"இந்தியில் எப்படி பேசலாம்.." ஓடி ஓடி உழைத்தவரை ஒரே நாளில் தூக்கிய அமெரிக்க கம்பெனி! அடாவடி

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: இந்தியில் பேசியதற்காக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கர் ஒருவர் அமெரிக்காவில் உள்ள தனியார் கம்பெனியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட ஷாக் சம்பவம் நடந்துள்ளது.

இந்தியாவில் இருந்து பலரும் அமெரிக்காவுக்குச் சென்று செட்டிலாகி வருகின்றனர். முதலில் வேலைக்குச் செல்லும் அவர்கள் அப்படியே செட்டிலாகி வருகின்றனர். பெரும்பாலும், ஐடி ஊழியர்களே வேலைக்காக அங்குச் செல்கின்றனர்.

 How An Indian American lost his job for speaking in Hindi

இருப்பினும், அங்கு இந்தியர்கள் மீது பாரபட்சம் காட்டப்படுவதாகவும் குறிப்பாக இன ரீதியான பாகுபாடு காட்டப்படுவதாகப் புகார் இருந்து கொண்டே இருக்கிறது. அப்படியொரு ஷாக் சம்பவம் தான் இப்போது அங்குள்ள அலபாமா மாகாணத்தில் நடந்துள்ளது.

புகார் என்ன: அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தைச் சேர்ந்தவர் அனில் வர்ஷ்னி.. 78 வயதான இவர் அங்குள்ள ஏவுகணை தயாரிக்கும் நிறுவனமான பார்சன்ஸ் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்தில் மூத்த சிஸ்டம்ஸ் இன்ஜினியராக பல ஆண்டுகள் வேலை செய்து வந்தார். பல காலம் வேலை செய்தவர் என்று கூட பார்க்காமல் கடந்த அக். மாதம் இவரை அந்த நிறுவனம் நீக்கியுள்ளது. அதற்கு அவர்கள் சொன்ன காரணம் தான் இவரை ஆத்திரமடைய வைத்துள்ளது.

இந்தியாவில் உயிரிழக்கும் நிலையில் இருந்த தனது மைத்துனருடன் அவர் தொலைப்பேசியில் பேசியுள்ளார். இருப்பினும், அவர் இந்தியில் பேசியதை அவரது சக அமெரிக்க ஊழியர் கேட்டுள்ளார். கடந்த செப்டம்பர் 26ஆம் தேதி இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அப்போது உறவினர் கே.சி. குப்தா மரணப் படுக்கையில் இருந்த நிலையில், அவர் அனிலிடம் பேச ஆசைப்பட்டுள்ளார். இதற்காக இந்தியாவில் இருந்து அவருக்கு வீடியோ கால் செய்துள்ளனர்.

இந்தியில் பேசினார்: நிலைமை உணர்ந்த அவர் அலுவலகத்தில் ஒரு தனியறைக்குச் சென்று வீடியோ காலை எடுத்துப் பேசியுள்ளார். வீடியோ காலை எடுத்துப் பேசும் முன்பு, அங்கே தன்னை சுற்றி எந்தவொரு முக்கிய ஆவணங்களும் இல்லை என்பதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார். அதன் பின்னரே அவர் வீடியோ காலை எடுத்துப் பேசியுள்ளார். அவர் சுமார் 2 நிமிடங்கள் இந்தியில் தனது உறவினருடன் பேசியிருப்பார்.

அப்போது அவரது சக ஊழியர் உள்ளே வந்துள்ளார். வீடியோ காலில் இருக்கிறீர்களா என அந்த ஊழியர் கேட்க, அனிலும் "ஆமாம்" என அப்போதும் உண்மையே கூறியுள்ளார். அங்கே வீடியோ காலில் பேச அனுமதி இல்லை என்று அந்த சக ஊழியர் கூறிய நிலையில், அனில் உடனடியாக வீடியோ காலை கட் செய்துவிட்டார். இது தான் இங்கே நடந்துள்ளது. அதன் பின்னரே அவர் வேலையை விட்டு நீக்கப்பட்டுள்ளார்.

வெறும் 2 நிமிடங்கள்: இதை எதிர்த்து அனில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் அவர், "தனக்குப் புரியாத மொழியில் பேசியதால் சக ஊழியர் இப்படிச் செய்துள்ளார். புரியாத மொழியில் பேசியதால் நான் ரகசியத் தகவலை வெளிப்படுத்திப் பாதுகாப்பு மீறலைச் செய்ததாகத் தவறாக மற்றும் வேண்டுமென்றே புகார் அளித்துள்ளார். அந்த வீடியோ கால் சுமார் 2 நிமிடங்கள் மட்டுமே இருந்துள்ளது.

வீடியோ காலை ஏற்கக் கூடாது என்று எந்தவொரு பாலிசியும் நிறுவனத்தில் இல்லை. மேலும், புகார் குறித்து உரிய விசாரணையும் நடத்தப்படவில்லை. இருப்பினும், என்னைப் பணி நீக்கம் செய்தனர். அன்றைய தினமே எனது பொருட்களை எடுத்துச் செல்லச் சொன்னார்கள். எனது தனிப்பட்ட பொருட்கள் தொடங்கி அனைத்தையும் சோதனை செய்தார்கள். உயிரிழக்கும் நிலையில், இருந்த உறவினரிடம் வெறும் 2 நிமிடம் புரியாத மொழியில் பேசியதற்காக என்ன உளவாளி என்று கூறி அவமானப்படுத்தியுள்ளனர்" என்று அதில் கூறியுள்ளார்.

 How An Indian American lost his job for speaking in Hindi

அனில் அந்த உறவினருடன் வீடியோ காலில் பேசிய சில நாட்களிலேயே இந்தியாவில் வசித்த அந்த உறவினர் உயிரிழந்துவிட்டார். இருப்பினும், அந்த நிறுவனம் தனது நிலைப்பாட்டில் உறுதியாகவே இருக்கிறது. தாங்கள் உரிய விதிகளைப் பின்பற்றிய நடவடிக்கை எடுத்துள்ளதால் அனில் வழக்கு ரத்து செய்ய வேண்டும் என அவர்கள் பதில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

ஓடி ஓடி உழைத்தவர்: அனில் கடந்த 1968ஆம் ஆண்டில் அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்தார். அங்கு அவர் அமெரிக்கக் குடியுரிமையையும் பெற்றார். இவரது மனைவி சாஷி 1989 முதல் நாசாவில் பணிபுரிந்து வருகிறார்.. மேலும், இப்படி ஒரே நாளில் வேலையை விட்டு நீக்கும் அளவுக்கு அவர் ஒன்றும் மோசமான ஊழியரும் இல்லை. சிஸ்டம்ஸ் இன்ஜினியரிங் துறையில் "ஆண்டின் சிறந்த ஊழியர்" என்று பாராட்டப்பட்டவர்.

ஏவுகணை பாதுகாப்பு திட்டம் குறித்த ஒரு சோதனையில் இவரது ஐடியாவால் அந்த நிறுவனம் 50 லட்சம் டாலர் (இந்திய மதிப்பில் 41 கோடி) சேமித்துள்ளது. இதற்காக அந்த நிறுவனமே இவரைப் பாராட்டியுள்ளது. அப்படி ஒரு ஊழியரைத் தான் இந்தியில் பேசினார் என்பதற்காக வேலையை விட்டுத் தூக்கியுள்ளனர். தன்னை மீண்டும் பணியமர்த்த வேண்டும் இல்லையென்றால் தனக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று அவர் இப்போது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+