கழுத்தை நெரித்த விசா சிக்கல்.. அசால்டாக இந்தியர் செய்த காரியம்.. இப்போது ரூ.24,000 கோடிக்கு அதிபதி

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: இப்போது டிரம்ப் வந்த பிறகு அமெரிக்காவுக்குச் செல்வதே பெரிய சிரமமாக இருக்கிறது. ஆனால், இதற்கு முன்பு இருந்த ஹெச்-1பி விசா பல ஆயிரம் இந்தியர்களின் வாழ்க்கையையே மாற்றியுள்ளது. அப்படி அமெரிக்காவில் சாதித்த நபர் தான் ஜோதி பன்சாலின்.. யார் இவர்.. அமெரிக்காவில் இவர் அப்படி என்ன சாதித்தார் என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

இந்தியர்கள் அமெரிக்காவுக்குச் செல்வதில் இப்போது பல்வேறு சிக்கல்கள் உள்ளன. டிரம்ப் நிர்வாகம் வெளிநாட்டினருக்குப் பல சிக்கல்களைக் கொடுத்து வருகிறது. ஆனால், முன்பு இருந்த ஹெச்-1பி விசா மூலம் இந்தியர்கள் எளிதாக அமெரிக்கா செல்ல முடிந்தது. இது பல ஆயிரம் இந்தியர்களின் வாழ்க்கையையே மொத்தமாக மாற்றுவதாக இருந்தது.

How an Indian techie overcomes H-1B challenges gets green card and achieves 3 7 billion success

ஜோதி பன்சாலின்

அப்படி அமெரிக்கா சென்று சாதித்த நபர் தான் ஜோதி பன்சாலின்.. இந்தியாவில் சாதாரண கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரியாக வாழ்க்கையை ஆரம்பித்த இவர், இப்போது அமெரிக்காவில் பல கோடி சொத்து கொண்ட தொழில்முனைவோராக உயர்ந்துள்ளார். அவரது இந்தப் பயணம், நமக்கு நம்பிக்கை ஊட்டுவதாகவே இருக்கிறது.

இந்தியாவில் கல்லூரியில் படிக்கும்போதே, பன்சாலுக்கு தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது.. ஒரு நிறுவனத்தைப் புதிதாகத் தொடங்கி.. சிறந்த சேவை மற்றும் அதிக வேலைவாய்ப்பு தர வேண்டும் என்ற ஆசை தனக்குள் இருந்ததாக அவர் குறிப்பிடுகிறார். இதற்காக அவர் சர்வதேச டெக் உலகின் மையமான அமெரிக்காவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு பகுதிக்குச் செல்ல முடிவு செய்தார்.

விசா சவால்கள்

ஆனால், அமெரிக்காவுக்குச் செல்ல அப்போதே பல சவால்கள் இருந்தன.. 2000ஆம் ஆண்டில் அவர் அமெரிக்கா சென்றார். அப்போது அவருக்கு வயது வெறும் 21..! H-1B விசாவை பெற்ற பன்சால், சிலிக்கான் பள்ளத்தாக்கில் சுமார் 30 பேர் இருக்கும் ஒரு ஸ்டார்ட்அப்பில் வேலை செய்தார். அந்த ஸ்டார்ட் அப் அவருக்குப் புதியதொரு உலகைக் காட்டியது. அங்கு அவர் பல புதிய விஷயங்களை கற்றுக் கொண்டார்.

அவர் புதிதாக ஒரு நிறுவனத்தை ஆரம்பிக்கும் அளவுக்கு நிபுணத்துவத்தைப் பெற்றிருந்தார். இருப்பினும், அப்போது பன்சால் ஒரு பெரிய தடையைச் சந்தித்தார். அதாவது அப்போது அவரிடம் H-1B விசா தான் இருந்தது. இந்த H-1B விசாவை வைத்து அவரால் அமெரிக்காவில் வேலை மட்டுமே செய்ய முடியும். தனியாக ஒரு நிறுவனத்தை ஆரம்பிக்க முடியாது.

வெறுப்பாக இருந்தது

இது தொடர்பாக அவர் கூறுகையில், "அப்போது இது எனக்கு மிகவும் வெறுப்பாக இருந்தது. தொழிற்துறையில் தேவையான தொழில்நுட்பத்தை உருவாக்க என்னால் முடியும் என்று தெரியும். இருப்பினும், என்னிடம் இருந்த விசா அதைத் தடுத்தது.. எனக்குச் சரியான குடியேற்ற நிலை தேவைப்பட்டது.. ஆனாலும், நான் ஏழு ஆண்டுகள் பொறுமையாகக் காத்திருந்தேன்.

க்ரீன் கார்ட் கிடைக்கும் வரை அங்கேயே பல ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் வேலை செய்தேன். எல்லாம் செட் ஆகி எனது க்ரீன் கார்டு விண்ணப்பம் ஏற்கப்பட்டது. எனது க்ரீன் கார்டு ஆவணங்கள் வருவதற்கு முன்பே நான் என் வேலையை ராஜினாமா செய்துவிட்டு, எனது சொந்த நிறுவனத்தைத் தொடங்கினேன்" என்றார்.

ரூ24,000 கோடிக்கு அதிபதி

2008இல் அவர் ஆப்டைனாமிக்ஸ் என்ற நிறுவனத்தை ஆரம்பித்தார். சாப்ட்வேர் பர்பாமன்ஸ் மேனேஜ்மேண்ட் என்பதே இதன் அடிப்படையாக இருந்தது. ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் வேலை செய்த அனுபவம் புதிய நிறுவனத்தை நடத்துவதில் இவருக்கு முக்கியமாக கை கொடுத்தது. மிக வேகமாக இவரது நிறுவனம் வளர்ந்தது.. ஒரு கட்டத்தில் 2,000 பேருக்கு வேலை தரும் நிறுவனமாக உருவெடுத்தது. அப்போது 2017இல், சிஸ்கோ நிறுவனம் இவரது நிறுவனத்தை 3.7 பில்லியன் டாலருக்கு (சுமார் ₹24,079 கோடி) வாங்கியது.

இதன் மூலம் வெற்றிகரமான ஒரு தொழில்முனைவோராக ஜோதி பன்சாலின் உருவெடுத்தார். ஆனால், இவ்வளவு பணம் வந்த பிறகும் அவர் ஓய்வெடுக்கவில்லை. புதிதாக இரு ஸ்டார்ட்அப் நிறுவனங்களைத் தொடங்கி நடத்தி வருகிறார். இப்படி இதுவரை மட்டும் அவர் 4000 அமெரிக்கர்கள் வேலை கொடுத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+