கோடீஸ்வர யோகம் தேடி வருகிறதா?.. மேஷ ராசிக்கு குரு அதிசார பெயர்ச்சி தரப்போகும் அதிர்ஷ்டம்!

Subscribe to Oneindia Tamil

குரு அதிசார பெயர்ச்சி 2026: கடக ராசியில் இருக்கும் குரு பகவான் அங்கிருந்து சிம்ம ராசிக்கு அதிசாரமாக செல்கிறார். இந்த குரு அதிசாரப் பெயர்ச்சியாகும் காலகட்டத்தில் மேஷ ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

அக்டோபர் 31 ஆம் தேதி கடக ராசியில் உச்சம் பெற்றிருக்கும் குரு பகவான் சிம்ம ராசிக்கு குரு அதிசாரப் பெயர்ச்சியாகிறார். இந்த குரு அதிசாரப் பெயர்ச்சியானது 12 ராசிகளில் சில ராசிக்கு அற்புதமான பலன்களையும், ஒரு சில ராசிக்கு அசுப பலன்களையும் கொடுக்கப் போகிறார்.

guru-adhisara-peyarchi-what-kind-of-benefits-will-get-mesham-rasi-people-in-this-period

தனுசு, கும்பம், மேஷம், சிம்மம் ஆகிய 4 ராசியினருக்கு பிரம்மாண்ட மாற்றம், முன்னேற்படும் ஏற்படும் காலகட்டமாக இருக்கும். துலாம் ராசியினருக்கு கண்டிப்பாக மிகப்பெரிய ஜாக்பாட் கிடைக்கும். மேஷ ராசியினருக்கு என்ன விதமான பலன்களை குரு பகவான் கொடுக்கப் போகிறார் என்பது குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

மேஷம் ராசி பலன்

மேஷ ராசியினருக்கு குரு பகவான் அதிசாரமாக கேது நட்சத்திர சாரமான மகம் நட்சத்திரத்திற்கு செல்லப் போகிறார். 18, 20 நாட்கள் அங்கிருந்து வக்கிரமாகி திரும்பி வந்துவிடுவார். இதனால், 84 நாட்கள் அற்புதமான யோகங்கள் கிடைக்கும். குரு அதிசாரமாவதால் அற்புதமான பலன்கள் கிடைக்கும். ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் நிவர்த்தியாகும்.

திருமணம்

குழந்தைகள் சம்பந்தப்பட்ட விஷயங்களில், மனதளவில் பெரிய மாற்றங்கள் ஏற்படும். திருமணம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் எல்லாம் நடக்க ஆரம்பிக்கும். உறுதி செய்வது போன்ற சுப நிகழ்வுகள் நடக்கும். மேல் படிப்பு, உச்ச படிப்பில் உள்ள கஷ்டங்கள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும். சரியான நேரத்தில் சீட் கிடைக்கும். பண வரவு அற்புதமாக இருக்கும்.

பயணங்கள்

குரு அதிசாராமாக மாறுவதால் தெய்வ பக்தி அதிகரிக்கும். திருமண யோகம் ஏற்படும். நிறைய பயணங்களை மேற்கொள்வீர்கள். ஆன்மீக சுற்றுலா செல்லும் யோகம் ஏற்படும். போன ஜென்மத்தில் பிறந்த இடங்களுக்குச் சென்று வரும் அமைப்புள்ளது. பாக்கிய ஸ்தானம், லாப ஸ்தானம், லக்கினத்திற்கு குரு பார்வை இருப்பதால் தெய்வ அனுக்கிரகம் உண்டாகும்.

சொத்துக்கள் குவியும்

அப்பாவின் சொத்துக்கள், முன்னோர் சொத்துக்கள் கிடைக்கும். வழக்குகள் முடியும். கோயில்களில் செய்ய வேண்டிய பூஜைகளை செய்து முடிப்பீர்கள். நண்பர்கள் மூலமாக நல்ல விஷயங்கள் நடக்கும். மூத்தவர்களால் நல்ல விஷயங்கள் நடக்கும். எதிர்பார்த்துக் காத்திருக்கும் பெரும் பணம் வந்து சேரும். குரு கேது இணைந்திருப்பதால் கோடீஸ்வர யோகத்தைக் கொடுக்கும்.

வழிபாடு

தாய் வழி உறவினர்கள், முன்னோர்கள், அப்பா வழி உறவினர்கள், முன்னோர்கள் வழி கிடைக்க வேண்டிய விஷயங்கள் எல்லாம் வந்து சேரும். நிறைய பேருக்கு பதவி உயர்வு கிடைக்கும். 95 சதவீத நன்மைகள் கிடைக்கும். அடுத்த 3 மாதங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை தோறும் ராஜ கணபதிக்கு அபிஷேகத்திற்கு கொடுப்பது, தேன் கொடுப்பது மேன்மையைத் தரும்.

கவனம்

குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. கொழுப்பு தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. ரத்த பந்த உறவுகளில் யாருக்காவது சிறு ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. கடன்கள் தீரக்கூடிய அமைப்பு உள்ளது. திருமணம் இந்த காலகட்டத்தில் உறுதியாகும். நிலம் வாங்கும் அமைப்புள்ளது. முன்னோர்களின் சொத்துகளில் இருக்கும் வழக்குகள் முடியும். வெளிநாடு செல்லும் அமைப்பு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+