"பூமியை நோக்கி வரும் சிறுகோள்.." சரியாக இந்த நாளில் தான் மோத போகுது.. நம்மால் தடுக்கவே முடியாதாம்
வாஷிங்டன்: அமெரிக்காவின் நாசா சிறுகோள் தொடர்பாகத் தீவிர ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் பூமியை நோக்கி ஒரு சிறுகோள் வந்து கொண்டு இருப்பதாகவும் அது பூமியைத் தாக்க 72% வரை வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த சிறுகோள் தாக்குதலில் இருந்து பூமியைக் காப்பாற்றும் திறன் நம்மிடம் இப்போது இல்லை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
விண்வெளி குறித்து அமெரிக்காவின் நாசா தொடர்ந்து பல்வேறு ஆய்வுகளை நடத்தி வருகிறது. குறிப்பாக விண்வெளியில் இருந்து பூமிக்கு ஏற்படும் ஆபத்துகள் குறித்து ஆய்வு செய்யத் தனியாக ஒரு துறையை நாசா வைத்துள்ளது.

அவை முக்கியமாக asteroid எனப்படும் சிறுகோள் குறித்து முக்கியமாக ஆய்வு செய்வார்கள். விண்வெளியில் சிறிதும் பெரிதுமாக எண்ணில் அடங்காத பாறைகள் சுற்றி வருகிறது. இதையே அவர்கள் சிறுகோள் எனக் குறிப்பிடுகிறார்கள்.
நாசா: இதற்கிடையே அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா முக்கியமான ரிபோர்ட்டை வெளியிட்டுள்ளது. அதில் அபாயகரமான சைஸில் இருக்கும் சிறுகோள் அதாவது asteroid பூமியை நோக்கி வந்து கொண்டு இருப்பதாகவும் அதைப் பூமியைத் தாக்க 72% வரை வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இதில் அதிர்ச்சி செய்தி என்னவென்றால், அந்த சிறுகோல் பூமியில் மோதுவதைத் தடுக்கும் அளவுக்கு நாம் தயாராக இல்லை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
"கடவுளின் கை.." விண்வெளியில் நடந்த மேஜிக்.. படம் பிடித்த "டார்க் எனர்ஜி" கேமரா! மிரண்ட ஆய்வாளர்கள்
கடந்த ஏப்ரல் மாதம் பிளானட்டரி டிஃபென்ஸ் இன்டராஜென்சி டேப்லொப் பயிற்சி நாசா நடத்தியது. அதில் என்னவெல்லாம் கண்டறியப்பட்டது என்பது குறித்த தகவல்களை நாசா சமீபத்தில் பகிர்ந்து இருந்தது.. இதில் நாசாவைத் தவிர, பல்வேறு அமெரிக்க அரசு அமைப்புகள் மற்றும் சர்வதேச ஆய்வு நிறுவனங்கள் என சுமார் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
சிறுகோள்: வரும் காலத்தில் சிறுகோள்களால் என்ன மாதிரியான ஆபத்துகள் ஏற்படும்.. இதைத் தடுக்கும் அளவுக்குப் பூமி தயாராக இருக்கிறதா என்பது குறித்து இதில் ஆய்வு நடத்தப்பட்டு ரிப்போர்ட் ரெடி செய்யப்பட்டுள்ளது.
நாசா தலைமையகத்தில் உள்ள கிரக பாதுகாப்பு அதிகாரி எமரிட்டஸ் கூறுகையில், “வரும் காலத்தில் பூமியில் ஏற்படக்கூடிய அனைத்து சவால்கள் குறித்தும் இதில் விவாதித்தோம். ஒரு பெரிய சிறுகோள் பூமியில் தாக்குவது மட்டுமே இப்போது பூமிக்கு ஆபத்தை ஏற்படுத்தும் இயற்கை பேரழிவாக இருக்கிறது" என்றார்.
72% ஆபத்து: சமீபத்தில் நடந்த சோதனையில் இதுவரை கண்டறியப்படாத ஒரு சிறுகோள் அடையாளம் காணப்பட்டது.. அடுத்த 14 ஆண்டுகளில் இது பூமியைத் தாக்கும் ஆபத்து 72% இருக்கிறது. இன்னும் துல்லியமாகச் சொல்ல வேண்டும் என்றால்.. 2038ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதி இந்த சிறுகோள் பூமி தாக்க 72% வாய்ப்பு இருக்கிறது.
கவலை: அதேநேரம் இந்த சிறுகோளின் அளவு, இது எவ்வளவு ஆபத்தானது.. இது எங்கே தாக்கும் என்பது குறித்த துல்லியமான தகவல்கள் நம்மிடம் இல்லை. இதில் கவலையளிக்கும் விஷயம் என்னவென்றால் இந்த சிறுகோள் பூமியைத் தாக்கும் ஆபத்தைச் சமாளிக்கும் அளவுக்கு நாம் தயாராக இல்லை என்று கூறப்பட்டு இருப்பதே பெரிய ஷாக்.
இதுபோன்ற சிறுகோள் பூமியை நோக்கி வரும் போது சரியான நேரத்தில் உலக நாடுகளிடையே ஒருங்கிணைப்பு தேவை. மேலும், இதை சமாளிக்க உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்ற திட்டம் வேண்டும். இரண்டும் போதியளவில் இல்லை என்பதே முக்கிய பிரச்சினையாகும்.
-
நள்ளிரவில் பாய்ந்த அமெரிக்க ஏவுகணைகள்... அதிகாலையில் திருப்பி அடித்த ஈரான்! மீண்டும் வெடிக்கும் போர் -
ஈரான் பந்தர் அப்பாஸில் அமெரிக்க தாக்குதல்.. வேலையை காட்டிய டிரம்ப்.. அப்போ அமைதி எல்லாம் கனவுதான் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications