1 கிராமாவது உடனே வாங்குங்க! தங்கத்தை இனி நினைச்சு கூட பார்க்க முடியாது? ஏடாகூட வேலை பார்த்த ட்ரம்ப்!
நியூயார்க்: அமெரிக்கா அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு பல்வேறு உலக நாடுகளுக்கு எதிராக பதிலுக்கு பதில் வரி விதிப்பை அமல்படுத்தி உள்ளார். இந்த நிலையில் உலக அளவில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று காலை இந்தியாவில் தங்கத்தின் விலை 10 கிராம் 88 ஆயிரத்து 790 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அமல்படுத்திய வரிக் கொள்கைகள் மற்றும் அதனால் ஏற்பட்ட பொருளாதார தாக்கம் தான் என்கின்ற பொருளாதார வல்லுநர்கள். மேலும், தங்கத்தில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் இப்போதே செய்து கொள்ள வேண்டும் எனவும் வரும் காலங்களில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை மேலும் அதிகரிக்கலாம் என எச்சரிக்கின்றனர்.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றிருக்கும் நிலையில் உலக அளவில் பொருளாதார ரீதியாக பல்வேறு அதிரடி மாற்றங்கள் அரங்கேறி வருகிறது. குறிப்பாக இந்தியா உள்ளிட்ட நட்பு நாடுகள் மீது வரி விதிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

சீனா, மெக்ஸிகோ, கனடா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் தங்கள் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு விதிக்கும் அதே அளவு வரியை அவர்கள் ஏற்றுமதி செய்யும் பொருள்களுக்கும் விதிக்கப்படும் எனக் கூறியிருக்கிறார். இதற்கு சீனா உள்ளிட்ட நாடுகள் கடுமையாக எதிர் வினையாற்றி வருகின்றனர்.
மேலும், ஐரோப்பிய யூனியன் அமெரிக்க பொருள்களுக்கு வரி விதிப்பை அதிகப்படுத்தியது. அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஒயின், ஷாம்பெய்ன் உள்ளிட்ட மது வகைகளுக்கு 200 சதவீத வரியை டொனால்ட் ட்ரம்ப் வித்திருக்கிறார். இதனால் பல்வேறு நாடுகள் பொருளாதார போரை எதிர்கொண்டுள்ளன. இது போன்ற உலக அளவில் பொருளாதாரப் பிரச்சினைகள் ஏற்படும் போது பாதுகாப்பான முதலீடாக தங்கம் இருக்கிறது.
தற்போது டொனால்ட் டிரம்பின் வரிவிதிப்பு கொள்கையால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளதோடு மக்கள் தங்கத்தை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். மேலும் அதிக அளவில் மக்களும் தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றனர். அமெரிக்கா அதிபராக டொனால்ட் டிரம்ப் ஜனவரி மாதம் பதவியேற்ற நிலையில் 15-க்கும் மேற்பட்ட முறை தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது. இந்த நிலையில் இந்தியாவிலும் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இன்று காலை வர்த்தகம் தொடங்கிய போது 10 கிராம் தங்கத்தின் விலை 88,790 ரூபாயாக இருந்தது. மும்பை எம்சிஎக்ஸ் சந்தையில் கோல்ட் ப்யூச்சர்ஸ் எனப்படும் தங்க ஒப்பந்தங்கள் 0.54 சதவீதம் உயர்ந்து 88 ஆயிரத்து 865 ரூபாயாக இருந்தது. இந்த நிலையில், சர்வதேச சந்தையிலும் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக கூறியுள்ளது. இதுவரை இல்லாத அளவாக அமெரிக்காவில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3077.44 டாலராக அதிகரித்து இருக்கிறது.
அமெரிக்கா தனது வாணிப கொள்கைகளை கடுமையாக்கியுள்ளதால், பல நாடுகளும் பதிலடி நடவடிக்கைகள் எடுக்கலாம் என்ற அச்சம் அதிகரித்துள்ளது. இதனால், உலக பொருளாதாரம் பாதிக்கப்படும் நிலை உருவாகியதால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை அதிகம் வாங்கத் தொடங்கியுள்ளனர். மேலும், அமெரிக்கா தனது வாகன இறக்குமதிக்கு 25% வரி விதித்துள்ளதால், மற்ற நாடுகளும் தங்கள் வரிகளை உயர்த்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
மொத்தமாக, 2025 தொடங்கி தங்கம் 15% மேல் விலை உயர்வு கண்டுள்ள நிஉலையில், சர்வதேச சந்தை நிபுணர்கள் தங்கத்தின் விலை இன்னும் உயர வாய்ப்பு உள்ளதாகக் கூறுகின்றனர். தற்போது தங்கத்திற்கு 3,050 முதல் 3,110 டாலர் என்ற அளவில் நிலைத் தன்மை உள்ளது. இந்திய சந்தையில் 88,270 முதல் 88,990 வரை விலை உள்ளதால், இன்னும் சில நாட்களில் புதிய உச்சத்தை எட்டலாம் என கணிக்கப்பட்டுள்ளது. தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது. தற்போதைய சூழலில் வெள்ளி ஒரு அவுன்ஸ் 34.40 டாலர் என்ற அளவிலும், இந்திய சந்தையில் 1,02,950 ரூபார் என்ற அளவில் உள்ளது. மொத்தத்தில், தங்கத்தின் விலை உயர்வது முதலீட்டாளர்களுக்கு லாபகரமாக இருக்கலாம் எனவும், ஆனால் பொதுமக்கள் மற்றும் நகைக்கடைகளுக்கு இது ஒரு சவாலாக மாறும் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.
-
அமெரிக்காவில் ஹைதராபாத் இளைஞர் ஜாலி சுற்றுலா.. 3 பேரை காப்பாற்றியவருக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications