ஆசையா எடுத்த போட்டோ ஆபாச புத்தகத்தில்.. "ஐயோ.." நொறுங்கிப்போன பெண்.. ஒன்னும் முடியாது! பகீர் சம்பவம்
பெண் ஒருவர் ஃபோட்டோஷூட்டில் தனக்கு நேர்ந்த மோசமான அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.
வாஷிங்டன்: பெண் ஒருவர் ஆசை ஆசையாக போட்டோஷூட் நடத்திப் பல ஃபோட்டோக்களை எடுத்துள்ளார். ஆனால், அதுவே அவருக்குப் பல ஆண்டுகள் கழித்து பெரிய தலைவலியைக் கொடுத்துள்ளது.
பொதுவாக நாம் ஏதாவது ஒரு செயலியை டவுன்லோட் செய்தாலோ.. அல்லது புதிய கணக்குகள் தொடங்கினாலோ சில ஆப்ஷன்களுக்கு ஓகே கொடுக்க வேண்டும். பெரும்பாலும் அதை நாம் படிக்க மாட்டோம்.
ஆனால், அப்படிப் படிக்காமல் விடுவதால் அது நம்மை ஆபத்தில் தள்ளும் வாய்ப்பும் உள்ளது. அப்படியொரு மோசமான ஒரு அனுபவம் தான் அமெரிக்காவைச் சேர்ந்த இந்தப் பெண்ணுக்கு நடந்துள்ளது.

மோசமான விளைவுகள்
நாம் வங்கியில் புதிய கணக்கை ஓபன் செய்யச் சென்றால் கூட இதுபோல பல பக்கங்களுக்குச் சிறு எழுத்துகளில் பலவற்றைக் குறிப்பிட்டு இருப்பார்கள்.. இணையத்தில் பல தளங்களிலும் இதுபோலவே இருக்கும்.. அதில் அவர்களின் விதிகளை விளக்கியிருப்பார்கள்.. இருப்பினும், பெரும்பாலான நேரங்களில் அவை எதையும் நாம் படிக்காமலே ஓகே கொடுத்துவிடுவோம். அவர்களின் விதிகள் என்னவென்றே தெரியாமல் நாம் இப்படி கையெழுத்துப் போடுவது மோசமான விளைவுகளைக் கூட ஏற்படுத்தும் என்றே பலரும் எச்சரிக்கின்றனர்.

அமெரிக்கா
அமெரிக்காவில் ஃபுளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், இப்படிப் படிக்காமல் அனைத்திற்கும் ஓகே சொன்னதால் இக்கட்டான இடத்தில் சிக்கிக் கொண்டுள்ளார். அங்கு மியாமியைச் சேர்ந்த கிறிஸ்டியன் டெமெரிட் என்ற இந்தப் பெண், தனக்கு நேர்ந்த இந்த அனுபவத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். கடந்த 2010இல் 100 டாலர் கொடுத்து ஃபோட்டோஷூட் எடுத்துள்ளார். அப்போது ஃபோட்டோஷூட் ஒருங்கிணைப்பாளர் கொடுத்த விதிமுறைகளை இந்த பெண் முறையாகப் படிக்கவில்லையாம்.

போட்டோஷூட்
கிறிஸ்டியன் டெமெரிட் அந்த நேரத்தில் ஏ&எம் பல்கலைக்கழகத்தில் தனது நாடக பிரிவில் பட்டம் முடித்திருந்தார். அவர் அப்போது நடிக்க வாய்ப்பு தேடிக் கொண்டிருந்த நிலையில், அவருக்கு சில படங்களும் தேவைப்பட்டுள்ளது. இதனால், நண்பர்கள் சொன்னதைக் கேட்டு ஃபோட்டோகிராபர் ஒருவரிடம் சென்றுள்ளார். 100 டாலர் கொடுத்து இந்த ஃபோட்டோஷூட்டை எடுத்துள்ளார். பல ஆங்கிள்களில், பல உடைகளைப் போட்டு போட்டோக்களை எடுத்துள்ளனர். 100 டாலர் செலுத்தியுள்ளதால் ஃபோட்டோக்கள் தன்னிடம் மட்டுமே இருக்கும் என்று அவர் நினைத்துள்ளார்.

ஆபாச விளம்பரங்கள்
இதற்கிடையே இது நடந்து 4 ஆண்டுகளுக்குப் பிறகு, நண்பர் ஒருவர் தொடர்பு கொண்டு டெமெரிட்டின் படம் பத்திரிக்கை ஒன்றில் வந்துள்ளதாகக் கூறியுள்ளார். ஃபோட்டோஷூட் எதற்கும் செல்லவில்லை என்பதால் கிறிஸ்டியன் டெமெரிட்-க்கு முதலில் எதுவும் புரியவில்லை. அடுத்து வரும் நாட்களில் அவருக்கு மேலும் பல அதிர்ச்சிகள் காத்திருந்தன. அவரது படம் மார்பகக் குறைப்பு விளம்பரத்திலும் இடம்பெற்றிருந்ததாம். மேலும், பெரிய மார்பகங்கள் இருந்தால் என்ன அணிய வேண்டும் என்பது பற்றிய செய்திகளிலும் அவரது படம் இடம்பெறத் தொடங்கியுள்ளது.

ஆபாச நாவல்
அவருக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. கடைசியில் அங்கு வெளியான கவர்ச்சி நாவலிலும் கூட அவரது படம் இடம்பெற்றுவிட்டதாம். வெள்ளையின ஆணுக்கும் கறுப்பின பெண்ணிற்கும் இடையே வரும் காதல் தொடர்பான அந்த புத்தகத்தின் அட்டை படத்தில் கிறிஸ்டியன் டெமெரிட் படம் இடம்பெற்றுள்ளது. இதனால் அவர் தர்மசங்கடத்திற்கு போய்விட்டாராம். எப்படி தனது படங்களை மட்டும் குறிவைத்து இப்படி எடுக்கிறார்கள் என்று அவருக்குப் புரியவே இல்லை.

எப்படி
இப்படி பல இடங்களிலும் அவரது படம் அவரது அனுமதியில்லாமல் பயன்படுத்தப்பட்டதைப் பார்த்து அவர் நொந்து போய்விட்டார். அதன் பின்னர், சுமார் 13 ஆண்டுகள் கழித்து இப்போதுதான் இதற்கான காரணம் அவருக்குத் தெரியவந்துள்ளது. அதாவது 2010இல் ஃபோட்டோஷூட் எடுக்கும்போது ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டாரே அதுதான் இவை அனைத்திற்கும் காரணம். அதாவது எடுக்கப்படும் படங்களை எதில் வேண்டுமானாலும் பகிர ஃபோட்டோகிராபருக்கு முழு உரிமை இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது. அதையும் டெமெரிட் படிக்காமல் கையெழுத்துப் போட்டுவிட்டார்.

என்ன நடந்தது
இதுவே இப்போது அனைத்து சிக்கல்களுக்கும் காரணமாக அமைந்துவிட்டது. அந்த ஃபோட்டோ கிராபர் அந்த அனைத்து படங்களையும் ஃபோட்டோக்களை விற்கும் ஒரு தளத்தில் அப்லோட் செய்துவிட்டார். அதில் இருந்து எடுத்தே பத்திரிக்கை. மார்பக குறைப்பு விளம்பரம், கடைசியில் இந்த ஆபாச நாவல் என்று அனைத்திலும் பயன்படுத்தியுள்ளனர். இதனால் அந்த பெண் துக்கத்தில் இருக்கிறார். இருப்பினும், ஒப்பந்தத்தில் தெளிவாக இருப்பதால்.. அந்த பெண்ணால் எங்கும் கேஸும் போட முடியாது. எனவே, எதில் கையெழுத்துப் போட்டாலும் படித்துப் பாருங்கள் என்று அட்வைஸ் செய்துள்ளார். நாமும் எதையும் படிக்காமல் இப்படி அனைத்திற்கும் ஓகே சொல்லி கையெழுத்துப் போட்டால் இப்படிதான் நடக்கும்












Click it and Unblock the Notifications