Iran us war: போரில் ஜெயிச்சுட்டோம்.. அணு ஆயுதம் வைத்துக்கொள்ள மாட்டோம் என ஈரான் சம்மதம்.. டிரம்ப் பேச்சு! -
எங்க நிபந்தனையை ஏற்றால்தான் போர் நிறுத்தம்.. அமெரிக்கா திட்டத்தை நிராகரித்த ஈரான்! தீவிரமாகும் போர் -
அமெரிக்காவின் அஸ்திவாரமே ஆடிடுமே.. "போரை முடிவுக்கு கொண்டு வர ரெடி.." ஈரான் போட்ட 7 கண்டிஷன்கள் -
ஈரானை காலி பண்ணாம விடாதீங்க.. டிரம்புக்கு நெருக்கடி கொடுக்கும் சவுதி பட்டத்து இளவரசர்? ஏன் தெரியுமா? -
வெறும் 20 நிமிடங்களில் ரூ.840 கோடி லாபம்.. டிரம்ப்பால் போரை வைத்து பணம் பார்க்கும் மர்ம டிரேடர்! -
"நீங்க சொல்வதை எல்லாம் கேட்க முடியாது.." கண்டிஷன் போட்ட அமெரிக்கா.. திட்டவட்டமாக நிராகரித்த ஈரான்! -
லாட் டவுன் வந்துருச்சு..கொஞ்சம் கொஞ்சமாய் முடங்கும் உலக நாடுகள்! பெட்ரோல், டீசலால் ஒர்க் ஃப்ரம் ஹோம் -
ட்ரம்ப் மூக்கை உடைத்த ஈரான்.. 15 கண்டிஷன்களை தூக்கி எரிந்த அலியாபாடி! வெறி கொண்டு அடிக்கும் இஸ்ரேல்! -
ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் முடிவு என்ன? டிரம்பின் மருமகன் பயணம் ஏன் முக்கியமானது?











Click it and Unblock the Notifications