3.2 கோடி கொசுக்களை ஊருக்குள் விடப் போகும் கூகுள்! பின்னணியில் மெகா ஸ்கெட்ச்! அமெரிக்கா அனுமதிக்குமா?
வாஷிங்டன்: அமெரிக்காவில் 3.2 கோடி கொசுக்களை பொது வெளியில் விடுவதற்கு கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.. என்னது கொசுவை விடுறாங்களா? எதுவும் தவறாக டைப் பண்ணிவிட்டார்களா என நினைக்க வேண்டாம்.. உண்மையில் அப்படியான ஒரு திட்டத்தைதான் கூகுள் வைத்துள்ளது.
இதற்காக பெரும் தொகையை செலவிடவும் கொசுக்களை விடுவதற்கு அமெரிக்க அரசிடம் அனுமதியும் கோரியுள்ளது. இப்படியான வினோத திட்டத்தை கூகுள் கையில் எடுத்து இருப்பது ஏன்? என்ற விவரங்களை பார்க்கலாம்.

3.2 கோடி கொசுக்களை விட கூகுள் திட்டம்
ஜிகா வைரஸ், டெங்கு என பல்வேறு நோய்கள் கொசுக்கள் மூலமே பரவுகிறது. ஒருவரிடம் இருந்து ரத்தத்தை உறிஞ்சும் கொசுக்கள், இன்னொரு நபரின் இரத்தத்தை குடிக்க செல்லும் போது இந்த வைரஸ்களையும் கடத்தி சென்றுவிடுகிறது. இதனால், வைரஸ்கள் பரவி உயிரிழப்பு கூட ஏற்படுகிறது.
எனவேதான் இத்தகைய நோய் பரப்பும் கொசுக்களின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில், சிறப்பு முறையில் தயாரிக்கப்பட்ட 3.2 கோடி (32 மில்லியன்) கொசுக்களை அமெரிக்காவின் கலிஃபோர்னியா மற்றும் புளோரிடா மாநிலங்களின் சில பகுதிகளில் வெளியிடுவதற்கு கூகுள் நிறுவனம் அனுமதி கோரியுள்ளது.
இந்த வித்தியாசமான திட்டம் இரண்டு ஆண்டுகள் கண்காணிக்கப்பட்டு, அதன் செயல்திறன் மற்றும் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது. பொதுவாக கொசுக்களை கட்டுப்படுத்தும் முயற்சிகள் அவற்றின் எண்ணிக்கையை குறைப்பதிலேயே கவனம் செலுத்தப்படுவது வழக்கம். உற்பத்தியாக விடாமல் அவை அழிக்கப்படுவதை பார்த்து இருப்போம். ஆனால், கூகுள் இப்படியான புதிய மாறுபட்ட அணுகுமுறையை ஆராய்ந்து வருகிறது.
இரண்டு ஆண்டுகளுக்குள்
இந்தத் திட்டத்திற்காக அமெரிக்க அரசு அமைப்புகளிடம், கலிஃபோர்னியா மற்றும் புளோரிடாவின் குறிப்பிட்ட பகுதிகளில் 3.2 கோடி கொசுக்களை வெளியிட அனுமதி கோரி கூகுள் விண்ணப்பித்துள்ளது. இந்தத் திட்டத்தின் நோக்கம் கொசுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது அல்ல. மாறாக, மனிதர்களுக்கு நோய்களை பரப்பும் கொசுக்களின் எண்ணிக்கையை குறைப்பதே ஆகும்.
இந்தத் திட்டம் ஒரே நேரத்தில் செயல்படுத்தப்படாது. அதற்கு பதிலாக, இரண்டு ஆண்டுகள் காலப்பகுதியில் பல்வேறு கட்டங்களாக கொசுக்கள் சுற்றுசூழலுக்குள் விடப்படும். இதன்மூலம் ஆய்வாளர்கள் திட்டத்தின் விளைவுகளை தொடர்ந்து கண்காணித்து, தேவையெனில் அதில் மாற்றங்களை மேற்கொள்ள முடியும். கொசுக்கள் வெளியிடப்படவுள்ள பகுதிகள், கொசுக்களால் பரவும் நோய்கள் அதிகளவில் பதிவாகியுள்ள இடங்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆண் கொசுக்கள் மட்டுமே விடப்படும்
இதன் மூலம் நோய் பரவலைக் குறைப்பதில் இந்த முயற்சி எவ்வளவு பயனுள்ளதாக உள்ளது என்பதை மதிப்பீடு செய்ய கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் பயன்படுத்தப்படவுள்ள கொசுக்கள், நோய்க்கிருமிகளை பரப்ப முடியாத வகையில் சிறப்பு முறையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது ஆண் கொசுக்கள் விடப்படுகின்றன. இந்த கொசுக்களுடன் இணையும் பெண் கொசுக்கள் இடும் முட்டைகள் பொரிக்காது என்பதால் காலப்போக்கில் கொசுக்களின் எண்ணிக்கை சரியும்.
இதன் மூலம், நோய்கள் பரவும் வாய்ப்பைக் குறைப்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். தீங்கு விளைவிக்கும் நோய்க்கிருமிகளை பரப்பக்கூடிய கொசுக்களின் எண்ணிக்கையைக் குறைப்பதன் மூலம், கொசுக்கள் மூலம் பரவும் நோய்களின் அபாயத்தையும் கட்டுப்படுத்த முடியும் என்று நம்பப்படுகிறது. இந்தத் திட்டத்திற்கு அனுமதி கிடைக்கும் பட்சத்தில், அடுத்த இரண்டு ஆண்டுகள் கொசுக்கள் வெளியிடப்படுவதால் ஏற்படும் விளைவுகளை நிறுவனம் தொடர்ந்து கண்காணிக்கும்.
கொசுவை வைத்து கொசுக்களை காலி செய்ய
அந்த ஆய்வின் மூலம் கிடைக்கும் தரவுகள் மற்றும் முடிவுகளின் அடிப்படையில், இதுபோன்ற திட்டங்களை எதிர்காலத்தில் விரிவுப்படுத்துவது அல்லது மாற்றங்கள் செய்வது குறித்து முடிவுகள் எடுக்கப்படும். முள்ளை முள்ளால் எடுப்பது என்பது போல, கொசுவை காலி செய்ய கொசுவையே களமிறக்கும் கூகுளின் இந்த திட்டம், தற்போது ஆய்வில் இருப்பதால், இதற்கு அமெரிக்க கட்டுப்பாட்டு அமைப்புகள் அனுமதி வழங்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் தாக்கம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆராய்ந்த பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. கொசுக்களை அழித்தால் அது சூழலியலில் வேறு விதமான பிரச்சினைகளை உருவாக்க கூடும் என்ற ஒரு கருத்தும் சமூக வலைத்தளங்களில் எழுப்பப்படுகிறது.
-
ஐபிஎல் முடிந்தது.. அடுத்த வேலையை பாருங்க.. உதய் கோட்டக் ட்வீட் கொடுத்த ஷாக் -
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக














Click it and Unblock the Notifications