"3ம் உலக நாட்டின் ஏலியன்.." இந்தியா குறித்து டிரம்ப் கட்சி தலைவர் சர்ச்சை.. உடனே பாய்ந்த இந்தியர்கள்
வாஷிங்டன்: அமெரிக்காவில் கணிசமான அளவு இந்தியர்கள் வசித்து வருகிறார்கள். அவர்கள் அமெரிக்காவின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றி வருவதும் அனைவருக்கும் தெரியும். இதற்கிடையே இந்தியா குறித்தும் இந்து கடவுள் தொடர்பாகவும் டிரம்ப்பின் குடியரசுக் கட்சித் தலைவர் கூறியுள்ள சில கருத்துகள் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
அமெரிக்காவில் இந்தியர்கள் கணிசமான அளவு வசித்து வரும் நிலையில், அங்கு இந்து கோயில்களும் கட்டப்பட்டு வருகிறது. அதன்படி அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஸ்ரீ அஷ்டலட்சுமி கோயிலில் 90 அடி உயர அனுமன் சிலை அமைக்கப்பட்டு இருந்தது. இந்தச் சிலை 'யூனியன் சிலை' என்று அழைக்கப்படுகிறது. இந்தச் சிலை தொடர்பாக டிரம்ப்பின் குடியரசுக் கட்சித் தலைவர் கூறிய சில கருத்துகளை மிகப் பெரிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

அனுமர் சிலை
இந்த அனுமர் சிலை தொடர்பான வீடியோவை பகிர்ந்த டல்லாஸ்-ஃபோர்ட் வொர்த் பகுதியைச் சேர்ந்த குடியரசுக் கட்சித் தலைவர் கார்லோஸ் டர்சியோஸ், "மூன்றாம் உலக நாடுகளின் ஏலியன்கள் டெக்சாஸையும் அமெரிக்காவையும் ஆக்கிரமித்து வருகின்றனர்; இந்தப் படையெடுப்பை உடனே நிறுத்துங்கள்" என்ற சர்ச்சை கருத்துகளைக் கூறியுள்ளார்.
சர்ச்சை
கார்லோஸ் டர்சியோஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் மேலும், "இது ஒன்றும் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் அல்லது இந்தியாவின் டெல்லி அல்ல. இது டெக்சாஸின் சுகர் லேண்ட். மூன்றாம் உலக நாடுகளைச் சேர்ந்த ஏலின்கள் மெதுவாக டெக்சாஸையும் அமெரிக்காவையும் கைப்பற்றி வருகின்றனர். அமெரிக்காவின் மூன்றாவது பெரிய சிலையாக ஏன் இது இருக்க வேண்டும்?இந்த படையெடுப்பை நிறுத்துங்கள்" என்று பதிவிட்டுள்ளார்..
'பஞ்சலோக அபய அனுமன்' என அழைக்கப்படும் இந்த அனுமன் சிலை, 2024இல் திறக்கப்பட்டது. 90 அடி உயரமுள்ள இந்த அனுமன் சிலை, அமெரிக்காவில் உள்ள மிக உயரமான இந்து மத சிலைகளில் ஒன்றாகும். ஸ்ரீ சின்னா ஜீயர் சுவாமிகளால் உருவான இச்சிலை, அமெரிக்காவில் மூன்றாவது உயரமான சிலையாகும். வலிமை, பக்தி மற்றும் அமைதியை வலியுறுத்தும் வகையில் இந்த சிலை அமைக்கப்பட்டது.
பாய்ந்து வந்த நெட்டிசன்கள்
இந்தச் சூழலில் தான் டர்சியோஸ் இதுபோல பதிவிட்டு இருந்தார். இது பெரும் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், பல்வேறு தரப்பினரும் டர்சியோஸுக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். வெளிநாட்டவர் மீதான வெறுப்புணர்வைத் தூண்டுவதாக அவரைக் குற்றஞ்சாட்டினர். மேலும், வெளிநாட்டில் இருந்து குடியேறியவர்களும், மாற்று மதத்தினரும் அமெரிக்கச் சமூகத்திற்கு ஆற்றிய பங்களிப்புகளையும் அவருக்கு நினைவுபடுத்தினர்.
இது தொடர்பாக 'கார்த்திக் கடா' என்ற நபர், "அமெரிக்காவில் 41 மில்லியன் வீடுகளில் ஸ்பானிஷ் மொழி பேசப்படுகிறது. ஆனால், முதல் 10 இடங்களுக்குள் இந்திய மொழி எதுவும் இல்லை. மொழி தான் ஒருங்கிணைப்பின் உறுதியான குறியீடு. அப்படி இருக்கும்போது டாப் 10ல் இந்திய மொழிகள் எதுவும் இல்லை. எனவே, இந்தியர்களைப் படையெடுப்பவர்கள் எனச் சொல்வதில் எந்தவொரு லாஜிக்கும் இல்லை. அமெரிக்காவைப் பற்றித் தெரிந்து கொண்டு அதன் பிறகு எதுவாக இருந்தாலும் பேசுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
இந்துக்கள் அச்சுறுத்தல் இல்லை
மைக்ரோ பிளாகர் என்ற மற்றொரு நபர், "இல்லை, கார்லோஸ். இந்துக்கள் மேற்கத்திய நாகரிகத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதில்லை. மதமாற்றத்தை இந்து மதம் நிராகரிக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள நீங்கள் இந்து மதம் பற்றி முழுமையாகப் படித்திருக்கத் தேவையில்லை. ஆனால், அதைக் கூட தெரிந்து கொள்ள விடாமல் இனவெறி உங்கள் பார்வையை மறைத்துக் கொண்டுள்ளது. உண்மையைத் தெரிந்து கொண்டு பேசுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம்












Click it and Unblock the Notifications