செவ்வாய் கிரகத்திற்கு தன் குழந்தைகளை அனுப்புகிறாரா எலான் மஸ்க்?.. இப்படி பதில் சொல்லியிருக்காரே!
வாஷிங்டன்: தொழிலதிபரின் கேள்விக்கு எலான் மஸ்க் அளித்த பதிலை பார்த்தால் செவ்வாய் கிரகத்துக்கு குழந்தைகளை அனுப்புகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
உலகப் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா, நியூரா லிங்க் ஆகிய நிறுவனங்களை வைத்து நடத்தி வருகிறார். இவர் உலக பணக்காரர்களில் முன்னணியில் இருக்கிறார்.
செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை ரெட் டிராகன் விண்கலம் மூலம் அனுப்புவதற்கு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் திட்டமிட்டது. இதற்காக ஆளில்லா விண்கலம் சோதனை நடத்தப்பட்டு கடந்த 2020 ஆம் ஆண்டு அனுப்பப்பட்டது.

44 பில்லியன் டாலர்
எலான் மஸ்க் ட்விட்டர் எனும் சமூகவலைதளத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்க முடிவு செய்து பின்னர் அந்த ஒப்பந்தத்தை அண்மையில் ரத்து செய்தார். இவருக்கு 9 குழந்தைகள் உள்ளனர். இவரது முதல் மனைவி ஜஸ்டின் வில்சன் மூலம் 5 குழந்தைகள் உள்ளனர்.

கனடா பாடகி
இதையடுத்து கனடாவின் பாடகி கிரிமிஸ் மூலம் இவருக்கு இரு குழந்தைகள் உள்ளனர். பின்னர் தனது நியூரா லிங்க் நிறுவனத்தில் பணியாற்றிய ஷிவோன் சிலிஸ் என்பவரை எலான் மஸ்க் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன. எனவே எலான் மஸ்க்கிற்கு 9 குழந்தைகளாகும்.

செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்கள் தேவை
இந்த நிலையில் அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபரான மார்க் கியூபன், எலான் மஸ்கிடம் ஒரு கேள்வியை கேட்டிருந்தார். அதில் வாழ்த்துகள், இன்னும் எத்தனை குழந்தைகளை பெற்றுக் கொள்ள திட்டமிட்டிருக்கிறீர்கள் என கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு எலான் மஸ்க் பதில் அளிக்கையில், செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்கள் தேவை என்றார்.

குழந்தைகள்
இவரது இந்த பதிலை கேட்டதும் தனது குழந்தைகளை செவ்வாய் கிரகத்திற்கு மஸ்க் அனுப்புகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. பூமிக்கு போதிய அளவு மக்கள் இல்லை என்றால், நிச்சயமாக செவ்வாய் கிரகத்திற்கு போதுமானதாக இருக்காது என கடந்த வாரம் மஸ்க் ட்வீட் போட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications