"எமர்ஜென்சி!" டிரம்பிற்கு எதிராக ஐரோப்பிய நாடுகள்? சத்தமின்றி பிரான்ஸ் செய்த காரியம்! என்ன நடக்கிறது
வாஷிங்டன்: அமெரிக்க அதிபரான டிரம்ப் தொடர்ச்சியாக வெளிநாடுகளுக்கு வரி விதிக்கும் நிலையில், ஐரோப்பியத் தலைவர்களின் அவசர கூட்டத்தை பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோன் கூட்டியுள்ளார். டிரம்பின் பல வரி அறிவிப்புகள் ஐரோப்பாவைப் பாதிக்கும் நிலையில், இது தொடர்பாக விரிவான ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
அமெரிக்காவின் அதிபராகக் கடந்த மாதம் இறுதியில் பதவியேற்ற டிரம்ப், தொடர்ச்சியாகப் பல உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். அவரது உத்தரவுகள் சர்வதேச அளவில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்துவதாகவே இருக்கிறது.

சர்வதேச வர்த்தகத்தையும் பாதிப்பதாக உள்ளது. குறிப்பாக சமீபத்தில் ரெசிப்ரோக்கல் வரி என்ற வரியை அறிமுகப்படுத்தினார். அதாவது அமெரிக்கா மீது எந்தெந்த நாடுகள் எவ்வளவு வரி விதிக்கிறதோ.. அதே அளவுக்கு அமெரிக்காவும் பிற நாடுகள் மீது வரி விதிக்கும் என்பதே உத்தரவாகும்.
அவசர கூட்டம்
இதற்கிடையே அமெரிக்க அதிபர் டிரம்பின் வரி விதிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து விவாதிக்க ஐரோப்பிய தலைவர்களின் அவசர கூட்டத்தை பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோன் கூட்டியுள்ளதாக ஐரோப்பிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முனிச் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்ற போலந்து வெளியுறவு அமைச்சர் ராடோஸ்லாவ் சிகோர்ஸ்கியும் இந்த ஆலோசனையில் முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். மேலும், இரண்டு ஐரோப்பிய அதிகாரிகளும் இந்த ஆலோசனை நடைபெறுவதை உறுதி செய்துள்ளனர்.
போலந்து வெளியுறவு அமைச்சர் ராடோஸ்லாவ் சிகோர்ஸ்கி மேலும் கூறுகையில், "பிரான்ஸ் அதிபர் மக்ரோன் அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இதுபோன்ற ஒரு ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவது மகிழ்ச்சியைத் தருவதாகவே இருக்கிறது. டிரம்ப் மிகத் தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அது குறித்த ஆலோசனை என்பது காலத்தின் கட்டாயம்.
ரஷ்யாவை போல டிரம்ப்
டிரம்பின் நடவடிக்கை என்பது ரஷ்ய ராணுவத்தின் "ரஸ்வெட்கா பாய்ம்" யுக்தியைப் போல இருக்கிறது. அதாவது ரஷ்யா எவ்வளவு முடியுமோ அதை முதலில் செய்து பார்ப்பார்கள். அதற்கு என்ன மாதிரியான ரியாக்ஷன் வருகிறது என்பதைப் பொறுத்து தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வார்கள். டிரம்பும் கூட இப்போது அதுபோல உலக நாடுகள் என்ன செய்கிறது என்பதைப் பார்க்கவே இதுபோல செய்கிறார் என நினைக்கிறோம்" என்று காட்டமான கருத்துகளை முன்வைத்துள்ளார்.
அமெரிக்காவின் வரி அறிவிப்புகள் ஐரோப்பிய நாடுகளுக்குச் சிக்கலைத் தருவதாகவே இருக்கிறது. இது ஐரோப்பிய நாடுகளின் வர்த்தகத்தையும் கூட கடுமையாகப் பாதிக்கிறது. இதன் காரணமாகவே பிரான்ஸ் அவசர ஆலோசனை நடத்துகிறது. இதில் அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு எதிராக முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.
இம்மானுவேல் மாக்ரோன்
பிரான்ஸ் நாட்டின் அதிபராக இம்மானுவேல் மாக்ரோன் இருக்கிறார். வலதுசாரியான இம்மானுவேல் மாக்ரோன் கடந்த காலங்களில் பல முறை டிரம்பை வெளிப்படையாகவே ஆதரித்துள்ளார். டிரம்ப் அதிபர் தேர்தலில் வென்ற போது கூட மீண்டும் அவருடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக இருப்பதாகவே இம்மானுவேல் மாக்ரோன் கூறியிருந்தார். அந்தளவுக்கு ஆதரவு தெரிவித்து வந்தவரே டிரம்ப் நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க அவசர மீட்டிங் கூட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேநேரம் உலக நாடுகள் எவ்வளவு எதிர்ப்பு தெரிவித்தாலும் டிரம்ப் தனது நடவடிக்கைகளில் இருந்து பின்வாங்குவது போலத் தெரியவில்லை. அமெரிக்காவுக்கு முன்னுரிமை என்ற கொள்கையின் அடிப்படையிலேயே இந்த வரிகளை விதிப்பதாகச் சொல்லிக் கொண்டு அவர் வரிகளை விதித்து வருகிறார்.
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications