ஸ்டியரிங் கிடையாது.. ஏறி அமர்ந்தால் மட்டும் போதும்! புதிய 'ரோபோ டாக்ஸி' அறிமுகம் செய்த எலான் மஸ்க்
வாஷிங்டன்: டிரைவருக்கான எந்த வேலையும் இல்லாத புதிய தொழில் நுட்பத்துடன் கூடிய ரோபோ டாக்ஸி என்ற தானியங்கி காரை அறிமுகப்படுத்த உள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். 2027 ஆம் ஆண்டுக்குள் இந்த ரோபோ டாக்ஸி அறிமுகமாகும் என்றும், படுத்துகொண்டோ அல்லது வேறு வேலை பார்த்துக் கொண்டோ கூட உரிமையாளர் இந்த காரில் பயணிக்க முடியும் என எலான் மஸ்க் கூறினார்.
உலக பெரும் பணக்காரர் ஆன எலான் மஸ்க்கின் டெஸ்லா கார் சந்தையில் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில், எலான் மஸ்க் புதிய ரோபோ டாக்சி என்ற செல்ஃப் டிரைவிங் வாகனத்தை அறிமுகம் செய்துள்ளார். வரும் 2027 ஆம் ஆண்டு இந்த ரோபோ டாக்ஸி சந்தைக்கு வரும் என்று எலான் மஸ்க் கூறியுள்ளார்.

இந்த ரோபோ டாக்ஸி முழுவதும் மின்சாரத்தில் இயங்கக் கூடியது என்றும் ஸ்டியரிங் மற்றும் பெடல்கள் என எதுவுமே இருக்காது என்றும் கூறியிருக்கிறார். மனிதர்கள் ஓட்டுவதை விட 10 முதல் 20 சதவிகிதம் வரை கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை இந்த டாக்சி கொண்டதாக இருக்கும் எனத் தெரிவித்து இருக்கும் எலான் மஸ்க், வயர்ல்ஸ் சார்ஜ் செய்யும் வசதியுடன் இது அமலுக்கு வரும் என்றார்.

இந்த ரோபா டாக்ஸி கார்களை பொறுத்தவரை விலையும் மலிவானது என்கிறார் எலான் மஸ்க். அமெரிக்க டாலர் மதிப்பில் 30 ஆயிரம் டாலருக்கு குறைவாகவே இருக்கும் என எலான் மஸ்க் கூறினார். இந்திய மதிப்பில் சொல்வது என்றால் ரூ. 24 லட்சமாக இருக்குமாம். ரோபா டாக்ஸிக்குள் நீங்கள் அமர்ந்து இருந்தால் மட்டும் போதும். நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு பத்திரமாக கொண்டு போய் சேர்த்துவிடும் என்றும் எலான் மஸ்க் கூறினார்.

புதிய ரோபோ டாக்ஸிக்குள் அமர்ந்து கொண்டு ஜாலியாக வேடிக்கை பார்த்துக்கொண்டு செல்லலாம்.. டாக்ஸியை விட்டு இறங்கும் போது, உங்கள் பயண இலக்கை நீங்கள் அடைந்து இருப்பீர்கள் எனவும் எலான் மஸ்க் கூறினார். இந்த ரோபா டாக்ஸியின் கதவுகள் மேல் பக்கமாக திறக்கும் வகையில் இருக்கும் என்றார்.

டெஸ்லாவின் "வீ, ரோபோ" நிகழ்ச்சியில் கலிபோர்னியாவின் பர்பாங்கில் உள்ள வார்னர் பிரதர்ஸ் திரைப்பட அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தான் தனது நிறுவனத்தின் புதிய ரோபோ டாக்ஸி குறித்து பேசினார். இரண்டு பேர் பயணிக்க கூடிய வகையில் இந்த ரோபோ டாக்ஸி sஇருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. வாகன உற்பத்தி துறையில் மிகப்பெரும் புரட்சியை இந்த ரோபோ டாக்ஸி ஏற்படுத்தக் கூடும் என்று கார் உற்பத்தி சந்தை நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications