பெரிய யூடர்ன்! "தெரியாம பண்ணிட்டோம் சாரிங்க.." ட்விட்டரிடம் இருந்து பரபர மெயில்! தொடரும் குழப்பம்
வாஷிங்டன்: எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியதில் இருந்தே அங்கு குழப்பமான சூழல் நிலவி வரும் நிலையில், இப்போது ட்விட்டர் முக்கிய விவகாரம் ஒன்றில் யூடர்ன் போட்டுள்ளது.
எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பே, வாங்குவதாக அறிவித்தார். இது டெக் நிறுவனங்களுக்கு மத்தியில் மட்டுமின்றி உலகெங்கும் அப்போதே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இடையில் போலி கணக்குகள் தொடர்பான துல்லியமான தகவல் இல்லை என கூறி, அவர் ட்விட்டரை வாங்குவதில் இருந்து பின்வாங்க முயன்றார். இருப்பினும், இதற்கு ட்விட்டர் போர்ட் எதிர்ப்பு தெரிவித்தது,,

எலான் மக்ஸ்
இதையடுத்து வேறு வழியின்றி ட்விட்டர் நிறுவனத்தை அவர் வாங்கினார். மொத்தம் 44 மில்லியன் டாலருக்கு ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கிய நிலையில், முதல் நாளில் இருந்தே அவர் அதிரடி நடவடிக்கைகளை தொடங்கிவிட்டார். முதல் நாளிலேயே பராக் அகர்வால் உள்ளிட்ட டாப் அதிகாரிகளை அவர் வேலையை விட்டு தூக்கினார். இதையடுத்து சில நாட்களிலேயே அவர் ஆட்குறைப்பு நடவடிக்கைளை எடுத்தார்.

ஆட்குறைப்பு
கடந்த புதன்கிழமை அவர் இதற்கான நடவடிக்கைகளை தொடங்கினார். ட்விட்டரில் மொத்தம் 7500 ஊழியர்கள் இருந்த நிலையில், அவர்களில் 50% ஊழியர்களை பணி நீக்கம் செய்ய எலான் மஸ்க் திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது.. அதன்படி கடந்த வெள்ளிக்கிழமை இதற்கான நடவடிக்கை தொடங்கப்பட்டது. பல நூறு ஊழியர்களுக்கு ஒரே நேரத்தில் வேலை நீக்கம் மெயில் சென்றுள்ளது.

யூடர்ன்
குறிப்பாக இந்தியாவில் பெருமளவு ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இந்தச் சூழலில் ட்விட்டர் நிறுவனம் திடீரென யூடர்ன் போட்டு உள்ளது. அதாவது வேலை நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களில் பலரை மீண்டும் பணிக்கு அழைத்து உள்ளது. தவறுதலாக அவர்களுக்கும் வேலை நீக்கம் தொடர்பான மெயில் சென்றுள்ளதாகவும் மீண்டும் வேலைக்கு வரும்படியும் இந்த புதிய மெயிலில் கூறப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மீண்டும் மெயில்
இது குறித்து விவரம் அறிந்த சிலர் கூறுகையில், பணி நீக்கம் செய்யப்பட்டவர்களில் பலர் மீண்டும் வேலைக்கு அழைக்கப்பட்டு உள்ளனர். எலான் மஸ்க் குறிப்பிட்டுள்ள சில வேலைகளை செய்ய எந்தெந்த ஊழியர்கள் தேவை என்பதை கண்டறியும் முன்பே பணிநீக்கம் மெயில் சென்றுவிட்டது. மஸ்க் கூறிய வேலைகளை செய்ய இவர்களின் பங்களிப்பு தேவை என்பதால் இப்போது மீண்டும் பணிக்கு அழைத்து உள்ளனர்" என்று தெரிவித்தனர்.

குழப்பம்
ட்விட்டரில் கடந்த சில நாட்களாகவே குழப்பமான ஒரு சூழலே நிலவி வருகிறது. கடந்த புதன்கிழமை வெறும் ஒற்றை மெயில் சுமார் 3,700 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அவர்களில் லேப்டாப் ஆக்செஸ் முடக்கப்பட்ட நிலையில், ட்விட்டர் அலுவலக்திற்கு வரவும் ஆக்செஸ் முடக்கப்பட்டது. இந்த வேலையிழப்பில் பல கர்ப்பிணி பெண்களும் வேலையிழந்து உள்ளனர். அவர்களுக்கு இன்சூரன்ஸ் கிடைக்குமா என்பது கூட தெளிவாக விளக்கவில்லை.

மன்னிப்பு
இந்த ஆட்குறைப்புக்கு உலகெங்கும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பலரும் தங்கள் ட்விட்டர் கணக்கை க்ளோஸ் செய்யும் முடிவுக்கே வந்துவிட்டனர். இதனிடையே ட்விட்டரை வேகமாக வளர வைக்க தான் எடுத்த முடிவே இந்த ஆட்குறைப்புக்கு காரணமாக அமைந்துள்ளதாக கூறி ட்விட்டர் நிறுவனர் ஜேக் டோர்சி மன்னிப்பு கேட்டிருந்தார். எதிர்ப்பு இருக்கும் போதிலும், தினசரி 4 மில்லியம் டாலரை நிறுவனம் இழப்பதால் ஆட்குறைப்பு கட்டாயம் என்றே மஸ்க் கூறியுள்ளார்.
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications