3 ஆயிரம் ஆடுகளுக்கு ஜாப்! கூகுள் கம்பெனி கொடுத்த அப்பாயின்ட்மென்ட் ஆர்டர்! என்ன வேலையாம் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள கூகுள் நிறுவன அலுவலக தோட்டத்தில் பணிபுரிவதற்காக 3 ஆயிரம் ஆடுகளுக்கு வேலை வழங்கியிருப்பது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

தற்போதைய இணைய உலகில் கூகுள் நிறுவனத்தை அறியாதவரே இருக்க முடியாது.

இணைய தேடுபொறி நிறுவனங்கள் எத்தனையோ இருந்தாலும் அதையெல்லாம் விட பல மடங்கு இணையத்தில் ஆதிக்கம் செலுத்தி வருவது கூகுள் மட்டுமே.

 கூகுள் நிறுவனம்

கூகுள் நிறுவனம்

யாகூ போன்ற தேடுபொறி நிறுவனங்கள் அதற்கு அடுத்ததாக வருகின்றன. அதேபோல், ஆண்ட்ராய்டு போன்களில் வேற லெவல் உச்சத்தை கூகுள் நிறுவனம் எட்டியது. இப்படி இணைய உலகில் தனி ஆதிக்கம் செலுத்தி வரும் கூகுள் நிறுவனத்தின் தலைமையகம் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ளது. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் இந்த நிறுவனம் ஊழியர்களுக்கு சகல வசதிகளையும் லட்சக்கணக்கில் சம்பளத்தையும் அளிக்கிறது.

கனவு பணியிடங்களில் ஒன்று

கனவு பணியிடங்களில் ஒன்று

இதனால், இந்த நிறுவனத்தில் பணியாற்றுவது என்பது பல இளைஞர்களின் கனவுகளில் ஒன்றே என சொல்லலாம். இப்படி இளைய தலைமுறையினரின் கனவு பணியிடங்களில் ஒன்றாக விளங்கும் கூகுள் தற்போது ஆடுகளை பணியில் அமர்த்தியிருக்கிறதாம். மனிதர்களின் வேலையை எளிதாக்க ரோபோட்கள் வேலைக்கு அமர்த்தப்படுவதை கேள்வி பட்டு இருக்கிறோம்.

ஆடுகளுக்கு வேலை

ஆடுகளுக்கு வேலை

அது என்னது... ஆடுகளா? என வியப்போடு கேட்பது எங்களுக்கு தெரிகிறது. ஆனால், இதுதான் உண்மையும் கூட... கூகுள் நிறுவனத்தில் ஆடுகளுக்கு என்ன வேலை இருக்கிறது என்று முனுமுனுப்பதும் கேட்காமல் இல்லை.. உங்கள் சந்தேகங்களுக்கான விளக்கத்தை விரிவாக சொல்கிறோம்.. பரந்து விரிந்து பல ஏக்கர் பரப்பளவில் கூகுள் நிறுவனம் அமைந்துள்ளது. அதன் வளாகங்களில் பல இடங்களில் புல்தரைகள் உள்ளன.

3500 ஆடுகள் வாடகைக்கு வாங்கப்பட்டுள்ளது

3500 ஆடுகள் வாடகைக்கு வாங்கப்பட்டுள்ளது

இந்த புல் தரைகளை சீராக பராமரிக்கும் பணிகளுக்காக 3,500 ஆடுகளை கூகுள் நிறுவனம் வாடகைக்கு வாங்கியுள்ளது. இந்த ஆடுகளை அதில் மேய வைத்து புல்தரைகளை சீராக பராமரிக்க முடிவு செய்துள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள கூகுள் நிறுவனத்தில் பல ஏக்கர் பரப்பளவில் விரிந்துள்ள தோட்டத்தில் இருக்கும் புல் தரைகளை சீரமைக்க கூகுள் நிறுவனம் சுமார் 3,500 ஆடுகளுக்கு வேலை வழங்கியுள்ளது.

 இயற்கைச்சூழலை

இயற்கைச்சூழலை

மேலும் பெட்ரோல் மற்றும் டீசலினால் இயங்கும் மிஷின்களை பயன்படுத்தி புல் தரைகளை சீரமைக்காமல் இயற்கையான முறையில் இயற்கைச்சூழலை பாதுகாக்க கூகுள் நிறுவனம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் கூகுள் நிறுவனம் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+