உலகில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 31 லட்சத்தை தாண்டியது.. அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: உலகில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 31 லட்சத்தை தாண்டியது. அதாவது அந்த எண்ணிக்கை 31,36,507 ஆக உயர்ந்துள்ளது.

Recommended Video

    அமெரிக்காவில் நிலைமை எப்படி இருக்கிறது என்று விளக்குகிறார் சகாய தேவி

    கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் உலக நாடுகள் கவலைக் கொள்கின்றன. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 31,36,507 ஆக உயர்ந்துள்ளது.

    Globally 31 lakhs and above are affected by corona

    கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 2,17,813 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 9,53,321 ஆனது. இந்த 31 லட்சம் பேரில் 19,65,373 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    19.08 லட்சம் பேருக்கு லேசான அறிகுறிகளே உள்ளதால் அச்சப்பட தேவையில்லை. இது 97 சதவீதமாகும். 56,970 பேர் மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனையில் உள்ளனர். இது 3 சதவீதம் ஆகும்.

    அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,35,765 ஆக உயர்ந்துள்ளது. அங்கு பலியானோரின் எண்ணிக்கை 59,266 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 25,409 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. இங்கு குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,42,238 ஆகும்.

    ஸ்பெயின் நாட்டை எடுத்துக் கொண்டால் 2,32,128 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. அவர்களில் 23,822 பேர் பலியாகிவிட்டனர். குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,23,903 ஆக உள்ளது. புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,706 ஆக உள்ளது. இத்தாலியில் 2,01,505 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுள் 27,359 பேர் பலியாகிவிட்டனர், குணமடைந்தோர் எண்ணிக்கை 68,941 ஆக உள்ளது.

    பிரான்ஸ் நாட்டில் 1,65,911 பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர். அவர்களில் 23,660 பேர் பலியாகிவிட்டனர். 46,886 பேர் குணமடைந்துள்ளனர். பிரிட்டனில் 1,61,145 பேருக்கு கொரோனா உள்ளது. இங்கு 21,678 பேர் பலியாகிவிட்டனர்.ஜெர்மனியில் 1,59,912 பேருக்கு கொரோனா. இங்கு 6,314 பேர் பலியாகிவிட்டனர். 1,17,400 பேர் குணமடைந்துள்ளனர்.

    சிங்கப்பூரில் கொரோனா பாதித்தோர் எண்ணிர்ரை 14,951 ஆக உள்ளது. இங்கு இதுவரை 14 பேர் பலியாகிவிட்டனர். 1,128 பேர் குணமடைந்துள்ளனர். ஜப்பானில் 13,376 பேருக்கு கொரோனா உள்ளது. இங்கு 394 பேர் பலியாகிவிட்டனர். 1,899 பேர் குணமடைந்துள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+