எலான் மஸ்க் மவுனம் கலைத்தார்.. பிரபல எழுத்தாளருடன் 13வது குழந்தை? ஒரே வார்த்தையில் கொடுத்த பதில்!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் தான் தனது 5 மாத குழந்தையின் தந்தை என்று சமூக வலைத்தளங்களில் பிரபலமான ஆஷ்லே செயின்ட் கிளேர் சமீபத்தில் பதிவிட்டது சர்ச்சையானது. இது தொடர்பாக நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில், ஒரு வழியாக எலான் மஸ்க் இந்த விவகாரத்தில் மவுனம் கலைத்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள சோஷியல் மீடியா பிரபலங்களில் முக்கியமானவர் 26 வயதான ஆஷ்லே செயின்ட் கிளேர். தனது ஐந்து மாத குழந்தைக்கு எலான் மஸ்க் தான் தந்தை என்று இவர் நேற்று பதிவிட்ட ட்வீட் பெரும் பரபரப்பைக் கிளப்பியது.

Elon Musk USA

எலான் மஸ்க்

கடந்த இரண்டு நாட்களாகவே இணையத்தில் இதுதான் மிகப் பெரிய சர்ச்சையாக வெடித்தது. பலரும் எலான் மஸ்க்கை டேக் செய்து, இது தொடர்பாகக் கேள்வி எழுப்பி வந்தனர். உண்மையில் ஆஷ்லே செயின்ட் கிளேரின் ஐந்து மாத குழந்தைக்கு நீங்கள் தான் தந்தையா எனப் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். பொதுவாக யாராவது சிலர் டேக் செய்தாலே எலான் மஸ்க் அதற்குப் பதிலளித்துவிடுவார்.

ஒரே வார்த்தையில் பதில்

ஆனால், இது பெரிய சர்ச்சையாக வெடித்து, பலரும் டேக் செய்த போதிலும் எலான் மஸ்க் அமைதியாகவே இருந்தார். நேரம் செல்ல செல்ல இது குறித்த பேச்சுகள் அதிகரிக்கவே செய்தது. அதன் பிறகே ஆஷ்லே செயின்ட் கிளேர் விவகாரத்தில் எலான் மஸ்க் மவுனம் கலைத்துள்ளார். அதிலும் ஆம் என்றும் சொல்லவில்லை அதை மறுக்கவும் இல்லை. வெறுமன நான்கே லெட்டரில் "Whoa" என்று மட்டும் பதிலளித்திருக்கிறார். அதாவது ஆஷ்லே கூற்றை அவர் ஏற்கவும் இல்லை.. மறுக்கவும் இல்லை.!

ஆவேசம்

எலான் மஸ்கின் இந்த பதில் இணையத்தில் டிரெண்டாது. அதற்கு செயின்ட் கிளேர் சில காட்டமான கருத்துகளைக் கூறி பதிலடி கொடுத்திருந்தார். இது தொடர்பாக அவர் செய்த ட்வீடில், "எலான், நாங்கள் கடந்த பல நாட்களாக உங்களைத் தொடர்பு கொள்ள முயன்றும் கூட நீங்கள் பதிலளிக்கவில்லை. நான் 15 வயதாக இருந்த போது எடுத்த போட்டோக்களை முறையில்லாமல் பகிர்ந்த நபருக்குப் பதில் அளிக்கிறீர்கள்.. அதற்குப் பதில் எங்களுக்கு எப்போது பதிலளிக்கப் போகிறீர்கள்?" என்று ஆவேசமாகக் கேட்டிருந்தார். இருப்பினும், சில நிமிடங்களில் அவர் அதை டெலிட் செய்துவிட்டார்.

இருப்பினும், இது தொடர்பாக செயின்ட் கிளேரின் பிரதிநிதி விளக்கமளித்துள்ளார். அதில் அவர், "ஆஷ்லே உடனான தனது உறவை எலான் மஸ்க் பகிரங்கமாக ஒப்புக்கொள்வதற்கும், தேவையற்ற ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் நாங்கள் காத்திருக்கிறோம். குழந்தையின் நல்வாழ்வு மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இருவரும் குழந்தை வளர்ப்பைப் பிரித்துக் கொள்வார்கள் என நம்புகிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.

எலான் மஸ்கின் 12 குழந்தைகள்

52 வயதான எலான் மஸ்கிற்கு மூன்று பெண்களுடன் 12 குழந்தைகள் உள்ளனர். அவருக்கு முதல் மனைவியான ஜஸ்டின் வில்சனுடன் ஐந்து குழந்தைகள் உள்ளனர். இரட்டையர்களான விவியன் மற்றும் கிரிஃபின், மற்றும் மூன்று குழந்தைகளான காய், சாக்சன் மற்றும் டாமியன் ஆகியோர் முதல் மனைவிக்குப் பிறந்தவர்கள்.

அதேபோல இசைக் கலைஞர் க்ரைம்ஸுடன் எலான் மஸ்கிற்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்: எக்ஸ், எக்ஸா டார்க் சைட்ரேல் மற்றும் டெக்னோ மெக்கானிக்கஸ் ஆகியோர் ஆவர். அதேபோல நியூராலிங்க் நிறுவனத்தில் வேலை செய்யும் ஷிவோன் ஜிலிஸ் என்ற பெண்ணுடன் ஸ்ட்ரைடர் மற்றும் அஸூர் என்ற இரட்டையர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+