விந்தணுவை ஜப்பானுக்கு அனுப்பிய எலான் மஸ்க்.. 15வது குழந்தை பெற்றெடுத்த ஜப்பான் பிரபலம்!
வாஷிங்டன்: டெஸ்லா நிறுவனத்தின் தலைவரும் உலகின் மிகப் பெரிய பணக்காரருமான எலான் மஸ்க் இப்போது ஜப்பான் பாப் பிரபலத்துடன் இணைந்து குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். ஏற்கனவே எலான் மஸ்கிற்கு 14 குழந்தைகள் உள்ள நிலையில், இப்போது அவர் ஜப்பான் பிரபலத்தோடு குழந்தையைப் பெற்றெடுத்து இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
உலகின் மிகப் பெரிய பணக்காரராக இருப்பவர் எலான் மஸ்க். இவர் டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ், எக்ஸ், நியூரோலிங் என ஏகப்பட்ட நிறுவனங்களை நடத்தி வருகிறார். இது மட்டுமின்றி எப்போதும் இவரைச் சுற்றி சர்ச்சைகளும் இருந்து கொண்டே தான் இருக்கும். இவர் சமீபத்தில் தான் டிரம்ப் அமைச்சரவையில் இருந்தும் விலகியிருந்தார்.

மீண்டும் தந்தையான எலான் மஸ்க்
இதற்கிடையே இப்போது அவர் மீண்டும் ஜப்பான் நாட்டை சேர்ந்த ஒரு பாப் ஸ்டார் உடன் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு எலான் மஸ்கின் குழந்தையைப் பெற்றெடுத்ததாகச் சொல்லி அமெரிக்காவைச் சேர்ந்த சோஷியல் மீடியா பிரபலம் ஆஷ்லே செயிண்ட் கிளேர் பரபரப்பைக் கிளப்பியிருந்தார். அந்த ஆஷ்லே செயிண்ட் கிளேர் தான் இப்போது ஜப்பான் பிரபலம் ஒருவர் எலான் மஸ்க்கின் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
உலகில் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வரும் சூழலில் அது எலான் மஸ்க்கை கடும் கவலையில் ஆழ்த்தியுள்ளதாம். இதன் காரணமாகவே எலான் மஸ்க் தன்னால் முடிந்த வரை குழந்தைகளைப் பெற்றெடுக்கிறாராம். மேலும், இதற்காக அவர் உலகில் உள்ள எந்தவொரு பெண்ணுக்கும் தனது விந்தணுவைக் கொடுக்க தயாராகவே இருப்பதாகக் குறிப்பிட்டதாக ஆஷ்லே செயிண்ட் கிளேர் தெரிவித்துள்ளார்..
என்ன விஷயம்!
ஜப்பானிய பாப் நட்சத்திரம் ஒருவருடன் ஒரு குழந்தை பெற்றெடுத்தாக எலான் மஸ்கே தன்னிடம் கூறியதாக அவர் தெரிவித்தார். அதேநேரம் அந்த ஜப்பான் பிரபலம் யார்.. எப்போது குழந்தை பிறந்தது என்பது உள்ளிட்ட தகவல்களை அவர் பகிரவில்லை. இது தொடர்பாக செயிண்ட் கிளேர் நியூயார்க் டைம்ஸ் செய்தி நிறுவனத்திடம் மேலும் கூறுகையில், "எலான் மஸ்க் இதை ஒரு தன்னலமற்ற சேவை போலவே எனக்குக் காட்டினார். மக்கள் தொகை குறைந்து வருவதால் மக்கள் அதிகம் குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும் என்பதை எலான் மஸ்க் நம்புகிறார்" என்றார்.
15ஆவது குழந்தை?
கனடா நாட்டின் இசைக் கலைஞர், நியூராலிங் நிர்வாகி ஷிவோன் ஜிலிஸ் உட்பட நான்கு வெவ்வேறு பெண்கள் மூலம் எலான் மஸ்க் இதுவரை குறைந்தது 14 குழந்தைகளைப் பெற்றுள்ளார். அதன்படி பார்த்தால் எலான் மஸ்கின் 15வது குழந்தையாக இது இருக்கும். அதேநேரம் உண்மையில் அவரது குழந்தைகளின் எண்ணிக்கை இதைவிட அதிகமாகவே இருக்கும் என்று கடந்த ஏப்ரல் மாதம் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டிருந்தது.
யார் அந்த பிரபலம்
அப்போதே அவர் ஜப்பான் பிரபலம் ஒருவருக்கு விந்தணு தானம் கொடுக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. இந்தச் சூழலில் தான் செயிண்ட் கிளேரும் அதே கருத்துகளைத் தெரிவித்துள்ளார். செயிண்ட் கிளேரின் இந்த கருத்து இணையத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. மேலும், அந்த ஜப்பான் பிரபலம் யாராக இருக்கும் என்ற விவாதமும் எழுந்துள்ளது. அதேநேரம் எலான் மஸ்க் தரப்பில் இருந்து இந்த செய்தியை உறுதி செய்யவில்லை. அதேபோல இந்த செய்தியை அவர் மறுக்கவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications