H-1B விசாவில் விழுந்த இடி.. டிரம்ப் போட்ட அதிரடி உத்தரவு.. இனி இந்தியர்களுக்கு விசா கிடைப்பது கஷ்டம்!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு விசா தொடர்பாக பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. இதற்கிடையே இப்போது மற்றொரு இடியை இறக்கும் செய்தியை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. அதாவது ஹெச்-1பி விசாவுக்கு தகுதி பெறும் குறைந்தபட்ச ஊதியத்தை அமெரிக்கா உயர்த்தியுள்ளது. இது இந்தியர்களின் அமெரிக்க கனவுக்கு சிக்கலாகவே இருகக்ும்

அமெரிக்காவில் வேலை என்ற கணவில் இருந்த ஐடி வல்லுநர்களுக்கும், அங்கு செல்லத் தயாராகி வந்த ஊழியர்களுக்கும் டிரம்ப் நிர்வாகத்தின் புதிய அறிவிப்பு ஒரு மிக பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. H-1B விசா திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்படும் வெளிநாட்டினருக்கான குறைந்தபட்ச ஊதியத்தை சுமார் 30 சதவீதம் வரை உயர்த்த அமெரிக்கத் தொழிலாளர் துறை முன்மொழிந்துள்ளது.

H 1B Visa Wage Hike

அதிரடி மாற்றம்

20 ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்ட ஊதிய அளவுகள் தற்போதைய சூழலுக்குப் பொருந்தவில்லை என்றும் இது அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பைப் பாதிப்பதாகவும் கூறி இந்த அதிரடி மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாட்டுப் பணியாளர்களுக்குக் குறைந்த ஊதியம் கொடுத்து, உள்ளூர் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பைத் தட்டிப் பறிப்பதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை என வாஷிங்டன் விளக்கம் அளித்துள்ளது. இந்த ஊதிய உயர்வு நான்கு நிலைகளுக்கும் பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஊதியம் உயர்வு

புதிய முன்மொழிவின் படி, ஆரம்ப நிலை ஊழியர்கள் முதல் அனுபவம் வாய்ந்தவர்கள் வரை ஊதிய விகிதம் கணிசமாக உயர்கிறது.. ஆரம்ப நிலை ஊழியர்களின் பவைய குறைந்தபட்ச வரம்பு 73,279 டாலராக இருந்த நிலையில், இப்போது அது 97,746 டாலராக உயர்த்தப்பட்டுள்ளது. இது சுமார் 33.39% அதிகமாகும். அதேபோல நிலை 2ல் 98,987ஆக இருந்த குறைந்தபட்ச ஊதியம் இப்போது 123,212 டாலராகவும் (24.47%), நிலை IIIன் குறைந்தபட்ச ஊதியம் 121,979 டாலரில் இருந்து 147,333 டாலரகவும் 20.79% உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல நிலை IVல் ஊதிய தேவை 144,202ல் இருந்து 175,464 டாலராக, அதாவது 21.68% உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த ஊதிய உயர்வு திடீரென வந்ததல்ல. கடந்த 2025 செப்டம்பர் 19ம் தேதி பிறப்பிக்கப்பட்ட அதிபரின் உத்தரவுப்படி, அமெரிக்காவிற்கு வெளியில் இருந்து H-1B விசா விண்ணப்பிப்பவர்களுக்கு 1,00,000 டாலர் (சுமார் 84 லட்சம் ரூபாய்) கட்டணம் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாகவே இப்போது இந்த ஊதிய உயர்வு விதிகளும் வகுக்கப்பட்டுள்ளன.

ஆதரவும் எதிர்ப்பும்

இந்த மாற்றத்திற்கு அமெரிக்காவிற்குள் ஆதரவும் எதிர்ப்பும் சமமாக எழுந்துள்ளது. ஒருபுறம் அமெரிக்க ஊழியர்களின் வேலை பாதுகாக்கப்படுகிறது என்று ஒரு பக்கம் வாதம் முன்வைக்கப்படுகிறது. அதேநேரம் மறுபுறம் நிலை-1ல் இளைஞர்களை அமெரிக்க நிறுவனங்கள் பணியமர்த்துவது மிகவும் கடினமாகிவிடும். ஒரு ஜூனியர் டெவலப்பருக்கு 97,746 டாலர் சம்பளம் கொடுக்க வேண்டும் என்பது சிறிய நிறுவனங்களுக்கு ஒரு மிக பெரிய நிதிச் சுமையாகும். இதனால் இந்தியாவிலிருந்து புதிதாகப் பணியமர்த்தப்படும் ஊழியர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது.

மிஸ் ஆகல

இந்த புதிய விதிமுறைகள் குறித்துப் பொதுமக்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்க மே 26ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு பெறப்படும் கருத்துகளைப் பரிசீலித்து, தொழிலாளர் துறை இறுதி விதியை வெளியிடும். 2020ம் ஆண்டிலேயே இதுபோன்ற ஒரு முயற்சி எடுக்கப்பட்டது. இருப்பினும், அது சட்டச் சிக்கல்களால் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் இம்முறை முறைப்படி இந்த விதியை அமல்படுத்தத் தீவிரமாக உள்ளது வெள்ளை மாளிகை.

"H-1B விசா என்பது தான் லட்சக்கணக்கான இந்திய ஐடி ஊழியர்களின் கவனாக இருக்கிறது. அப்படியிருக்கும்போது அதில் ஒரு லட்சம் டாலர் கட்டணம், ஊதிய வரம்பு உயர்வு என பல தடைகளை டிரம்ப் நிர்வாகம் போட்டு வருகிறது. இது இந்தியர்களின் எதிர்காலத்திற்கே சிக்கலை கொடுப்பதாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+