அலெக்ஸி நவல்னி மரணத்திற்கும் புதினுக்கும் தொடர்பு இல்லை.. அமெரிக்க உளவுத்துறை சொன்னதை கவனிச்சீங்களா?
நியூயார்க்: ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி சமீபத்தில் சிறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் விவாதங்களை கிளப்பியது. குறிப்பாக, ரஷ்ய அதிபர் புதின் இந்த கொலையில் சம்பந்தப்பட்டிருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், புதினுக்கும் இந்த கொலைக்கும் சம்பந்தம் இல்லை என அமெரிக்க உளவுத்துறை கூறியிருக்கிறது.
சர்வதேச அளவில் மீக நீண்ட காலமாக அதிபராக இருப்பவர் புதின். ரஷ்யாவின் அதிபராக நீண்ட காலமாக இருப்பதால் அவருக்கு எதிராக ஏராளமான அதிருப்திகள் கிளம்பியுள்ளன. இந்த அதிருப்திகளை புதினுக்கு எதிரான புகார்களாக மாற்றியதில் அலெக்ஸிக்கு முக்கிய பங்கு இருக்கிறது. ரஷ்யாவில் புதினுக்கு எதிராக பேசுவதற்கே பலரும் பயந்த வந்த நிலையில், புதின் ஒரு சர்வாதிகாரி என்று பகிரங்கமாக அலெக்ஸி அறிவித்திருந்தார். புதினுக்கு எதிராக மக்களை அணி திரட்ட தொடங்கினார் அலெக்ஸி.

விளைவு இவரின் 'எதிர்கால ரஷ்யா' என்ற அரசியல் கட்சி வேகமாக வளர தொடங்கியது. 24 ஆண்டுகளாக அதிபராக இருக்கும் புதின் ஏராளமான ஊழலை செய்திருப்பதாகவும் குற்றம்சாடி அலெக்ஸி தனது பிரசாரத்தை தீவிரப்படுத்தினர். ரஷ்யாவில் சீர்திருத்தம் வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தார். இவரை தொடர்ந்து கண்காணித்து வந்த ரஷ்ய உளவுத்துறை, அலெக்ஸி சம்பந்தப்பட்டிருக்கும் சில விவகாரங்களையும் கணக்கெடுக்க தொடங்கியது.
இப்படியாக அலெக்ஸி மீது மோசடி, நீதிமன்ற அவமதிப்பு, அறக்கட்டளை மூலமாக முறைகேடாக பணம் பெற்றது, தீவிரவாதத்தை தூண்டுதல் மற்றும் நிதியளித்தல், சட்டவிரோத தன்னார்வ தொண்டு நிறுவனத்தை உருவாக்குதல், நாஜிக் கொள்கைகளுக்கு புத்துயிர் கொடுத்தல் மற்றும் ஆபத்தான செயல்களுக்கு குழந்தைகளை தூண்டுதல் ஏராளமான குற்றச்சாட்டுகள் பதியப்பட்டன. இதற்காக அலெக்ஸிக்கு 19 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. இதனையடுத்து கடந்த ஆண்டு அவர் சிறைக்கு அனுப்பப்பட்டார்.
இப்படி இருக்கையில், கடந்த பிப்ரவரி மாதம் அவர் சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த மரணம் குறித்து ஏராளமான பேச்சுக்கள் அடிபடத் தொடங்கியது. அதில் முக்கியமானது, அலெக்ஸி கொலையில் புதின் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்பதுதான். காரணம் கடந்த 2011ம் ஆண்டு அலெக்ஸி ரேடியோ சேனலுக்கு அளித்த பேட்டி. அந்த பேட்டியில் ரஷ்யாவை ஆளும் ஐக்கிய ரஷ்ய கட்சி சர்வாதிகாரிகளை கொண்டிருக்கிறது என்று கூறியிருந்தார்.
இந்த புள்ளியில் நேரடியாக புதினுக்கும் அலெக்ஸிக்கும் பஞ்சாயத்து தொடங்கியது. இப்படியாக புதினுக்கு எதிரான பிரசாரம் காரணமாகவே அலெக்ஸி சிறையில் கொல்லப்பட்டிருக்கிறார் என்று பலரும் கூறினர். இந்த கொலையில் புதின் நேரடியாக சம்பந்தப்பட்டிருக்கிறார் என்றும், அவருடைய உளவு அமைப்பு, அதாவது சோவியத் காலத்தில் இவர் தலைமை வகித்த கேஜிபி எனும் உளவு அமைப்பை சேர்ந்த சிலர்தான் இந்த கொலையை புதினுக்காக செய்திருக்கிறார்கள் என்று பேச்சு அடிபட்டது.
இந்நிலையில், இந்த கொலைக்கும் புதினுக்கும் நேரடி தொடர்பு இல்லை என்று அமெரிக்காவின் உளவு அமைப்பு தெரிவித்திருக்கிறது. அதாவது அலெக்ஸியை கொலை செய்ய புதின் எந்த உத்தரவையும் வெளியிடவில்லை என்று உளவு அமைப்புகள் கூறியுள்ளன. இந்த சம்பவம் தற்செயலாக நடந்தது என்றும், இந்த நேரத்தில் ரஷ்யாவில் தேர்தல் நடந்து கொண்டிருந்ததால் பழி புதினை நோக்கிச் சென்றது என்றும் கூறியுள்ளன.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications