பொருளாதார பேரழிவுக்கு ரெடியா மக்களே! 2026 உங்களுக்காக வைத்திருப்பது இதுதான்! ஷாக் தகவல்
வாஷிங்டன்: கடந்த 2008ம் ஆண்டு உலக பொருளாதாரம் ஒரேயடியாக முடங்கிப்போனது. அமெரிக்காவின் பொருளாதாரம் முன்னெப்போதும் இல்லாத வீழ்ச்சியை சந்திருந்தது. அதேபோன்ற பேரழிவை உலகம் மீண்டும் சந்திக்கும் என்று சர்வதேச பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
பொருளாதார வல்லுநர் பீட்டர் ஷிஃப் இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கிறார். தனது ட்விட்டர் பதிவில், "டாலரின் ஆதிக்கம் முடிவுக்கு வருகிறது. தங்கம் முதன்மையான மத்திய வங்கி கையிருப்புச் சொத்தாக அரியணையில் அமரும். அமெரிக்க டாலர் பிற நாணயங்களுக்கு எதிராகச் சரிவடையும். அமெரிக்காவின் உலகளாவிய எளிதான ஆதாயங்கள் முடிவுக்கு வரும். ஒரு வரலாற்றுப் பொருளாதாரச் சரிவுக்குத் தயாராகுங்கள்" என்று கூறியுள்ளார்.

இவரது கூற்றுக்கு ஆதாரம் இருக்கிறது. இந்த ஆண்டில் சர்வதேச நிதி துறையில் வரலாற்று சிறப்புமிக்க மாற்றங்கள் நடந்திருக்கிறது. அதாவது கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் உலக நாடுகளின் மத்திய வங்கிகள், அமெரிக்க அரசு பத்திரங்களை விட அதிக அளவில், தங்கத்தை சேமித்து வைக்க தொடங்கியுள்ளனர்.
இந்த ஆண்டு அக்டோபர் மாதம் நிலவரப்படி, மத்திய வங்கிகளிலும் சுமார் 4.5 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு தங்கம் உள்ளது. இந்த ஆண்டு ஜூலை மாதம் டாலருக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது பெரிய இருப்பு சொத்தாக இருந்த யூரோவை தங்கம் பின்னுக்கு தள்ளி, அந்த இடத்தை கைப்பற்றியுள்ளது. டாலர் பலவீனமடைவதால் நாளுக்கு நாள் தங்கத்தின் மதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது.
அமெரிக்காவின் தேசிய கடன், முன் எப்போதும் இல்லாத அளவை எட்டி இருக்கிறது. இது போதாது என்று, வரவு செலவு திட்டத்தில் பற்றாக்குறை அதிகரித்திருக்கிறது. இதெல்லாம் டாலர் மதிப்பு குறைய மிக முக்கியமான காரணமாகும்.
அரசியல் மற்றும் கொள்கை மாற்றங்களை பொருத்தவரை, நிர்வாகத்தின் வரி கொள்கைகள் மற்றும் அமெரிக்க மத்திய வங்கியின் நடவடிக்கையில் அமெரிக்க அரசின் தலையீடு போன்ற காரணங்களால் முதலீட்டாளர்கள் டாலர் மீதான நம்பிக்கையை இழந்திருக்கிறார்கள். எனவே தங்கத்தை நோக்கி நகர்ந்து இருக்கிறார்கள்.
பாதுகாப்பான நாணயமாக கருதப்படும் ஸ்விஸ் பிராங்க்-க்கு எதிராக, டாலர் கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவை சந்தித்து இருக்கிறது. உலக நாடுகளும் டாலரை தவிர்த்து தங்கள் சொந்த நாணயங்களை பரிவர்த்தனையை தீவிரப்படுத்தி உள்ளன.
இதெல்லாம் சேர்ந்து தங்கம் மற்றும் வெள்ளியின் விலையை உயர்த்தியிருக்கிறது. ஆனால், இது நல்ல அறிகுறி கிடையாது. அமெரிக்க பொருளாதாரம் பெரும் ஆபத்தில் இருப்பதற்கான எச்சரிக்கை மணி. அமெரிக்க பொருளாதாரம் விழுந்தால் அதை நம்பி இருக்கும் உலக நாடுகளின் பொருளாதாரமும் சரிவு எதிர்கொள்ளும்.
சுருக்கமாக சொன்னால், உணவுப் பொருட்கள் மற்றும் இதர அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயரும். வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கும். இதனால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் பெரும் நெருக்கடியை எதிர்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்காவில் ஹைதராபாத் இளைஞர் ஜாலி சுற்றுலா.. 3 பேரை காப்பாற்றியவருக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications