உலகமே உற்று நோக்கும்.. அனல் பறக்கும் அமெரிக்கா அதிபர் தேர்தல்.. எப்படி நடக்கிறது தெரியுமா?
வாஷிங்டன்: அமெரிக்காவின் அதிபர் தேர்தல் நவம்பர் 5-ந் தேதி நடைபெற உள்ளது. அமெரிக்கா அதிபர் தேர்தல் வேட்பாளர்கள் எப்படி தேர்வு செய்யப்படுகின்றனர்? அமெரிக்கா அதிபர் எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
அமெரிக்கா அதிபர் தேர்தல் களம்: அமெரிக்கா அதிபர் தேர்தல் நவம்பர் 5-ந் தேதி நடைபெறுகிறது. அமெரிக்கா அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரீஸ், குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப், கிரீன் கட்சி வேட்பாளர் ஜில் ஸ்டெய்ன் களத்தில் உள்ளனர். அமெரிக்க அதிபர் தேர்தலில் இதுவரை ஜனநாயக் கட்சி அல்லது குடியரசுக் கட்சி வேட்பாளர்களே வெற்றி பெற்றுள்ளனர்.

அமெரிக்கா அதிபர் தேர்தல்: பொதுவாக அமெரிக்கா அதிபர் தேர்தல் என்பது 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நவம்பர் மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமை நடைபெறும். அமெரிக்க அதிபர் தேர்தல் நடைமுறை என்பது ஒரு ஆண்டு அல்லது பல மாதங்களுக்கு முன்னரே தொடங்கிவிடும்.
அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர்கள்: அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் அந்நாட்டில் பிறந்த 35 வயது அல்லது அதற்கு மேற்பட்ட குடிமக்கள், 14 ஆண்டுகள் அமெரிக்காவின் குடிமகனாக இருப்பவர்கள் போட்டியிட முடியும்.
அதிபர் தேர்தல் வேட்பாளர் தேர்வு: அமெரிக்காவின் அதிபர் வேட்பாளராக இரு கட்சிகளும் மாகாணங்களில் மேற்கொள்ளப்படுகிற Primaries/ Caucuses நடைமுறைகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
Primaries என்பது மாகாண அளவில் ரகசிய வாக்கெடுப்பு மூலம் வேட்பாளர் தேர்வு நடத்தப்படுகிறது. Caucuses என்பது அரசியல் கட்சிகள் விவாதங்கள் உள்ளிட்டவைகள் மூலம் வேட்பாளரை தேர்வு செய்வதாகும். இதனுள்ளும் பல்வேறு நடைமுறைகள் உள்ளன.
வேட்பாளர்கள் எத்தனை பேர்?: அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளரா தேர்வு செய்யப்படுவதற்காக ஒரே கட்சியை சேர்ந்த இருவர் கூட களத்தில் நிற்கலாம். உதாரணமாக தற்போதைய அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பாக ஜோ பைடன், கமலா ஹாரிஸ் வேட்பாளர்களாக தேர்வு செய்ய களத்தில் நின்றனர். ஜோ பைடனுக்கு சில மாகாணங்களில் ஆதரவு இருந்த போதும் கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக களத்தில் இருந்து விலகிக் கொண்டார். இதேபோல குடியரசுக் கட்சியில் டொனால்ட் டிரம்ப், நிக்கி ஹேலி இருவரும் களத்தில் நின்றனர். டொனால்ட் டிரம்ப்புக்கு அதிக ஆதரவு கிடைத்தது. இதனால் தற்போது களத்தில் கமலா ஹாரீஸ், டொனால்ட் டிரம்ப் மோதுகின்றனர்.
அமெரிக்கா அதிபர் தேர்தல் எப்படி நடைபெறும்?: அமெரிக்கா நாட்டின் குடிமக்கள் அனைவரும் நேரடியாக வாக்களித்து அதிபரைத் தேர்ந்தெடுப்பது இல்லை. அதாவது நாம் எம்.எல்.ஏ, எம்பியை தேர்ந்தெடுக்க நேரடியாக ஓட்டுப் போடுவது போல இல்லை அமெரிக்காவின் நடைமுறை.
அமெரிக்கா அதிபர் தேர்தலில் 2 நடைமுறை உள்ளன. முதலில் மக்கள், மாகாணங்களில் பிரதிநிதிகளைத் தேர்வு செய்ய வேண்டும். அதாவது
அமெரிக்காவின் மாகாணங்கள் ஒவ்வொன்றுக்கும் Electoral College என்கிற பிரதிநிதிகள் வாக்குகள் இருக்கும். இப்படி மொத்தம் 538 மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவர். இவர்களில் 270 பேர் ஆதரவு அதிபராவதற்கு தேவை. ஒரு மாகாணத்தில் 20 பேர் பிரதிநிதிகள் எனில் 2 வேட்பாளர்களில் ஒருவர் 11, மற்றொருவர் 9 பேர் ஆதரவை பெறுகின்றனர் எனில் 11 பேர் ஆதரவைப் பெற்றவர் கணக்கில் எஞ்சிய 9 பேர் ஆதரவும் சேர்ந்துவிடும். 11 பேர் ஆதரவை பெற்றவருக்கே அந்த மாகாணத்தின் மொத்த 20 பேர் ஆதரவும் சேர்ந்துவிடும். இப்படியும் ஒரு நடைமுறை உள்ளது.
மேலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிற இந்த 538 பிரதிநிதிகள் குழுதான் இறுதி வாக்காளர்கள். இவர்கள் அமெரிக்கா அதிபர் தேர்தல் வேட்பாளர்களுக்கு நேரடியாக வாக்குகளைச் செலுத்துகிறவர்கள். 2016-ல் ஹிலாரி கிளிண்டன், மாகாண பிரதிநிதிகள் வாக்குகளை அதிகம் பெற்றிருந்தாலும் பிரதிநிதிகள் குழுவின் இறுத்இ வாக்குகளை குறைவாக பெற்றதால் தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை: அமெரிக்கா அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெற்றாலும் வாக்கு எண்ணிக்கை ஜனவரியில்தான் நடைபெறும்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications