அமெரிக்க அதிபராகும் டிரம்பின் பதவியேற்பு விழாவுக்காக வாரி வழங்கிய கூகுள்.. எவ்வளவு கோடி தெரியுமா?
வாஷிங்டன்: அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு டிரம்ப் வரும் ஜனவரி 20ம் தேதி பதவியேற்க உள்ளார். அமெரிக்க நாடாளுமன்றத்தில் இதற்கான விழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில் டிரம்பின் பதவியேற்பு விழாவுக்கான நிதியை கூகுள் நிறுவனம் வாரி வழங்கி உள்ளது. இதன்படி அமெரிக்காவின் அதிபராக டிரம்ப் பதவியேற்கும் விழாவிற்கு நன்கொடையாக ரூ.8 கோடியே 58 லட்சம் வழங்கி உள்ளது.
அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளரான டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். இந்த நிலையில், அவருக்கான அதிகாரப்பூர்வ வெற்றிச் சான்றிதழ் கடந்த ஜனவரி 6ம் தேதி அந்நாட்டு நாடாளுமன்றத்தால் வழங்கப்பட்டது.

கடந்த ஜனவரி 6ம் தேதி நாடாளுமன்றம் கூடிய நிலையில், அந்த அவையில், செனட் வாக்குகள் கடைசி முறையாக எண்ணப்பட்டன. அதனைத் தொடர்ந்து, முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, 312 வாக்குகளைப் பெற்று டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டது.
அமெரிக்காவின் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் 226 வாக்குகளைப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
டிரம்ப் வெற்றி பெற்றதற்கு எதிராக எவ்வித எதிர்ப்பும் ஆட்சேபனையும் தெரிவிக்கப்படவில்லை.. இதையடுத்து, டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றதாக கமலா ஹாரிஸ் அதிகாரப்பூர்வமாக நாடாளுமன்றத்தில் அறிவித்தார். தொடர்ந்து அவருக்கான அதிகாரப்பூர்வ வெற்றிச் சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில், வருகிற 20-ந் தேதி அமெரிக்காவின் 47-வது அதிபராக டிரம்ப் பதவியேற்க உள்ளார்.
டொனால்டு டிரம்பின் பதவியேற்பு விழா அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. உலகின் பல்வேறு நாட்டு தலைவர்களுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் டிரம்பின் பதவியேற்பு விழாவுக்கான நிதியை அமெரிக்காவில் பல்வேறு ஐடி நிறுவனங்கள் வாரி வழங்கி வருகின்றன.
அந்த வகையில் கூகுள் நிறுவனம் டொனால்டு டிரம்பின் பதவியேற்பு விழாவுக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலரை (சுமார் ரூ.8 கோடியே 58 லட்சம்) நன்கொடையாக வழங்கி இருக்கிறது. இதே போல உலக புகழ் பெற்ற விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் நிறுவனமும் 1 மில்லியன் அமெரிக்க டாலர் நன்கொடை அளித்திருக்கிறது.
-
கதையை முடிக்க அமெரிக்கா போடும் பிளான்.. கறார் காட்டும் ஈரான்! டிரம்புக்கு செக்! -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
"எங்களை ரஷ்ய கச்சா எண்ணெய்யை வாங்க சொன்னதே அமெரிக்கா தான்.." ரகசியத்தை உடைத்த இந்தியா! என்ன நடந்தது -
மீண்டும் டிரம்ப் அடித்த பல்டி! "எல்லாம் நல்லா போகுது.. தாக்குதல் கேன்சல்!" உற்று பார்க்கும் ஈரான் -
ஈரான் - அமெரிக்கா போர் முடிவுக்கு வருகிறது? 24 மணி நேரத்தில்.. பாகிஸ்தான் பிரதமர் முக்கிய அறிவிப்பு -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
"ஹார்முஸை நெருங்கினாலே சரமாரி தாக்குதல் நடத்துவோம்.." அச்சுறுத்தும் ஈரான்.. அமைதி ஒப்பந்தம் காலி -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications