கொரோனாவில் இருந்து வேகமாக மீண்டு வரும் ஸ்பெயின், இத்தாலி.. இந்தியாவை விட குறைவான பாதிப்பு

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்துவரும் அதேநேரம் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை ஐரோப்பா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வெகுவாக குறைந்து வருகிறது. ஸ்பெயின், இத்தாலி, உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பாதிப்பு இந்தியாவைவிட குறைவாகவே உள்ளது.

சீனாவில் இருந்து ஜனவரி 2ம் வாரத்தில் உலகின் மற்ற நாடுகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவ தொடங்கியது.

அதன்பிறகு அடுத்த சில மாதங்களிலேயே அதன் பாதிப்பு லட்சங்களை தாண்டியது. மிககுறைந்த நாட்களில் பாதிப்பு 10 லட்சமாகியது. அத்துடன் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் கொரோனா பரவியது.

48லட்சம் பேருக்கு பாதிப்பு

48லட்சம் பேருக்கு பாதிப்பு

இந்நிலையில் ஜனவரி 22 ம் தேதியில் இருந்து தான் கொரோனா பாதிப்பு குறித்த எண்ணிக்கைகள் உள்ளன. ஜனவரி 22, 580 பேருக்கு பரவி இருந்த கொரோனா தொற்று மே 18ம் தேதிக்குள் 48,01,875 ஆக உயர்ந்துள்ளது. இந்த வேகத்தில் இந்த உலகில் எந்த ஒரு தொற்று நோயும் சமகாலத்தில் பரவியதாக வரலாறுகளில் இல்லை. உலகப்போரை விட மிக மோசமான பாதிப்பை கொரோனா வைரஸ் ஏற்படுத்தி இருக்கிறது.

அமெரிக்காவில் அதிகம்‘

அமெரிக்காவில் அதிகம்‘

இது வரை உலகம் முழுவதும் 316,671 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் 90,978 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக இங்கிலாந்தில் 34,636 பேரும், இத்தாலியில் 31,908 பேரும், பிரான்சில் 28,108 பேரும், இத்தாலியில் 27,650 பேரும், பிரேசிலில் 16,118 பேரும், ஜெர்மனியில் 8,049 பேரும் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவை விட குறைவு

இந்தியாவை விட குறைவு

ஞாயிற்றுக்கிழமையான நேற்று உலகம் முழுவதும் ஒரே நாளில் 3618 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர், அதிகபட்சமாக அமெரிக்காவில் 865 பேர் உயிரிழந்துள்ளனர் அதற்கு அடுத்தபடியாக பிரான்ஸில் 483 பேரும் பிரேசிலில் 485 பேரும், இங்கிலாந்தில் 170 பேரும், இந்தியாவில் 154 பேரும் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் 145 பேரும், பெருவில் 125 பேர், ரஷ்யாவில் 94 பேர், ஸ்பெயினில் 87 பேர் உயிரிழந்துள்ளனர்.

செம்ம மாற்றம்

செம்ம மாற்றம்

உலகில் கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 18,58,170 பேர் குணமடைந்தனர். உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் 346,389 பேர் குணம் அடைந்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக ஸ்பெயினில் 195,945 பேரும், ஜெர்மனியில் 153,400 பேரும், இத்தாலியில் 125,176 பேரும் கொரோனாவில் இருந்து குணம் அடைந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்போர் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. பாதிப்பும் குறைந்து வருகிறது. ஸ்பெயின், இத்தாலி, அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகள் பாதிப்பில் இருந்து மெல்ல மீண்டு வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+