Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பசிபிக் கடல் பகுதியில்.. திடீரென தடுமாறிய விமானம்..'திக் திக்' பீதியில் உறைந்த பயணிகள்..என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தில் இருந்து சான் பிரான்சிஸ்கோ புறப்பட்ட பயணிகள் விமானம் பசிபிக் பெருங்கடலின் மேலே பறந்து கொண்டிருந்த போது வேகமாக பல அடி உயரம் கீழே நோக்கி வந்துள்ளது. இதனால் பயணிகள் பீதியில் அலறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்த பரபர தகவல்களை இங்கே காணலாம்.

அமெரிக்காவின் முன்னணி விமான நிறுவனங்களில் ஒன்றான யுனிடைட் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் பசிபிக் பெருங்கடலுக்கு மேலே பறந்து கொண்டிருந்த போது மள மளமளவென பல அடிகள் கடலை நோக்கி பாய்ந்தது பயணிகள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது கடல் மட்டத்தில் இருந்து 800 அடி உயரத்திற்கு விமானம் சில வினாடிகள் கீழிறங்கிவிட்டதாம். நடு வானில் நடந்த இந்த திகிலூட்டும் சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

கடலை நோக்கி பறந்த விமானம்

கடலை நோக்கி பறந்த விமானம்

அமெரிக்காவின் மேற்கு பகுதியில் உள்ள ஹவாய் நகரில் இருந்து சான் பிரான்சிஸ்கோவிற்கு கடந்த ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி யுனிடைட் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 1722- என்ற விமானம் புறப்பட்டது. இந்த விமானம் புறப்பட்ட பசிபிக் கடலின் மேலே சென்று கொண்டிருந்த போது திடீரென பல அடிகள் வேகமாக விமானம் கீழ் நோக்கி வந்துள்ளது. விமானம் டேக் ஆப் செய்த சிறிது நேரத்தில் இந்த திகிலூட்டும் சம்பவம் நடைபெற்றுள்ளது. 21 செகண்டுகள் விமானம் இப்படி வேகமாக கடலை நோக்கி பாய்ந்துள்ளது.

 திகைத்து போன பயணிகள்

திகைத்து போன பயணிகள்

2,200 அடி உயரத்தில் இருந்து 1,425- அடி உயரத்திற்கு விமானம் சில வினாடிகளில் வந்துள்ளது. விமானம் வேகமாக கீழ் நோக்கி வந்ததால் பயணிகள் அச்சத்தில் உறைந்துள்ளனர். பிளைட் டிராக்கிங் தரவுகளை அடிப்படையாக வைத்து சி.என்.என் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. Maui- தீவிற்கு முன்பாக மீண்டும் விமானம் தனது வழக்கமான உயரத்தை எட்டி பறக்கத் தொடங்கியுள்ளது. நடுவானில் நடைபெற்ற இந்த ரோலர் கோஸ்டர் நிகழ்வால் பயணிகள் திகிலில் உறைந்துள்ளனர். விமானப் பயணிகள் யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் எதுவும் இல்லை.

இயல்புக்கு மாறாக ஏதோ

இயல்புக்கு மாறாக ஏதோ

இது குறித்து விமானத்தில் பயணம் செய்த பயணிகளில் ஒருவரான ராட் வில்லியம்ஸ் என்பவர் கூறுகையில், "ரோலர் கோஸ்டரின் உச்சியில் ஏறியது போல ஒரு உணர்வு அப்போது ஏற்பட்டது. விமானத்தில் பயணிகள் பலரும் அச்சத்தில் அலறினர். இயல்புக்கு மாறாக ஏதோ நடப்பதை அனைவரும் உணர்ந்தனர்" என்றார். இந்த விமானம் ஹவாயில் இருந்து புறப்படும் போதே சவாலான வானிலை நிலவியதாகவும் சான்பிரான்சிஸ்காவில் விமானம் தரையிறங்கியதும் தேவையான பாதுகாப்பு அறிக்கைகளை விமானி உடனடியாக சமர்பித்து விட்டதாகவும் அங்குள்ள அதிகரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானங்கள் நேருக்கு நேர் மோதுவது..

விமானங்கள் நேருக்கு நேர் மோதுவது..

சமீப காலமாக அமெரிக்காவில் விமான நிலையங்களில் அடிக்கடி பரபரப்புக்குரிய சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக கடந்த 4ஆம் தேதி டெக்சாசில் உள்ள ஆஸ்டின் - பெர்க்ஸ்ட்ரோம் சர்வதேச விமான நிலையத்தில் இரு விமானங்கள் நேருக்கு நேர் மோதுவது நூலிழையில் தவிர்க்கப்பட்டது. சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானத்திற்கு டேக் ஆப் செய்வதற்கு அனுமதி கிடைத்த அதே நேரத்தில் சரக்கு விமானம் ஒன்றிற்கும் தரையிறங்க அனுமதி கொடுக்கப்பட்டது. எனினும், கடைசி நேரத்தில் சரக்கு விமானம் தரையிறங்குவது ரத்து செய்யப்பட்டது இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அதேபோல், கடந்த சில தினங்களுக்கு முன்பாக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் நின்று கொண்டிருந்த விமானம் மீது பேருந்து (shuttle bus) மோதியது. இதில் 5 பேர் லேசான காயம் அடைந்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+