அரண்ட டிரம்ப்.. இலவச பேருந்துகள்.. பணக்காரர்களுக்கு கூடுதல் வரி! நியூயார்க்கை புரட்டி போட்ட மம்தானி
நியூயார்க்: அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் ஒன்றான நியூயார்க் நகரின் மேயர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் மம்தானி வெற்றி பெற்றுள்ளார். மம்தானிக்கு வாக்களித்தால் நியூயார்க் நகருக்கு நிதி தர மாட்டேன் என டிரம்ப் வெளிப்படையாகவே சொன்ன பிறகும் அவர் வென்றுள்ளார். இதற்கு முக்கிய காரணமே அவர் முன்வைத்த சில முக்கிய வாக்குறுதிகள் தான் இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
நியூயார்க் மேயர் தேர்தலில் மம்தானி மிக பெரிய வெற்றியைப் பெற்றார். அவர் இத்தேர்தலில் வெல்ல அவர் முன்வைத்த வாக்குறுதிகளே முக்கிய காரணமாகும். எளிய உழைக்கும் மக்களை முன்வைத்து அவர் அளித்த வாக்குறுதிகளே அங்குத் தேர்தலைப் புரட்டிப் போட்டது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

பணக்காரர்களுக்கு வரி
மம்தானி முன்வைத்த முக்கிய வாக்குறுதிகளில் ஒன்று பெரும் பணக்காரர்களுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் கூடுதல் வரிகளை விதிப்பதாகவும். இத்திட்டம் மூலம் கோடீஸ்வரர்களுக்கு 2% வரியை உயர்த்த போகிறார். மேலும், கார்ப்ரேட் வரி 11.5%ஆக அதிகரிக்கும். இதை மட்டும் செய்வதன் மூலம் நியூயார்க்கிற்கு சுமார் 9 பில்லியன் டாலர் கூடுதலாக வருவாய் கிடைக்குமாம்.
இருப்பினும், மம்தானியால் இதை நினைத்தவுடன் செய்ய முடியாது. அம்மாகாண அரசின் ஒப்புதல் தேவை இருப்பினும், வரியை உயர்த்தினால் பெரும் பணக்காரர்களும் கார்ப்பரேட் நிறுவனங்களும் வெளியேறிவிடுவார்கள் என்பதால் இதைச் செய்ய முடியாது என அம்மாகாண ஆளுநர் ஹோச்சுல் கூறியுள்ளார். மம்தானியும் இதில் சில சிக்கல்கள் இருப்பதாகவும் மாற்று நிதி ஆதாரங்களைக் கண்டறிய வேண்டி இருக்கும் என்று ஒப்புக்கொண்டுள்ளார்.
வாடகை
அதேபோல நியூயார்க் நகரில் வீடுகளின் வாடகையை லாக் செய்யப் போவதாக அறிவித்துள்ளார். அதாவது குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளின் வாடகையை லாக் செய்துவிடுவார்கள். அதன் பிறகு வீட்டு ஓனர்களே நினைத்தாலும் அதை உயர்த்த முடியாது. அனைத்துத் தரப்பினருக்கும் வீடுகள் கிடைப்பதை உறுதி செய்ய இந்தத் திட்டம் உதவும் இது மம்தானி பிரச்சாரத்தின் ஒரு முக்கிய அம்சமாக இருந்தது.
நியூயார்க் நகரில் ரியல் எஸ்டேட் மார்கெட் உச்சத்தில் இருக்கிறது. அங்குப் பெரும்பாலான மக்கள் தங்கள் வருமானத்தில் கணிசமான தொகையை வாடகைக்கே ஒதுக்க வேண்டி இருக்கிறது. இதனால் இந்த வாக்குறுதி அங்கு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. சுமார் 20 லட்சம் நியூயார்க் மக்களுக்கு இது பெரியளவில் கை கொடுக்குமாம்.
இலவச பஸ்கள்
அவர் சொன்ன இன்னொரு முக்கிய வாக்குறுதி இலவச பஸ்கள்.. நியூயார்க் மக்கள் தங்கள் விரும்பிய இடத்திற்குச் செல்ல இலவச பேருந்துகளை அறிமுகப்படுத்தவுள்ளதாக அவர் அறிவித்திருந்தார். முதற்கட்டமாக அவர் எம்பியாக இருந்தபோதே 5 இலவசப் பேருந்துகளைச் சோதனை முறையில் அறிமுகப்படுத்தி இருந்தார். அடுத்தகட்டமாக இத்திட்டத்தை நகரமெங்கும் விரிவுபடுத்த மாம்தானி உறுதியளித்துள்ளார்.. $700 மில்லியன் மதிப்பிலான இத்திட்டம் நியூயார்க் நகரின் உழைக்கும் மக்களின் சுமையைக் குறைக்கும் என அவர் குறிப்பிட்டிருந்தார்.
குழந்தை பராமரிப்பு
அடுத்து முக்கியமானது நியூயார்க் மக்களின் குழந்தை பராமரிப்பு வசதிகள்.. இதற்காக 6 பில்லியன் டாலர் ஒதுக்க திட்டமிட்டுள்ளார். அவருடைய வாக்குறுதிகளிலேயே அதிகச் செலவாகும் திட்டம் இதுதான். இது உழைக்கும் வர்க்கத்தினர் குழந்தை பராமரிப்பு செலவுகளை குறைக்கும். பணக்காரர்களுக்கான வரியை எதிர்த்த நியூயார்க் ஆளுநர் ஹோச்சுல் கூட இத்திட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளார். இதை நடைமுறைப்படுத்த மாம்தானியுடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாகவும் அறிவித்திருந்தார்.
அரசு மளிகைக் கடைகள்
மேலும், நியூயார்க் நகரில் அரசுக்குச் சொந்தமான மளிகைக் கடைகளைத் திறக்கப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார். அமெரிக்காவில் நம்ம ஊரை போல ரேஷன் கடைகள் இல்லாத நிலையில், குறைந்த வருமானம் கொண்ட நியூயார்க் மக்கள் மளிகைப் பொருட்களை வாங்கவே அதிகம் செலவிட வேண்டி இருக்கிறது. அந்த நிலையை மாற்றி குறைந்த செலவில் அனைவருக்கும் மளிகைப் பொருட்களை விற்பதே இதன் நோக்கமாகும்.
இப்படி மக்களுக்குத் தேவையான வாக்குறுதிகளை முன்வைத்து பிரச்சாரம் செய்ததாலேயே டிரம்பின் எதிர்ப்பையும் தாண்டி நியூயார்க் தேர்தலில் மம்தானியால் மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்ய முடிந்தது. அடுத்து இத்திட்டங்களை அவர் விரைந்து செயல்படுத்த வேண்டும் என்பதை மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
-
இந்தியர்களுக்கு பெரிய ஆப்பு.. H-1B விசா ரூல்ஸை மொத்தமாக மாற்றும் டிரம்ப்! இது தேவையில்லாத வேலையாச்சே -
ஈரான் ஈரலை குறிவைக்கும் ட்ரம்ப்..கார்க்கை சுத்துப் போட்ட ‘இரும்பு அரக்கன்கள்’.. ரெடியான பாராசூட் படை -
அமெரிக்கா வான் தாக்குதலில் இந்தியா வர இருந்த ஈரான் விமானம் சேதம்! என்ன நடந்தது? -
"விட்டால் போதும்.." கையை பிசையும் டிரம்ப்.. ஈரான் போரை முடிக்க முடியாமல் திணறும் அமெரிக்கா! -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
ஈரானிடம் உள்ள 400 கிலோ யுரேனியம்.. கண்வைத்த டிரம்ப்.. தரைவழி தாக்கி மீட்க அமெரிக்கா மாஸ்டர் பிளான் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்!












Click it and Unblock the Notifications