ரஷ்ய செக்ஸ் உளவாளி.. "அந்த" விஷயத்தில் ஆண்களை காலி செய்வது ஈஸி.. இவர் சொல்வதை முழுசா கேளுங்க
வாஷிங்டன்: ரஷ்யா நாட்டை சேர்ந்த முன்னாள் பெண் உளவாளி ஒருவர் எப்படி தனது ஆண் டார்கெட்களை மயக்கி, ஏமாற்றினார் என்பது குறித்த தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அவரது பேச்சு இணையத்தில் இப்போது வேகமாகப் பரவி வருகிறது.
அலியா ரோசா என்ற முன்னாள் உளவாளி ஒருவர் டு டை ஃபார் (To Die For) என்ற பாட்கேஸ்ட் நிகழ்ச்சியில் பாலியல் ரீதியாகத் தனது டார்கெட்களை எப்படி காலி செய்வார் என்பது குறித்த தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

மேலும், இதற்காக அவருக்கு அளிக்கப்பட்ட பயிற்சிகள், அவர் என்ன மாதிரியான மிஷன்களை மேற்கொண்டார் என்பது குறித்த தகவல்களையும் பகிர்ந்துள்ளார்.
ரஷ்ய பெண்: இது தொடர்பாக அவர் கூறுகையில், "20 ஆண்டுகளுக்கு மேலாக நான் அமைதியாக இருந்துவிட்டேன். ஆனால், இனியும் என்னால் அமைதியாக இருக்க முடியாது. நான் இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். என்னால் இனி இந்த வலியுடன் வாழ முடியவில்லை. இந்த உண்மைகளை நான் சொல்லவில்லை என்றால் வேறு யார் சொல்வார்கள்" என்று அவர் கூறியுள்ளார்.
அலியா தனது மகனுக்கு நல்ல வாழ்க்கை கொடுக்க வேண்டும் என்பதற்காகவே முதலில் ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவுக்கு வந்துள்ளார். அதன் பிறகே அவரது வாழ்க்கை மொத்தமாக மாறி வேறு ஒரு பாதைக்குச் சென்றுள்ளது. இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "எனது வாழ்க்கையின் மிகப்பெரிய சாதனை என்றால் அது நான் அம்மாவாக மாறிய தருணம் தான். அம்மாவாக இருப்பதை நான் ரசித்தேன். எனக்கு குடும்பமாக இருக்க வேண்டும் என்பதே விருப்பம்.
ரொம்ப மோசம்: ஆனால், அவர்கள் குடும்பமாக இருக்க அனுமதிக்கவில்லை. எவ்வளவு கேட்டாலும் நோ என்பது மட்டுமே பதிலாக வரும். அதன் பிறகு தான் ஒரு கட்டத்தில் நான் உணர்ந்தேன். நாம் வாழ்வதே ஒரு முறை தான். அப்படி இருக்கும் போது எதற்காக இவர்களுக்காக நான் அதையெல்லாம் விட்டுவிட்டு இருக்க வேண்டும் என்று யோசித்தேன். அதன் பிறகே நான் ரஷ்யாவில் இருந்து தப்பிக்கும் முடிவை எடுத்தேன்.
எனது குடும்பமே ரஷ்யா ராணுவத்துடன் நெருங்கிய உறவைக் கொண்டு உள்ளது. எனது தந்தை 45 ஆண்டுகளுக்கும் மேலாக ரஷ்ய ராணுவத்தில் பணிபுரிந்தவர். பேஷன் டிசைனிங் படிக்க வேண்டும் என்பதே எனது ஆசை. ஆனால், என் தந்தை அதை அனுமதிக்கவில்லை. ரஷ்யா உளவுத் துறைக்கு என்னை அனுப்பினார். அங்கு எனக்குத் தற்காப்புக் கலைகளைச் சொல்லித் தந்தார்கள்.
செக்ஸ் மிஷன்: 18 வயது ஆனதுமே என்னை அவர்களின் செக்ஸ் மிஷன்களில் பயன்படுத்தத் தொடங்கினார்கள். மொத்தம் 350 பேர் அங்கு இருந்தனர். பலரும் எனது மிஷன்கள் செக்ஸ் பற்றியது மட்டும் என நினைக்கிறார்கள். ஆனால், உடலுறவுக்கும் இதற்கும் தொடர்பு இல்லை.
நாம் ஒருவருடன் எப்படிப் பேசுகிறோம், என்ன ஆடை அணிகிறோம், எப்படிப் பேசி நமது டார்கெட்களை கவிழ்க்கிறோம் என்பது பற்றியது. இது குற்றவாளிகள், குறிப்பாக ஆண்களின் உளவியல் பற்றியது. ஆண்களின் கண்ணோட்டத்தைப் புரிந்து கொண்டு அவர்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டு பேசினால் வேலை உடனடியாக முடியும்.
அலெக்ஸி நவல்னி மரணத்திற்கும் புதினுக்கும் தொடர்பு இல்லை.. அமெரிக்க உளவுத்துறை சொன்னதை கவனிச்சீங்களா?
எப்படி: நீங்கள் ஒருவரை நெருங்க வேண்டும் என்றால் அவர்களை முதலில் பாராட்ட வேண்டும். சும்மா ஆடை நல்லா இருக்கு ஷூ நல்லா இருக்கு என்பது எல்லாம் வேலைக்கு ஆகாது. சரியாக அவர்கள் ஒரு செயலை செய்யும் போது அதைக் கவனித்து அதைக் காரணத்துடன் பாராட்ட வேண்டும். அப்போது தான் அவர்களுக்கு உங்களைப் பிடிக்கும். நீங்கள் சரியான நேரத்தில் சரியாகப் பேசினால் அவர்களும் ஓப்பனாக எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொள்வார்கள். பெரும்பாலும் எங்கள் மிஷன் இவ்வளவு தான்.
பாலியல் நுட்பங்கள்: ஆனால், இதில் பாலியல் நுட்பங்களும் உள்ளன. அவை அதி தீவிரமானது. உங்கள் இலக்கை உங்களை விட்டுத் தள்ளிச் செல்லாமல் இருக்க இது உதவுகிறது. இவை கஷ்டமாக இருந்தாலும் ஒருவரது ஒருவரது உயிரைக் காப்பாற்ற முடிகிறது என்ற நிம்மதி இருந்தது ஆனால், தொடர்ந்து இதை செய்ய செய்ய எனது உடல் தொடர்ந்து துஷ்பிரயோகம் செய்யப்பட்டது. யாரென்றே தெரியாதவர்கள் எல்லாம் என்னைப் பலாத்காரம் செய்தது போல இருந்தது.
ரஷ்ய அரசு எங்களைப் போன்ற நபர்களைப் பயன்படுத்திவிட்டுத் தூக்கி வீசுவதை அதன் பின்னரே உணர்ந்தேன். இந்த மிஷன்களில் ஈடுபடும் பெண்கள் 56 வயதை எட்டிய பிறகு மிகவும் துயரமான முனைக்குத் தள்ளப்படுவார்கள். அவர்களுக்கு எனத் தனிப்பட்ட வாழ்க்கை இருக்காது. குடும்பமும் இருக்காது. இதன் காரணமாகவே நான் தப்பி வர முடிவு செய்தேன்" என்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications