காங்கிரஸுடன் கை கோர்க்கும் கரப்பான் பூச்சி ஜனதா? மோடி அரசுக்கு உச்சக்கட்ட நெருக்கடி! பரபர டெல்லி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தேர்தல் முறைகேடு மற்றும் வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகளுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டத்தை தீவிரப்படுத்தி வரும் நிலையில், அரசியல் கட்சிகளை தாண்டி மாணவர் அமைப்புகள் மற்றும் சிவில் அமைப்புகளை ஒன்றிணைத்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார். இதனால் காங்கிரஸுடன் கரப்பான் பூச்சி கட்சியும் போராட்டத்தில் இணையலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

நாடு முழுக்க தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது. எஸ்ஐஆர் உள்ளிட்ட விவகாரங்களில் அவர் தன்னிச்சையாக செயல்பட்டார் என்பதே அவர் மீதான பிரதான குற்றச்சாட்டாகும். இதை முன்வைத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

Rahul Gandhi Protest Against Election Commission Election Commission cockroach janata party

பேரணி

இதற்கிடையே ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் நேற்றைய தினம் சுப்ரீம் கோர்ட் நோக்கி பேரணி நடத்தியிருந்தனர். தொடர்ந்து எஸ்ஐஆர் மற்றும் தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் கூட்டாக மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. இந்தப் பேரணியில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, அகிலேஷ் யாதவ், மம்தா பானர்ஜி, டி. ராஜா, எம்.ஏ. பேபி, தேஜஸ்வி யாதவ், சுப்ரியா சுலே உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்றனர்.

ராகுல் காந்தி

இன்றைய தினம் எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி, தனது இல்லத்தில் தேநீர் மீட்டிங்கிற்கு அழைப்பு விடுத்துள்ளார். அடுத்தக்கட்ட போராட்டத்திற்கு அரசியல் கட்சிகளை தாண்டி மக்கள் இயக்கத்தையும் கொண்டு வர ராகுல் திட்டமிட்டுவதாக தெரிகிறது. இதன் காரணமாகவே இந்தியா கூட்டணி தலைவர்கள், எதிர்க்கட்சி எம்பிக்கள் மட்டுமின்றி, மாணவர் அமைப்புகள் மற்றும் மக்கள் இயக்க்ததை சேர்ந்தவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான மக்கள் இயக்கத்தில் அனைவரும் ஒன்றாக இருப்பதாகவும், இந்த இயக்கம் தொடர்ந்து தீவிரமாக முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், "டீ மீட்டிங்கிற்கு பிறகு அனைவரும் ஒன்றாக ஊடகங்களை சந்தித்து எங்கள் நிலைப்பாட்டை முன்வைக்க போகிறோம். அனைத்து போராட்டங்களும் ஒன்றுதான்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆலோசனை

வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்படும் சிறப்புத் தீவிர திருத்தம் மற்றும் தேர்தல் முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த விவகாரத்தை அடுத்து எப்படி எடுத்து செல்லலாம்.. அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து போராட்டங்களை முன்னெடுப்பதற்கான வியூகங்கள் குறித்தும் ராகுல் காந்தியின் இல்லத்தில் நடைபெறும் சந்திப்பில் ஆலோசிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கரப்பான் பூச்சி ஜனதா

ராகுல் காந்தி தனது அழைப்பில் மாணவர் அமைப்புகள் மற்றும் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்களையும் குறிப்பிட்டிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது. ஏனென்றால் நீட், தேர்தல் ஆணைய விவகாரத்தில் கரப்பான் பூச்சி கட்சி தீவிரமாக போராட்டத்தை முன்னெடுத்து இருந்தது. இருப்பினும், கரப்பான் பூச்சி கட்சி இயக்கத்தோடு காங்கிரஸ் இணைந்து போராடவில்லை. தனது போராட்டங்களிலிருந்து தனியே வைத்திருந்த நிலையில், தற்போது பல்வேறு அமைப்புகளையும் ஒரே இயக்கத்தின் கீழ் கொண்டுவரும் முயற்சி முன்னெடுக்கப்படுவதாக தெரிகிறது.

கரப்பான் பூச்சி கட்சி இதுவரை ஒரு கட்சியாக பதிவு செய்யப்படவில்லை. அது மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அமைப்பாகவே இருக்கிறது. இந்த அமைப்புக்கு டீ மீட்டிங்கிற்கான பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்த உறுதியான தகவல் வெளியாகவில்லை. அந்த அமைப்பு போராட்டத்தில் இணையுமா என்பதும் இன்னும் தெளிவாகவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+