சுந்தர் பிச்சை சென்னை வீடு விற்பனை.. கலங்கி நின்ற கூகுள் சிஇஓ தந்தை.. வாங்கியது தமிழ் சினிமா நடிகர்
வாஷிங்டன்: கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை பிறந்து வளர்ந்த சென்னை வீடு இப்போது விற்கப்பட்டுள்ளது. அதை வாங்கியது யார் என்ன என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
நவீன உலகில் எல்லாமே இணைய வசம் என்றே இருக்கிறது. இப்போது A டீ Z வரை அனைத்துமே இணைய வசம் சென்று கொண்டிருக்கிறது. ஷாப்பிங்க முதல் டேட்டிங் எல்லாமே இணையத்தில் செய்ய முடிகிறது.
இதனால் டெக் நிறுவனங்களின் கையே ஓங்கி வருகிறது. தற்போதைய சூழலில் கூகுள், பேஸ்புக், ஆப்பிள் போன்ற டெக் நிறுவனங்கள் தான் உலகளவில் அதிக வருவாயை ஈட்டும் டாப் நிறுவனங்களாக இருக்கிறது..

சுந்தர் பிச்சை: அப்படி டாப் டெக் நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் கூகுள் நிறுவனத்தின் சிஇஓ ஆக இப்போது இருப்பவர் சுந்தர் பிச்சை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். சுந்தர் பிச்சை சென்னையில் தான் பள்ளிப் படிப்பை முடித்தார். அதைத் தொடர்ந்து கரக்பூர் ஐஐடி, ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பையும் அவர் முடித்தார். அவர் முதலில் 2004 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் இணைந்தார்.
கூகிள் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சாப்ட்வேர் பிரிவில் அவர் பணியாற்றினார். தொடர்ந்து பல ஆண்டுகள் அங்கே வேலை செய்த அவர், பல்வேறு பொறுப்புகளை வகித்து கூகுள் சிஇஓ பதவிக்கு உயர்ந்துள்ளார். இதனிடையே சென்னையின் அசோக் நகரிலுள்ள கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையின் பரம்பரை வீடு குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆச்சரியம்: தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வரும் அந்த நபர், சென்னையின் அசோக் நகரின் அந்துள்ள சுந்தர் பிச்சையின் வீட்டை வாங்கியதாகக் கூறப்படுகிறது. நடிகர்-தயாரிப்பாளரான மணிகண்டன் இந்த வீட்டை வாங்கியதாக ஹிந்து பிசினஸில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
சுந்தர் பிச்சையின் பெற்றோரின் தன்னிடம் நடந்து கொண்ட விதம் ஆச்சரியமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "சுந்தர் பிச்சையின் தாயார் அவரே ஃபில்டர் காபி போட்டுத் தந்தார். அவருடைய அப்பா முதல் சந்திப்பிலேயே தேவையான ஆவணங்களை வழங்கினார். அவர்களின் இந்த அணுகுமுறை எனக்குப் பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது.
காத்திருந்தார்: எந்த இடத்திலும் சுந்தர் பிச்சையின் பெயரைப் பயன்படுத்தக் கூடாது என்பதில் அவரது தந்தை உறுதியாக இருந்தார். இதனால் அவரது தந்தை பதிவு அலுவலகத்தில் மணிக்கணக்கில் காத்திருந்தார்.. ஆவணங்களை என்னிடம் ஒப்படைப்பதற்கு முன்பு தேவையான அனைத்து வரிகளையும் முறையாகச் செலுத்தினார்" என்றார்.
மணிகண்டன் ஒரு ரியல் எஸ்டேட் அதிபர் என்றும், அவர் தனது செல்லப்பாஸ் பில்டர்ஸ் நிறுவனம் மூலம் சென்னையில் சுமார் 300 வீடுகளைக் கட்டி டெலிவரி செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சுந்தர் பிச்சை பிறந்து வளர்ந்தது எல்லாம் இந்த வீடு தான் என்பது தெரிந்த உடன் அசோக் நகரில் அமைந்துள்ள அந்த வீட்டை வாங்கியே தீர வேண்டும் என்று மணிகண்டன் முடிவு செய்துவிட்டாராம். சென்னையில் பிறந்து வளர்ந்த சுந்தர் பிச்சை, 1989 ஆம் ஆண்டு ஐஐடி காரக்பூரில் படிக்கச் சென்னையை விட்டு வெளியேறினார். "சுந்தர் பிச்சை நம் நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளார், அவர் வாழ்ந்த வீட்டை வாங்குவது என் வாழ்வின் பெருமைக்குரிய சாதனையாக இருக்கும்" என்று மணிகண்டன் தெரிவித்தார்.
கலங்கிய தந்தை: அந்த வீட்டை அவரது தந்தையே அவரது சொந்த செலவில் முழுமையாக இடித்து, அந்த இடத்தில் வீடுகளைக் கட்ட மணிகண்டனிடம் ஒப்படைத்துள்ளார். இதுதான் சுந்தர் பிச்சையின் தந்தை முதலில் வாங்கிய சொத்தாம். இதனால், அந்த ஆவணங்களை ஒப்படைக்கும் போது சில நிமிடங்கள் அவர் உடைந்துவிட்டாராம்.
இந்த இடத்தில் மணிகண்டன் வில்லா கட்ட உள்ளார், அதற்கான கட்டுமான பணிகள் மூன்றரை ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications