"இதெல்லாம் ரொம்ப ஓவர்.." 10,000 அடி உயரத்தில் மேக்கப் போட்ட பெண்.. அந்த லிப்ஸ்டிக் எங்கே பாருங்க
வாஷிங்டன்: மேக்அப் என்பது அனைவருக்கும் பிடித்த ஒரு செயல்தான். அப்படியிருக்கும் போது, இந்த பெண் 10 ஆயிரம் அடி உயரத்தில் மேக்அப் போடும் வீடியோ இணையத்தில் படுவேகமாக டிரெண்டாகி வருகிறது.
உலகில் பொதுவாக ஒவ்வொருவருக்கும் ஒன்றின் மீது அதீத ஆர்வம் இருக்கும்.. சிலருக்கு இயற்கையாகவே சாகசங்கள் மீது ஆர்வம் அதிகமாக இருக்கும். இவர்கள் செல்லும் சுற்றுலா இடங்களே வேறு மாதிரி இருக்கும்.

நாம் எல்லாம் விடுமுறை நாட்களில் ரிலாக்ஸ் செய்ய வெளியூர்களுக்குச் சென்றால், இவர்கள் மட்டும் சாகசங்கள் நிறைந்து இருக்கும் சுற்றுலா தலங்களைத் தேடிச் தேடி செய்வார்கள்.
பாகிஸ்தான்: அப்படி இளம்பெண் செய்த ஒரு காரியம் தான் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. ஒரு தரப்பு இளைஞர்களுக்கு இப்போது ஸ்கை டைவிங் மற்றும் பங்கி ஜம்பிங் போன்ற சாகசங்கள் டிரெண்டாகி வருகிறது. அதேபோல மற்றொரு தரப்பினர் மேக்அப், ஸ்கின் கேர் மீது ஆர்வம் கொண்டுள்ளனர். அதேநேரம் இரண்டையும் ஒரே நேரத்தில் செய்து ரசிக்கும் ஒருவரைப் பார்த்து இருக்கிறீர்களா..
அதுவும் 10,000 அடி உயரத்தில் ஒருவர் இந்த இரண்டையும் ஒன்றாக செய்ய முடியுமா என்று கேள்வி உங்களுக்கு வரும்.. ஆம் முடியும் தான்.. அது எப்படி என்பது விளக்கும் வகையில், அமெரிக்கப் பெண் ஒருவர் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தான் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
10 ஆயிரம் அடி உயரம்: அமெரிக்காவின் புளோரிடா பாம் சிட்டியில் வசிக்கும் மெக்கென்ன நைப் என்று இந்த பெண், ஒரு சாகசப் பிரியர்.. மேலும், இன்ஸ்டாகிராமிலும் இவருக்குப் பல ஆயிரம் பாலோயர்ஸ்கள் இருக்கிறார்கள். ஸ்கைடிவிங்கில் அதீத ஆர்வம் கொண்ட அவர், இது குறித்து பல்வேறு வீடியோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டே வருகிறார்.
அவருடைய இன்ஸ்டா பக்கம் முழுக்க ஸ்கைடிவிங் தொடர்பாக பல போஸ்ட்களை பார்க்கலாம். அப்படி அவர் சமீபத்தில் பதிவிட்ட வீடியோ ஒன்றில் அவர், சுமார் 10,000 அடி உயரத்தில் ஸ்கை டைவிங் செய்யும் போதே மேக்கப் போட்டுக் கொண்டிருக்கிறார்.

ஒரு முறை முயன்று பாருங்கள்: மேலும் அவர், "இப்படி தான் நான் எனது முகத்தைப் பராமரிக்கிறேன்.. நீங்கள்?" என்ற தலைப்புடன் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். 10,000 அடி உயரத்தில் புத்துணர்ச்சியுடனும், ஈரப்பதத்துடனும் மேக்அப் செய்ய இதுவே சிறந்த வழி என்றும் இதை ஒரு முறையாவது அனைவரும் முயற்சி செய்து பாருங்கள் என்றும் பதிவிட்டுள்ளார்.
அவரது இந்த இன்ஸ்டாகிராம் வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இதைப் பார்த்துள்ளனர். அதில் பெரும்பாலானோர் அவரது இந்த புது வகை மேக்அப் வீடியோவை வெகுவாக ரசித்தே கருத்துகளைப் பதிவிட்டுள்ளனர்.

நெட்டிசன் ஒருவர், "ஜாலியாக இருங்கள்.. வாழ்க்கை வாழ்வது ஒரு முறை தான். அதில் முடிந்தவரை வாழ்க்கையை ரசித்து என்ஜாய் செய்து வாழுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
அதேபோல மற்றொரு நபர், "இப்படிச் செய்வதன் மூலம் இன்ஸ்டாகிராமில் உள்ள பியூட்டி பிரபலங்களை நீங்கள் வைத்துச் செய்துள்ளீர்கள்.. சூப்பர்" என்று பதிவிட்டுள்ளார். இப்படி பெரும்பாலானோர் அவரது இந்த செயலுக்கு ஆதரவாகவே கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications