பாட்டியை பார்க்க போனவருக்கு தேடி வந்த அதிர்ஷ்டம்.. லாட்டரியில் கொட்டிய ரூ.9 கோடி பரிசு மழை
வாஷிங்டன்: பாட்டியை பார்க்க போன நபருக்கு லாட்டரியில் அதிர்ஷ்டம் தேடி வந்து கொட்டியுள்ளது. அதுவும் ஒரு கோடி இரண்டு கோடி அல்லது மொத்தமாக ரூ.9 கோடி பரிசு அடித்துள்ளது. தன் பாட்டியை எதேச்சையாக கடையில் பார்த்த நிலையில் அங்கு வைத்து இந்த டிக்கெட்டை வாங்கியிருக்கிறார். லாட்டரி பரிசுத் தொகையை பெற்ற அந்த நபர் "எனது பாட்டியை திடீரென சந்தித்ததுதான் எனது அதிர்ஷ்டம்" என்று கூறியுள்ளார்.
லாட்டரியில் யாருக்கு எப்போது பரிசு அடிக்கும் என்றே தெரியாது. 'பல ஆண்டுகளாக லாட்டரி வாங்கி வருகிறேன். ஆனால், இதுவரை ஒருநாள் கூட பரிசு அடித்தது இல்லை. ஆனால் எனக்கு தெரிந்த ஒருவருக்கோ வாங்கிய முதல் லாட்டரி டிக்கெட்டிற்கே பரிசு அடித்துவிட்டது.. என சொல்வதை கேள்விப்பட்டிருப்போம்.

லாட்டரி பரிசு
இதைத்தான் அதிர்ஷ்டம் தேடி வந்து கதவை தட்டும் என்று சொல்வார்கள் போல.. என புலம்பிக்கொண்டே லாட்டரி கடை பக்கம் போகும் லாட்டரி பிரியர்கள் பலரை பார்த்து இருக்க கூடும். லாட்டரியில் யாரோ ஒருவருக்கு பரிசு அடிக்க பல லட்சம் பேர் லாட்டரிக்கு செலவழித்த தொகையை வேறு எதற்காவது பயனுள்ள வகையில் செலவு செய்து இருக்கலாம் என நினைத்துக்கொண்டு போக வேண்டியிருக்கும் என்பதுதான் எதார்த்தமான உண்மை.
பாட்டியை பார்த்ததால் வாங்கிய லாட்டரி
ஏழை எளிய மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை கொண்டு லாட்டரியில் இழப்பதால், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் லாட்டரிகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. எனினும், இந்தியாவில் கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் லாட்டரிகளுக்கு அனுமதி இருக்கிறது. இதேபோல, அமெரிக்காவிலும் சில மாகாணங்களிலும் லாட்டரிகள் ஏகத்திற்கும் பிரபலமாக உள்ளன.
ஐக்கிய அரபு அமீரகம், ஐரோப்பிய நாடுகள் என பல நாடுகளிலும் லாட்டரிகள் உள்ளன. இங்கு பல கோடி பரிசு அடித்தவர்கள் பற்றிய சில சுவாரசிய தகவல்கள் வெளியாகி வருவதை அவ்வப்போது பார்க்க முடிகிறது. அந்த வகையில், அமெரிக்காவில் பாட்டியை எதேச்சையாக பார்த்ததால் வண்டியை நிறுத்திவிட்டு அங்கேயே வாங்கிய லாட்டரிக்கு ரூ 9 கோடி பரிசு அடித்துள்ளது.
ரூ.9 கோடி பரிசு
இது குறித்து பரிசு வென்ற நபர் கூறியதாவது:- அன்று இரவு 240 மில்லியன் டாலர் தொகைக்கான லாட்டரி குலுக்கல் நடைபெற இருந்தது. எனது பணி முடிய தாமதமாகிவிட்டது. இதனால் அவசர அவசமாக சாப்பிட்டுவிட்டு வண்டியை எடுத்து கிளம்பினேன்.
கடைக்கு வந்த போது எனது பாட்டியின் வண்டி நிற்பதை பார்த்தேன். உடனே கடையில் பார்த்த போது, பணம் செலுத்தும் இடம் அருகே எனது பாட்டி நின்று கொண்டு இருந்தார். உடனே அங்கேயே டிக்கெட் வாங்கினேன். இதில் 9 கோடி பரிசு அடித்தது. எனது பாட்டியை திடீரென சந்தித்ததுதான் எனது அதிர்ஷ்டம்" என்றார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications