அழிவுக்கு ரெடியா இருங்க.. நம்மகிட்ட எந்த பிளானும் இல்லை! கைவிரித்த நாசா.. அதிர்ச்சியில் உலகம்
வாஷிங்டன்: அரிசோனாவில் நடைபெற்று வரும் அறிவியல் மாநாட்டில் பங்கேற்றிருந்த, நாசா விஞ்ஞானியான டாக்டர் கெல்லி ஃபாஸ்ட், மொத்த உலகத்திற்கும் எச்சரிக்கையை விடுத்திருக்கிறார். அவரது பேச்சு அறிவியலாளர்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பினர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
அவர் விண்கல் குறித்துதான் பேசியிருக்கிறார். விண்கல் ரொம்ப முக்கியமான மேட்டர். இதற்கு முன்னர் உலகம் 5 பேரழிவுகளை சந்தித்திருக்கிறது. இதில் கடைசியாக நடந்த அழிவுக்கு காரணம் இந்த விண்கல்தான். எனவேதான் விஞ்ஞானிகள் அச்சமடைந்திருக்கின்றனர்.

விஞ்ஞானி பேசியது என்ன?
"விண்வெளியில் சுமார் 140மீ விட்டம் கொண்ட விண்கற்கள் 25,000 எண்ணிக்கையில் இருக்கின்றன. இந்த சைஸ் கொண்ட விண்கற்கள் ஒவ்வொன்றும் ஒரு நகரத்தையே காலி செய்யும் அளவுக்கு சக்தி வாய்ந்தது. எனவே இந்த விண்கற்களுக்கு நாங்கள் சிட்டி கில்லர்ஸ் என பெயரிட்டிருக்கிறோம். பிரச்சனை என்னவெனில் இதுவரை நாங்கள் 10,000 விண்கற்களை மட்டுமே கண்டுபிடித்திருக்கிறோம். இது மொத்த அளவில் 40%. மீதமுள்ள விண்கற்களை கண்டுபிடிப்பதில் சிக்கல் இருக்கிறது.
கண்டுபிடிப்பதில் சிக்கல்
கண்டுபிடிக்கப்படாத விண்கற்கள் எப்போது? எங்கிருந்து? பூமியை தாக்கும் என தெரியாது. இதுவே எங்களை போன்ற விஞ்ஞானிகளின் கவலையாக இருக்கிறது. பொதுவான வானத்தில் உள்ள பொருட்களை பார்க்க வேண்டும் எனில் அது வெளிச்சத்தை வெளியிட வேண்டும். அல்லது வெளிச்சத்தை பிரதிபலிக்க வேண்டும். ஆனால், இந்த விண்கற்கள் இருட்டில் இருக்கின்றன. எனவேதான் இதை கண்டுபிடிப்பது சிக்கலாக இருக்கிறது.
விண்கல் மோதல்
போதாத குறைக்கு நம் பூமியை போலவே இவைகளும் சூரியனை நம்முடன் சேர்ந்து ரவுண்டு அடிக்கிறது. இப்படி இருந்தால் எப்படி கண்டுபிடிக்க முடியும்? கண்ணுக்கு தெரியா விண்கற்கள் எவ்வளவு ஆபத்தானவை என்பதற்கு 1908ம் ஆண்டு நடந்த சம்பவம் ஓர் உதாரணம். 100 மீ-க்கும் குறைவான விட்டம் கொண்ட விண்கல் மோதியதில் சைபீரியாவில் 2,000 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட காடுகள் மொத்தமாக அழிந்தது. இந்த விண்கல் மோதலை நம்மால் கணிக்க முடியவில்லை.
நாசாவால் முடியாது
பலருக்கு நாசாவின் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழலாம். நாசா தான் ஏற்கெனவே 'டார்ட்' எனும் மிஷன் மூலம், விண்கற்களின் பாதையை மாற்றியிருக்கிறதே! அதேபோல இப்போது செய்ய முடியாதா? என்று கேட்க தோன்றலாம். பிரச்சனை என்னவெனில், விண்கல் மோதல் குறித்த தகவல்கள் நமக்கு சில ஆண்டுகளுக்கு முன்னரே கிடைத்தால்தான் இப்படி பாதையை மாற்ற முடியும்.
தப்பிக்க முடியாது
ஆனால் நம்முடைய கண்களுக்குதான் பாதிக்கும் மேற்பட்ட விண்கற்கள் தெரியவே இல்லையே! அப்புறம் எப்படி அது பூமியை எப்போது தாக்கும் என்று கணிக்க முடியும்? பாதையை மாற்ற முடியும்? எனவே விண்கற்கள் பூமியை நோக்கி வருகிறது எனில், அதிலிருந்து தப்பிக்க நமக்கு எந்த வாய்ப்பும் இல்லை. அதை எதிர்கொள்ள நம்மிடம் எந்த உடனடி திட்டமும் இல்லை.
பிளான் என்ன?
இருப்பினும் இந்த கருப்பு விண்கற்களை கண்டுபிடிக்க எதிர்காலத்தில் அகச்சிவப்பு டெக்னாலஜியுடன் கூறிய தொலை நோக்கிகள் உருவாக்கப்படும். இது விண்கற்களின் வெப்பத்தை வைத்து அது எங்கு இருக்கிறது என்பதை கண்டுபிடிக்கும். அடுத்த சில ஆண்டுகளில் இந்த தொலைநோக்கி ரெடியாகிவிடும். அப்போதும் கூட இதை வைத்து 90% விண்கற்களை மட்டுமே கண்டுபிடிக்க முடியும். 10% விண்கற்களை கண்டறிய முடியாது" என கூறியுள்ளார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications