4 லட்சம் பெண்களை பலாத்காரம் செய்த பாக்., ராணுவம்.. ஐநாவில் வெளுத்துவிட்ட இந்தியா.. கலங்கிய பிரதிநிதி

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்:காஷ்மீரில் பல ஆண்டுகளாக பெண்கள் போர் ஆயுதமாக பயன்படுத்தப்படுகின்றனர். பாலியல் வன்முறைகளை தாங்கி கொள்ள வேண்டிய நிலையில் உள்ளதாக ஐநாவில் பொய்களை கட்டவிழ்த்து விட்ட பாகிஸ்தானுக்கு நம் நாடு சுளீர் பதிலடி கொடுத்தது. ஆபரேஷன் சர்ச்லைட் என்ற பெயரில் சொந்த நாட்டின் 4 லட்சம் பெண்களை பாகிஸ்தான் ராணுவம் பலாத்காரம் செய்ததாக இந்தியா கூறி பாகிஸ்தானின் பிரதிநிதியின் மூக்கை உடைத்தார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐநா பாதுகாப்பு கவுன்சில் சபை கூடியது. பெண்கள் பாதுகாப்பு பற்றி விவாதம் நடந்தது. வழக்கம்போல் பாகிஸ்தான் நம் நாட்டின் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.

genocidal-mass-rape-of-400-000-women-citizens-by-its-own-pakistan-army-india-blasted-at-the-un

இதுதொடர்பாக பாகிஸ்தான் பிரதிநிதி சைமா சலீம் பேசுகையில், ‛‛காஷ்மீரில் பல ஆண்டுகளாக பெண்கள் போர் ஆயுதமாக பயன்படுத்தப்படுகின்றனர். பாலியல் சம்பவங்களுக்கு ஆளாகிறார்கள். மீண்டும் மீண்டும் பாலியல் வன்முறைகளை தாங்கிக்கொண்டிருக்கிறார்கள்'' என்று ஆதாரமற்ற அதேவேளையில் நம் நாட்டை சீண்டும் வகையில் கருத்து தெரிவித்தார்.

இதற்கு நம் நாட்டின் பிரதிநிதி மரண அடி கொடுத்தார்.
ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி பர்வதனேனி ஹரிஸ் பாகிஸ்தானின் செயலை தோலுரித்து காட்டினார். இதுபற்றி பர்வதனேின ஹரிஸ் பேசியதாவது: ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவுக்கு எதிராக குறிப்பாக பாகிஸ்தான் விரும்பும் எங்கள் நாட்டின் ஜம்மு காஷ்மீருக்கு எதிராக மாயையான கருத்துகளை கூறி வருகிறது. இது துரதிர்ஷ்டவசமானது.

பெண்களின் சுதந்திரம், பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்தியா முன்னோடியாக திகழ்கிறது. பெண்களுக்காக இந்தியா செய்த ஒவ்வொரு சாதனையும் கறை படியாதது. ஆனால் தனது சொந்த நாட்டு மக்கள் மீதே குண்டு வீசும் ஒரு நாடு, ஒவ்வொரு முறையும் இந்த சபையை தவறாக வழிநடத்துவதையே நோக்கமாக வைத்துள்ளது.

1971ம் ஆண்டில் ‛ஆபரேஷன் சர்ச்லைட்' மூலம் இதே பாகிஸ்தான் தான் சொந்த நாட்டில் இனபடுகொலையை நிகழ்த்தியது. 4 லட்சம் பெண்களை பாகிஸ்தான் ராணுவம் பாலியல் பலாத்காரம் செய்தது. பாகிஸ்தானின் ஒவ்வொரு செயலையும் இந்த உலகம் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறது'' என்று கூறினார். இதை கேட்டு பாகிஸ்தான் பிரதிநிதி சைமா சலீம் அமைதியானார்.

‛ஆபரேஷன் சர்ச்லைட்' என்பது வங்கதேசம் பிரிவினையின்போது நடந்த ஆபரேஷனாகும். வங்கதேசம் பாகிஸ்தானின் ஒரு பகுதியாக கிழக்கு பாகிஸ்தானாக இருந்தது. 1971ல் வங்கதேசத்துக்கான தனி நாடு கோரி போராட்டம் வெடித்தது. வன்முறை உருவானது. அப்போது பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் டிக்கா கான் என்பவர் ‛ஆபரேஷன் சர்ச்லைட்' என்ற பெயரில் வங்கமொழி பேசுவோருக்கு எதிராக அடக்குமுறையை ஏவினார்.

இதையடுத்து தனி நாடு கேட்டு போராடியவர்களை தேடி தேடி இனபடுகொலை செய்தது பாகிஸ்தான் ராணுவம். அப்பாவி பெண்கள் 4 லட்சம் பேரை பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பாலியல் பலாத்காரம் செய்ததாக இன்று வரை வங்கதேசம் சார்பில் கூறப்பட்டு வுருகிறது. அதன்பிறகு நம் நாட்டின் ராணுவம் களம் புகுந்தது. பாகிஸ்தான் வீரர்கள் நம்மிடம் சரணடைந்தனர். இதையடுத்து தான் வங்கதேசம் என்ற தனிநாடு உருவானது. இதனை தான் நம் நாட்டின் பிரதிநிதி குறிப்பிட்டு பாகிஸ்தானின் மூக்கை உடைத்தார்.

அதேபோல், சமீபத்தில்,கைபர் பக்துங்க்வா மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பாகிஸ்தான் ராணுவம் குண்டு வீசியது. இதில் குழந்தைகள் உட்பட அப்பாவி மக்கள் 30 பேர் வரை இறந்தனர். இதனை தான் நம் நாட்டின் பிரதிநிதி சுட்டிக்காட்டி விளாசி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+