பெட் ரூமில் அணு உலையை உருவாக்கிய 13 வயது சிறுவன்.. அதிகாலையில் கதவை தட்டிய FBI.. அடுத்து சர்ப்ரைஸ்
வாஷிங்டன்: பொதுவாக 10, 12 வயதில் சிறுவர்கள் என்ன செய்வார்கள்.. பக்கத்து வீட்டுச் சிறுவர்களுடன் விளையாடுவார்கள்.. அல்லது வீடியோ கேம்களை விளையாடுவார்கள். ஆனால் இங்கே அமெரிக்காவைச் சேர்ந்த 12 வயது சிறுவன் ஒருவன் தனது பெட் ரூமிலேயே nuclear fusion reactor எனப்படும் அணுக்கரு இணைவு உலையை உருவாக்கி அசர வைத்துள்ளார். இதனால் எஃப்.பி.ஐ கூட அச்சிறுவனின் வீட்டிற்கு வந்துவிட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
அமெரிக்காவின் டென்னசி நகரத்தில் உள்ள மெம்பிஸ் பகுதியைச் சேர்ந்த ஜாக்சன் என்ற சிறுவன் தான் வீட்டிலேயே நியூக்ளியர் பியூஷன் உலையை உருவாக்கியுள்ளான். 13 வயதை அடைவதற்கு முன்பே தான் யார் என்பதை உலகிற்கு நிரூபிக்க வேண்டும் என்பதால் இதுபோல செய்ததாக அந்த சிறுவன் கூறியுள்ளான்.

13 வயது சிறுவன்
டிவியில் ஒளிபரப்பாகும் டெட் டாக் ஷோ நிகழ்ச்சியால் உத்வேகம் பெற்ற இந்த சிறுவன், 13 வயதை அடையும் முன்பு வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என முடிவு செய்துள்ளான். நியூக்ளியர் பியூஷன் குறித்த ஆய்வுகளைச் செய்த அந்த சிறுவன், எப்படி வீட்டிலேயே தன்னால் இந்த உலையை அமைக்க முடிந்தது என்பதையும் விவரித்துள்ளார். இந்தச் சம்பவம் கடந்த 2008ல் நடந்தது. ஜாக்சன் தனது ட்விட்டரில் இப்போது தனது ஆய்வு குறித்த சுவாரசிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
சாதிக்க விரும்பிய சிறுவன்
ஜாக்சன் முதலில் ஒரு டெமோ ஃபியூசரை மட்டுமே உருவாக்கியுள்ளார். அது நியூக்ளியர் பியூஷன் உலையை உருவாக்குவதற்கான ஆரம்ப படியாகும். இதற்குக் கணிசமான தொகை செலவான நிலையில், அதைத் தனது பெற்றோரிடமிருந்தே பெற்றுள்ளார். ஆனால், டெமோ ஃபியூசருக்கும் ரியல் ஃபியூசருக்கும் இடையே பெரிய வேறுபாடு இருக்கும் என்பது ஜாக்சனுக்கும் தெரிந்தே இருந்தது. இதனால் முழுக்க முழுக்க ஆப்ரேட் ஆகும் ஒரு நியூக்ளியர் பியூஷன் உலையை உருவாக்க முடிவு செய்துள்ளான்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "நான் முதலில் உருவாக்கியது டெமோ ரியாக்டர் தான். அதை இயக்கினால் அதீத வெப்பத்தால் சில நிமிடங்களிலேயே அது உருகி தன்னை தானே அழித்துவிடும். இதனால் உண்மையான ரியாக்டரை உருவாக்க முடிவு செய்தேன். தேவையான பொருட்களை ஆன்லைனில் வாங்கினேன். எரிபொருளுக்காக சில டியூட்டீரியத்தை வாங்கினேன் (சட்டப்பூர்வமாகவே வாங்கினேன்).
அணு உலை
உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் அணு உலையை அமைக்கத் தேவையான பெரும்பாலான பொருட்களை ஆன்லைனில் சட்டப்பூர்வமாகவே வாங்க முடிந்தது. இந்த சிக்கலான சாதனத்தை உருவாக்க எனக்கு சுமார் ஒரு ஆண்டு ஆனது. ஆரம்ப சோதனைகள் தோல்வியில் தான் முடிந்தது. ஆனால், நான் விடாமல் முயன்றேன். எனது 13வது பிறந்த நாளுக்குப் பிறகு சில நாட்கள் கழித்து முயன்ற போது எனது சோதனையில் வெற்றி கிடைத்தது" என்றார்.
13 வயதில் அணு உலை அமைத்த சிறுவன்
13 வயதில் அணு உலையை உருவாக்கிய ஜாக்சனின் முயற்சியை அப்போது பலரும் பாராட்டினர். மேலும், இளைய வயதில் நியூக்ளியர் ரியாக்டரை உருவாக்கிய நபர் என்ற கின்னஸ் உலக சாதனையையும் படைத்தார். பல்வேறு புகழ்பெற்ற ஆய்வாளர்களும் அவர்களின் சாதனையை உறுதி செய்தனர்.
எப்.பி.ஐ ஏஜெண்டுகள்
அதேநேரம் பெட்ரூமில் அணு உலையை உருவாக்கிய செய்தி அமெரிக்காவின் உளவு அமைப்பான எஃப்.பி.ஐ காதுகளுக்கும் போய் இருக்கிறது. அணு உலை என்பது சாதாரண விஷயம் இல்லை.. லேசான கொஞ்சம் கதிர்வீச்சு லீக் ஆனாலும் கூட அது மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் எஃப்.பி.ஐ ஏஜெண்டுகள் நேரடியாக ஜாக்சன் வீட்டிற்கே போய்விட்டனர். அங்குக் கதிர்வீச்சு இருக்கிறதா என்பதை இன்ச் இன்சாக சோதனை செய்துள்ளனர்.
இருப்பினும், எந்தவொரு இடத்திலும் கதிர்வீச்சு கண்டறியப்படவில்லை. இதனால் ஜாக்சனை பாராட்டிய அதிகாரிகள், எந்தவொரு கட்டுப்பாடுகளையும் விதிக்காமல் ஆய்வுகளைத் தொடர அனுமதித்தனர். ஆனால், அணு உலை என்பது சாதாரண விஷயம் இல்லை. லேசாக மிஸ் ஆனாலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் இதுபோன்ற முயற்சிகளை யாரும் செய்யக்கூடாது என வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications