விண்வெளியில் மாதவிடாயை வீராங்கனைகள் சமாளிப்பது எப்படி.. ரத்தம் பின்னோக்கி பாயுமா.. அறிவியல் விளக்கம்
வாஷிங்டன்: இப்போது விண்வெளிக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பெண்கள் இதுபோல விண்வெளிக்குச் செல்லும் போது அந்த நேரத்தில் அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் அதை எப்படிச் சமாளிப்பார்கள். இதற்கான நடைமுறை என்ன என்பது குறித்து பலருக்கும் கேள்வி இருக்கும். அது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் ஏற்படும் போது அந்த 4, 5 நாட்களைச் சமாளிப்பதே சவாலான ஒன்றாக இருக்கிறது. ஏனென்றால் மாதவிடாய் சுழற்சியின் போது பெண்களுக்கு உடல் ரீதியாக மட்டுமின்றி.. மனநிலை மாற்றங்கள், மனச்சோர்வு, பதட்டம் உள்ளிட்டவை கூட ஏற்படும்.

மாதவிடாய்: பூமியில் மாதவிடாய் ஏற்படும் போதே இந்த பிரச்சினை என்றால் விண்வெளியில் மாதவிடாய் ஏற்பட்டால் என்ன நடக்கும் என்று யோசித்திருக்கிறீர்களா? இப்போது விண்வெளிக்குப் பெண்கள் செல்வது அதிகரித்து வரும் நிலையில், இந்த கேள்வி பொருத்தமாக இருக்கிறது. பல சர்வதேச நாடுகள் பெண்களை விண்வெளிக்கு அனுப்பி வரும் நிலையில், மாதவிடாய் காலத்தில் அவர்கள் அதை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
விண்வெளியில் பெண்கள்: அதற்கு முன்பு ஒரு சின்ன வரலாறு.. அப்போதைய சோவியத் யூனியனை சேர்ந்த விண்வெளி வீராங்கனையான வாலண்டினா தெரேஷ்கோவா என்பவர் தான் முதலில் விண்வெளிக்குச் சென்று பெண் ஆவார். கடந்த 1963ஆம் ஆண்டு அவர் விண்வெளிக்குச் சென்றார். அதன் பிறகு பல பெண்கள் விண்வெளிக்குச் சென்று திரும்பியுள்ள நிலையில், இப்போது விண்வெளிக்கு அந்த எண்ணிக்கை 60ஐ தாண்டியுள்ளது.
பெண்கள் விண்வெளிக்குச் செல்லும் போது மாதவிடாய் ஏற்பட்டால் அதை எப்படிக் கையாள்வார்கள் என்ற கேள்வி பலரும் எழும். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் மாதவிடாயை ஒரு காரணமாகச் சொல்லியே பல ஆண்டுகள் பெண்கள் விண்வெளிக்குச் செல்வதைப் பல உலக நாடுகள் மறுத்தன. பெண்கள் பலரும் இதற்கு எதிராகக் குரல் கொடுத்தாலும் உலக நாடுகள் பெண்களை அனுமதிக்கவே இல்லை. 1960கள் வரை இதே நிலை தான் தொடர்ந்தது.
அதன் பிறகே பெண்கள் விண்வெளிக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அதன் பின்னரே விண்வெளி பயணங்களின் போது தேவைப்படும் அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் சானிட்டரி நாப்கின்களை நாசா சேர்த்தது.. சரி அடுத்த கேள்வி மாதவிடாய் ஏற்படும் போது அது பூமியில் ஏற்படுவதைப் போல இருக்குமா என்பது..
வழக்கம் போலவே இருக்கும்: பூமியில் ஏற்படுவதைப் போலவே விண்வெளியிலும் பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படும். அங்கு என்ன தான் புவி ஈர்ப்பு விசை இல்லை என்ற போதிலும் மாதவிடாய் ரத்தமானது வழக்கம் போலவே வெளியேறும். நமது உடல் அங்கேயும் வழக்கம் போலவே இயங்கும். அவை ஃபலோபியன் குழாய்கள் வழியாக மீண்டும் பின்னோக்கி உடலுக்குள் இழுத்துக் கொள்ளப்படாது. மேலும், இதுவரை விண்வெளிக்குச் சென்ற பெண்கள் யாருமே புவி ஈர்ப்பு விசை இல்லாததால் மாதவிடாய் பிரச்சனைகளை எதிர்கொண்டதாகக் கூறியதில்லை. அங்குப் பூமியில் மாதவிடாய் ஏற்படுவது போலவே ஏற்படும் என்றே அவர்கள் தெரிவித்தனர்.
"பூமியை நோக்கி வரும் சிறுகோள்.." சரியாக இந்த நாளில் தான் மோத போகுது.. நம்மால் தடுக்கவே முடியாதாம்
அதேநேரம் விண்வெளி சென்ற பல பெண்கள் மாத்திரை மூலம் மாதவிடாயைத் தள்ளிப் போட்டுக் கொள்வார்களாம். கட்டாயம் இப்படிச் செய்ய வேண்டும் என்ற விதி இல்லை என்ற போதிலும் பெரும்பாலான பெண்கள் இதையே தேர்வு செய்வார்களாம். இதற்கும் சில காரணங்கள் இருக்கிறது.
பெண்கள்: அதாவது சர்வதேச விண்வெளி நிலையம் மனித ரத்தத்தைக் கையாளும் வகையில் தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மன ரீதியாக ஏற்படும் மாற்றங்கள், சுகாதாரம் உள்ளிட்டவை சிக்கலாகவே இருக்கிறது. இதன் காரணமாகவே விதி இல்லை என்ற போதிலும் பெரும்பாலான பெண்கள் விண்வெளிக்குச் செல்லும் போது மாத்திரை எடுத்துக் கொண்டு மாதவிடாய் காலத்தைத் தள்ளிப் போட்டுக் கொள்வார்களாம்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications