ஒரு கிரிக்கெட் டீமே வீட்டில் இருக்கும் போல..14வது குழந்தைக்கு தந்தையான எலான் மஸ்க்! அம்மா இவங்கதானா?
வாஷிங்டன்: உலக அளவில் பெரும் தொழிலதிபர்களின் ஒருவரும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் நிறுவனமான எலான் மஸ்கிருக்கு 14 ஆவது குழந்தை பிறந்திருக்கிறது. ஏற்கனவே அவருக்கு 4 மனைவிகள் மூலம் 13 குழந்தைகள் பிறந்திருக்கும் நிலையில், தற்போது நான்காவது மனைவியான ஷிவோன் ஷில்லிஸ் மூலம் மீண்டும் ஆண் குழந்தை பிறந்திருப்பதாக கூறி இருக்கிறார்.
உலகின் பெரும் பணக்காரர்கள் ஒருவரும் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் அதிபருமான எலான் மஸ்க் விண்வெளி ஆராய்ச்சியில் தனது பார்வையைத் திருப்பியுள்ளார்.

இணைய சேவையை வழங்கும் செயற்கைக்கோள்களை செலுத்துவது மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டுகள் ஆராய்ச்சியில் அவர் தொடர்ந்து தனது கவனத்தை செலுத்தி வருகிறார். தற்போது அவரது ஃபால்கன் ராக்கெட் நிலவை நோக்கி பயணித்து வருகிறது.
பலமுறை தோல்வி கண்டாலும் தற்போது மறுபயன்பாட்டு ராக்கெட் சோதனையில் எலான் மஸ்க் வெற்றி பெற்று வருகிறார். அவரது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஸ்டார்லிங்க் நெட்வொர்க் மூலம் இதுவரை நூற்றுக்கணக்கான செயற்கைகோள்களை ஏவியுள்ளது. இன்னும் பல செயற்கைகோள்களையும் விண்ணில் ஏவத் தயாராக உள்ளது. மேலும் அவரது சைபர் ட்ரக் காரும் உலக அளவில் பிரபலமான ஒன்றாக மாறி வருகிறது.
டெக்னாலஜியில் எப்படியோ அதேபோல் தான் ட்விட்டரிலும் எலான் மஸ்க் மிகவும் ஆக்டிவ். உலகம் பிரபலங்கள் முதல் நம்ம ஊர் உள்ளூர் பிரபலங்கள் வரை யார் கேட்டாலும் பதில் அளிக்கக்கூடியவர். இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்புக்கு ஆதரவாக களமிறங்கிய அவர் அவரை வெற்றி பெறவும் செய்தார். தொடர்ந்து அரசு ஊழியர்கள் எண்ணிக்கையை குறைக்க டிஓஜிஇ எனும் புதிய திறனாய்வுத் துறையையும் கொண்டு வந்தார். அதற்கு எலான் மஸ்க் தலைவராக நியமிக்கப்பட்டார்.
தொடர்ந்து எலான் மஸ்க் அமெரிக்கா பொதுத்துறை நிறுவனங்களில் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். இது ஒரு புறம் இருக்க எலானும் அவ்வப்போது சில சர்ச்சைகளிலும் சிக்குவது வழக்கம். குறிப்பாக பெண்கள் விஷயத்தில் அவர் வீக் என கூறப்படுவதும் வழக்கம் தான். அதில் உண்மையும் இருக்கிறது. தொடர்ந்து பல திருமணங்களை எல்லாம் மஸ்க் அரங்கேற்றிருக்கிறா.ர் மேலும் அவருக்கு குழந்தைகளும் அதிகம்.
இதழில் தான் மஸ்க்குக்கு 14வதாக குழந்தை பிறந்திருக்கிறது. கடந்த 2000 ஆம் ஆண்டு கனடாவைச் சேர்ந்த பிரபல எழுத்தாளரான ஜஸ்டின் வில்சனை எலான் மஸ்க் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு பிறந்த முதல் குழந்தை 70 நாட்களில் உயிரிழந்தது. அதற்குப் பிறகு அந்த தம்பதிக்கு 5 குழந்தைகள் பிறந்தன. தொடர்ந்து நடிகை ரிலேவை திருமணம் செய்து கொண்ட நிலையில் அந்த தம்பதிக்கு குழந்தை பிறக்கவில்லை. அதற்குப் பிறகு பிரபல பாடகியான கிரீம்ஸ் திருமணம் செய்து கொண்டதோடு மூன்று குழந்தைகளை பெற்றுக் கொண்டார்.
தொடர்ந்து மூன்று மனைவிகளையும் புரிந்தவர் ஷிவோன் ஷில்லிஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள் பிறந்தது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெண் எழுத்தாளரும் அமெரிக்காவில் பிரபலமானவருமான ஆஷ்லே செயின்ட் கிளேர் என்பவர் தனக்கு குழந்தை பிறந்துள்ளதாகவும் அதற்கு எலான் மஸ்கான் தந்தை என தெரிவித்தார். ஆனால் அதனை எலான் மறுக்கவும் இல்லை. இந்த நிலையில் தான் ஷிவோன் மூலம் எலான் மஸ்க் 14வது குழந்தைக்கு தந்தையாகி இருக்கிறார்.
ஷிவோன் ஷில்லிஸ் வேறு யாரும் அல்ல, எலானின் நிறுவனத்தில் வேலை பார்த்தவர் தான் அவர். 2021 ஆம் ஆண்டு நியூரோலிங் நிறுவனத்தில் பணியாற்றிய ஷிவோன் ஷில்லீஸுடன் முதல் குழந்தையை பெற்றெடுத்தார். தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு இரட்டைக் குழந்தைகள் பிறந்தது. தற்போது 14வது குழந்தை பிறந்திருப்பதாக ஷிவோன் அறிவித்திருக்கிறார். "எங்களுக்கு அழகிய அற்புதமான மகன் ஷெல்டன் லைகர்கஸ் பிறந்திருக்கிறான். இந்த மகிழ்ச்சியான செய்தியை எலானிடம் சொல்லிவிட்டு அவரது அனுமதியோடு உங்களிடம் சொல்கிறேன். எங்களை தங்க மகனை நான் மிகவும் விரும்புகிறேன்" என பதிவிட்டுள்ளார். அவரது பதிவுக்கு ஹார்ட்சின் பதிவிட்டு அன்பை பகிர்ந்து உள்ளார் எலான். இதையடுத்து அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications