அமெரிக்காவின் முதல் கறுப்பின.. வெளியுறவு துறை அமைச்சர் கொரோனாவால் பலி.. யார் இவர்
வாஷிங்டன்: அமெரிக்காவின் முதல் கறுப்பின வெளியுறவுத் துறை அமைச்சர் காலின் பாவெல் தனது 84ஆவது வயதில் கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.
கொரோனா பாதிப்பு உலகில் எந்த நாட்டிலும் முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை. பல நாடுகளும் வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் வைத்திருக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தற்போதைய சூழலில் வேக்சின் மட்டுமே கொரோனா பரவலைத் தடுக்கும் ஒரே ஆயுதமாகப் பார்க்கப்படுகிறது. இதனால் அனைத்து நாடுகளும் வேக்சின் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.

Breakthrough infection
வேக்சின் போட்ட பிறகும் கூட சிலருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்படுகிறது. இதனை ஆய்வாளர்கள் breakthrough infection என்று குறிப்பிடுகிறார்கள். பெரும்பாலும், breakthrough infectionஇல் கொரோனா பாதிப்பு தீவிரமானதாக இருக்காது. இருப்பினும், அதிலும் தீவிர கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் சம்பங்களும் கூட நிகழ்கிறது. அப்படியொரு சம்பவம் தான் அமெரிக்காவில் இப்போது நடந்துள்ளது.

காலின் பாவெல் மறைவு
அமெரிக்காவில் முதல் கறுப்பின வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தவருமான காலின் பாவெல் தனது 84ஆவது வயதில் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். அமெரிக்க ராணுவத்தில் சேவை புரிந்துள்ள அவர், ஏற்கனவே 2 டோஸ் கொரோனா வேக்சின் போட்டிருந்தார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். காலின் பாவெலின் இந்த திடீர் மறைவுக்கு அமெரிக்கத் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ராணுவ ஹீரோ
1991 வளைகுடா போரில் அமெரிக்க வெற்றி பெற்ற பிறகு காலின் பாவெலின் இமேஜ் அமெரிக்காவில் பல மடங்கு உயர்ந்தது. அமெரிக்கர்கள் மத்தியில் காலின் பாவெலுக்கு நல்ல ஒரு இமேஜும் இருந்தது. இதனால் அவர் முதல் கறுப்பின அமெரிக்க அதிபராக வருவார் என்றும் கூட பலரும் எதிர்பார்த்தனர். இருப்பினும், அவர் அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று முடிவெடுத்தார்.

தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்
ஜமைக்கா வம்சாவளியைச் சேர்ந்த காலின் பாவெல் வியட்நாம் அதிபர் ரொனால்ட் ரீகனின் ஆட்சியில் அமெரிக்காவின் முதல் கறுப்பின தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார். அடுத்து வந்த சீனியர் புஷ் ஆட்சியில் அமெரிக்கா ராணுவத்தின் தலைமை தளபதியாக இருந்தார். முதல் கறுப்பின தலைமை தளபதி மற்றும் மிகவும் இளம் வயதில் தலைமை தளபதி பொறுப்பிற்கு வந்தவர் என்ற சிறப்புகளையும் பெற்றிருந்தார்.

முதல் கறுப்பின வெளியுறவுத் துறை அமைச்சர்
இறுதியில் ஜார்ஜ் புஷ் ஆட்சியில் 2001- 2005 அமெரிக்காவின் முதல் கறுப்பின வெளியுறவுத் துறை அமைச்சர் காலின் பாவெல் இருந்தார். அமெரிக்காவின் 4 அதிபர்களுடன் - காலின் பாவெல் பணியாற்றியுள்ளார். காலின் பாவெல் குடியரசு கட்சியைச் சேர்ந்தவர் என்றாலும் கூட ஒபாமா அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட போது அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தார். அதேபோல டிரம்பிற்கு எதிராகப் போட்டியிட்ட ஜனநாயக கட்சியின் ஹிலாரி கிளின்டன் மற்றும் ஜோ பைடன் ஆகியோருக்கும் ஆதரவு அளித்தார்.

ஈராக் போர்
இவர் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த போது தான் ஈராக்கில் அணு ஆயுதங்கள் இருப்பதாக அமெரிக்கா தொடுத்த போரில் சதாம் உசேன் கொல்லப்பட்டார். ஆனால், ஈராக்கில் எவ்வித அணு ஆயுதங்களும் கண்டுபிடிக்கப்படவில்லை. பின்னாளில் இது குறித்து காலின் பாவெல் அளித்த பேட்டியில், "அது எனது வாழ்க்கையில் எப்போதும் இருக்கும் ஒரு கருப்புப் புள்ளி. அப்போதும் சரி இப்போதும் சரி அது வேதனை அளிக்கிறது" என்று தெரிவித்தார்.
-
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
போர் முடிந்தது.. சுவிட்ச் போட்டது போல் பெட்ரோல் விலை நாளைக்கே குறையுமா..? வாய்ப்பில்ல ராஜா, ஏன்? -
அடுத்த 60 நாட்கள் ரொம்ப முக்கியம்.. அமெரிக்கா ஈரான் போரில் மாற்றம்! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
ஈரான் போரில் யாருக்கு வெற்றி..? குண்டை தூக்கிப்போட்ட இஸ்ரேல்..! குழப்பத்தில் டிரம்ப்! -
நெதன்யாகு சாயம் வெளுத்தது.. ஈரான் நினைத்தால் இஸ்ரேல் 2 மணிநேரத்தில் காலி.. டிரம்ப் பேச்சால் ஷாக்! -
இஸ்ரேலை கழற்றிவிட நேரம் வந்தாச்சு.. டிரம்ப் எடுக்கப்போகும் முக்கிய முடிவு.. நெதன்யாகு ஷாக்! -
100 நாட்களை தாண்டிய அமெரிக்கா இஸ்ரேல் தாக்குதல்.. ஈரானை இன்னும் வீழ்த்த முடியாத ரகசியம் என்ன? -
நான் வந்துட்டேன்னு சொல்லு.. தலைநிமிர்ந்த தங்கம்! ஒரே அறிவிப்பால் திடுக்குனு உயர்ந்த விலை! என்னாச்சு? -
பஞ்சாயத்து ஓவர்.. அமெரிக்கா-ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம்! டிரம்ப் சொன்ன குட் நியூஸ் -
ஈரான் - அமெரிக்கா போர் முடிவுக்கு வருகிறது? 24 மணி நேரத்தில்.. பாகிஸ்தான் பிரதமர் முக்கிய அறிவிப்பு -
குட்டையை குழப்பிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் சொதப்பல்! போர் இப்போதைக்கு முடியாது! -
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.!












Click it and Unblock the Notifications