அந்தரங்கத்தில் உல்லாச கருவி! அது சொல்ல சொல்ல.. சாம்பியனை தோற்கடித்த 19 வயது வீரர்! மிரண்ட செஸ் உலகம்
வாஷிங்டன்: உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை 19 வயதே ஆன இளம் வீரர் ஒருவர் வீழ்த்தி இருந்த நிலையில், இது தொடர்பாகச் சர்ச்சை கிளம்பி உள்ளது.
உலகெங்கும் இப்போது செஸ் போட்டி குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. ஆண்டுதோறும் செஸ் விளையாட்டை விளையாடும் வீரர்களின் எண்ணிக்கையும் கூட தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.
சென்னையில் கூட சில மாதங்களுக்கு முன்பு செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடந்தது அனைவருக்கும் நினைவில் இருக்கும். இதில் பலரும் ஆர்வமாகக் கலந்து கொண்டனர்.

செஸ் போட்டி
செஸ் போட்டிகள் பொதுவாக அறிவாளிகள் பங்கேற்கும் போட்டியாகக் கருதப்படுகிறது. அதேநேரம் இந்த செஸ் போட்டிகளிலும் கூட முறைகேடுகள் நடைபெறுவதாக ஆங்காங்கே நடந்து கொண்டு தான் இருக்கிறது. அப்படித்தான் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடந்த சர்வதேச போட்டியிலும் முறைக்தேடு நடந்து உள்ளதாக இப்போது புகார் கிளம்பி உள்ளது. அதுவும் அவர் மிக வினோதமான முறையில் முறைகேடு செய்து உள்ளார்.

தோல்வி
கடந்த மாதம் அமெரிக்காவில் செஸ் போட்டி ஒன்று நடந்து உள்ளது. இதில் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன் மற்றும் அமெரிக்காவின் 19 வயதான செஸ் வீரர் ஹான்ஸ் நீமன் மோதினர். இதில் மேக்னஸ் கார்ல்சன் மிகவும் எளிதாக வெற்றி பெறுவார் என்றே பலரும் நினைத்தனர். இருப்பினும், யாரும் எதிர்பாராத வகையில் வெறும் 19 வயதே ஆன ஹான்ஸ் நீமன் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை தோற்கடித்தார்.

முறைகேடு
இருப்பினும், அவர் முறைகேடு செய்தே இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதாகப் புகார்கள் எழுந்தன. இதையடுத்து ஹான்ஸ் நீமனுக்கு செஸ் டாட் காம் தடையும் கூட விதித்தது. சரி அவர் எப்படி ஏமாற்றினார். என்பதைப் பார்க்கலாம். அவர் செக்ஸ் டாய் ஒன்றைப் பயன்படுத்தியே அதன் மூலமே மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தியதாக இணையத்தில் செய்திகள் உலா வந்து வருகிறது.

எப்படி
இதற்கு ஆதாரம் எதுவும் இல்லை என்றாலும் கூட அவர் இப்படிதான் ஏமாற்றி இருப்பார் என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாகவே அவருக்குத் தடையும் விதிக்கப்பட்டு உள்ளது. கார்ல்சனை ஆட்டத்தைப் பார்த்து அதற்கு எப்படி பதிலடி கொடுக்க வேண்டும் என்பதைக் கணினி மூலம் ஆய்வு செய்து அதை இவருக்குச் சிலர் சொல்லியுள்ளனர். இதற்காக அவர் ஒரு வித செக்ஸ் டாயை பயன்படுத்தியுள்ளார்.

சாத்தியம் தான்
அந்த செக்ஸ் டாய் வயர்லெஸ் மூலம் இயங்கும் திறன் கொண்டது. எனவே, கார்ல்சனுக்கு எதிராக எந்த காய்களை நகர்த்த வேண்டும் என்பதை வெளியே இருந்து சிலர் அந்த செக்ஸ் டாய் மூலம் சொல்லிக் கொடுத்து உள்ளனர். இதன் மூலமே அவர் கார்ல்சனை வீழ்த்தி உள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த ஜூலை மாதம் தான் இப்படி செக்ஸ் டாய் மூலம் செஸ் போட்டியில் ஏமாற்ற முடியும் என்பதை ஒருவர் விளக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

மறுப்பு
இருப்பினும், தன் மீதான குற்றச்சாட்டை ஹான்ஸ் நீமன் திட்டவட்டமாக மறுத்து உள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "அதே இடத்தில் என்னை நிர்வாணமாக்கி சோதனை செய்து இருந்தாலும் கூட நான் சம்மதித்து இருப்பேன். எனக்கு அதில் கவலையில்லை. ஏனென்றால் நான் எந்தவொரு தவறையும் செய்யவில்லை. நான் நேர்மையாகவே விளையாடினேன். எனது வெற்றியும் நேர்மையானது" என்றார்.
-
ஈரானை நம்புவது ஆபத்து.. டிரம்ப் டீமிற்குள்ளேயே வந்த எதிர்ப்பு.. "அவரே" சொல்லிட்டாராம்! பதற்றம் -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
போர் முடிந்தது.. சுவிட்ச் போட்டது போல் பெட்ரோல் விலை நாளைக்கே குறையுமா..? வாய்ப்பில்ல ராஜா, ஏன்? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ்












Click it and Unblock the Notifications