அமெரிக்காவை விட்டு போங்க.. இனவெறி பாகுபாடுடன் விவேக் ராமசாமிக்கு எதிர்ப்பு.. H1B விசாவால் சிக்கல்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: இந்திய வம்சாவளியான தொழிலதிபரும், டொனால்ட் டிரம்புக்கு நெருக்கமானவராகவும் இருக்கும் விவேக் ராமசாமி தனது மனைவி அபூர்வாவுடன் 10 ம் ஆண்டு திருமண நாளை கொண்டாடினார். இதுதொடர்பான போட்டோவை அவர் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த நிலையில் எச்-1பி விசா விவகாரத்தில் அமெரிக்காவை விட்டு வெளியேறும்படி நெட்டிசன்கள் இனவெறியுடன் கருத்து தெரிவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் உள்ளார். இவர் பொறுப்பேற்றது முதல் பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இவர் பொறுப்பேற்றது முதல் அமெரிக்க குடியுரிமை முதல் எச்-1பி விசாவில் அமெரிக்காவி்ல தங்கி பணியாற்றும் வெளிநாட்டினர் பதற்றத்திலேயே இருந்து வருகின்றனர்.

us donald trump Vivek Ramaswamy

அமெரிக்காவின் பணிகள் அமெரிக்கர்களுக்கு தான். வெளிநாடுகளில் இருந்து அமெரிக்கா வந்த பலரும் அமெரிக்கர்களின் வேலைகளை பறிப்பதாக டிரம்ப் ஏற்கனவே கூறியிருந்தார். இதனால் டிரம்ப் பதவியேற்றது முதல் அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டினர் பயத்திலேயே உள்ளனர்.

அமெரிக்காவை பொறுத்தவரை எச்-1பி விசா என்பது பிற நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் தங்கி பணியாற்றுவதற்கு வசதியாக வழங்கப்படும். இந்த விசாவால் தான் வெளிநாட்டினர் அமெரிக்காவில் வேலை பெறுகின்றனர் என்பது டிரம்பின் குற்றச்சாட்டாக உள்ளது. இதனால் இந்த விசா நடைமுறைக்கு செக் வைக்கும் வகையில் அவர் செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் தான் தற்போது இந்திய வம்சாவளியும், தொழிலதிபருமான விவேக் ராமசாமிக்கு எதிராக நெட்டிசன்கள் திரும்பி உள்ளனர். விவேக் ராமசாமி குடியரசு கட்சியை சேர்ந்தவர். டொனால்ட் டிரம்புக்கு மிகவும் நெருக்கமானவர். இவர் அதிபர் தேர்தலில் போட்டியிட முடிவு செய்திருந்தார். அதன்பிறகு அதில் இருந்து பின்வாங்கினார். இந்நிலையில் தான் விவேக் ராமசாமி தனது மனைவி அபூர்வாவுடன் 10ம் ஆண்டு திருமண நாளை கொண்டாடினார்.

இதுதொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் 2 போட்டோக்களை வெளியிட்டார். ஒன்று அவர் தனது மனைவி அபூர்வாவை காதலித்து முதல் முறையாக டேட்டிங் அழைத்து சென்றபோது எடுத்த போட்டோ. இன்னொன்று அவர்களின் சமீபத்திய போட்டோ. இந்த பதிவில், ‛‛ஒரு பனிப்புயல் தாக்கியபோது நாங்கள் உச்சியில் இருந்து குறிப்பிடத்தக்க தொலைவில் இருந்தோம்.அவள் என் கையை பிடித்து என் கண்களை பார்த்து இங்கு வர இன்னும் நம் வாழ்நாள் முழுவதும் உள்ளது எனக்கூறி முடித்தார். 14 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது 2 குழந்தைகள் உள்ளனர். இந்த வார இறுதியில் எங்களின் ஆண்டு திருமண ஆண்டு விழாவைக் கொண்டாட நாங்கள் இறுதியாக மீண்டும் திரும்பி வந்தோம்.வாழ்க்கையின் அன்புக்கும், எங்கள் பயணத்தின் ஒவ்வொரு நாளுக்கும் நான் நன்றி கூறி கொள்கிறேன்'' என்றார்.

இந்த பதிவுக்கு தான் தற்போது நெட்டிசன்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் இன வெறியுடன் பலரும் விவேக் ராமசாமி - அபூர்வா ஜோடியை இந்தியாவுக்கு திரும்பி செல்லுங்கள் என்று go back to India என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். ஒருவர், ‛தயவுசெய்து இந்தியாவுக்குத் திரும்பிச் சென்று அங்குள்ள மலையேற்றங்களை ஆராயுங்கள்'' என்று ஒருவர் கூறியுள்ளார். இன்னொருவரோ, ‛‛உங்களின் சொந்த நாட்டில் மலைகள் இல்லையா?" என்று கேள்வி எழுப்பி உள்ளார். மற்றொருவரோ, ‛‛உங்களை நாடு கடத்த வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இன்னொருவரும் இனவெறி மற்றும் நிறவெறியுடன் கருத்து தெரிவித்துள்ளார். "நீங்கள் இருவரும் ஏன் 3-4 நிழல்கள் ஒன்றாக இருப்பது போல் தெரிகிறீர்கள்? உங்கள் தோலை வெண்மையாக மாற்ற பிளீச் செய்யவில்லை? என்று வன்மத்தை கக்கியுள்ளார். விவேக் ராமசாமியின் இந்த எதிர்ப்புக்கு முக்கிய காரணம் அவர் எச்-1 பி விசா திட்டத்தை எதிர்ப்பது தான். எச் -1பி விசா திட்டத்தை நிறுத்த வேண்டும் என்று அவர் கூறி வருகிறார். தொடர்ந்து எச் 1 பி விசா திட்டத்துக்கு எதிராக மேடைகளில் பேசி வருவதால் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+