ஜெயிச்சது டிரம்ப் தான்.. ஆனா ஜாக்பாட் லாபம் எலான் மஸ்கிற்கு தான்! பக்கா பிளானோட தான் இறங்கினார் போல!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பிற்காக ஓடி ஓடி பிரச்சாரம் செய்தவர் எலான் மஸ்க். இணையத்தில் கூட டிரம்பிற்காக பெரியளவில் எலான் மஸ்க் பிரச்சாரம் செய்து வந்தார். இப்போது டிரம்ப் அமெரிக்க அதிபராகி இருக்கும் நிலையில், இதன் காரணமாக ஜாக்பாட் லாபம் என்னவோ எலான் மஸ்கிற்கு தான். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸை வீழ்த்தி 47ஆவது அதிபராகி இருக்கிறார் டிரம்ப். இந்த முறை டிரம்பிற்காக ஓடி ஓடி பிரச்சாரம் செய்தவர்களில் முக்கியமானவர் கோடீஸ்வரர் எலான் மஸ்க்.

இப்போது டிரம்ப் அதிபராகி இருக்கும் நிலையில், இதன் மூலம் எலான் மஸ்கிற்கு என்ன லாபம் கிடைக்கப் போகிறது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
கார்ப்பரேட் வரி: டிரம்பின் காலத்தில் அந்நாட்டின் கார்பரேட் வரி குறைக்கப்படலாம். பெருநிறுவனங்கள் மற்றும் செல்வந்தர்களுக்கு வரியை குறைக்க வேண்டும் என்றே டிரம்ப் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். கடந்த 2016- 2020 வரை அதிபராக இருந்த காலகட்டத்தில் தான் கார்ப்பரேட் வரி 35%ல் இருந்து 21% ஆகக் குறைக்கப்பட்டது. கார்ப்பரேட் வரி குறைப்பு மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படலாம் என்று ஒரு பேச்சு இருக்கிறது. அப்படி நீட்டிக்கப்பட்டால் அது எலான் மஸ்கிற்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த செல்வந்தர்களுக்கும் லாபம் தான்.
எலான் மஸ்க்கை பொறுத்தவரை அவர் பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார். அதில் பல நிறுவனங்களுக்கு பெடரல் அரசின் அனுமதிகள் தேவை. அந்த அனுமதிகள் எலான் மஸ்கிற்கு இனி விரைந்து கிடைக்கும் என்றே தெரிகிறது. முதலில் அவரது மின்சார கார் நிறுவனமான டெஸ்லா.. டிரைவர் இல்லாமல் தானாக கார் ஓட்டும் வசதி டெஸ்லாவில் இருக்கிறது.
டெஸ்லா: இருப்பினும், அதற்கு அமெரிக்க தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம் பல கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது. மேலும், பல மாகாணங்களும் அதற்குக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பெடரல் (தேசியளவில்) அளவில் அதற்கு ஒரு விதிகள் மாற்றப்பட்டால் அது டெஸ்லாவுக்கு பெரியளவில் உதவும்.. இதன் மூலம் ஒழுங்குமுறை பிரச்சினை தீரும்
அடுத்து நியூரோலிங்.. இது மூளையில் சிப் வைத்து சோதனை செய்யும் நிறுவனம். இந்த நிறுவனம் மனிதர்கள் மீது சோதனை நடத்த அந்நாட்டின் எஃப்.டி.ஏ பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. எலான் மஸ்க் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி அனுமதி பெறலாம். மிகக் கடுமையான பாதுகாப்பு ரூல்ஸை சற்று தளர்த்தினாலும் பெரியளவு உதவியாக இருக்கும் என்றே அந்த நிறுவன ஊழியர்கள் குறிப்பிடுகிறார்கள்.
ஆரம்பமே அதிரடியில் இறங்கிய டிரம்ப்.. உள்ளே வரும் "ஐஸ் பேபி" சுசி.. வெள்ளை மாளிகை வரலாறு படைக்குதே
ஸ்பேஸ் எக்ஸ்: இவை அனைத்தையும் காட்டிலும் பெரிய லாபம் என்றால் அது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்குத் தான் இருக்கும். எலான் மஸ்கின் ராக்கெட் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் இப்போதே அமெரிக்காவில் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது. ஆனாலும், நாசாவின் கட்டுப்பாடுகளுக்குக் கீழ் தான் இது இருக்கிறது. தனியார் நிறுவனங்களுக்கு இதுபோன்ற கட்டுப்பாடுகளை விதிப்பது சரி இல்லை என்று எலான் மஸ்க் வலியுறுத்தி வரும் நிலையில், அது குறைக்கப்படலாம்.
ஏற்கனவே நாசா அமைப்பு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில் சுமார் $15 பில்லியன் டாரலை முதலீடு செய்துள்ளது. அந்த ஆதரவு மேலும் தொடர வாய்ப்பு இருக்கிறது. மேலும், தனியார் விண்வெளி நிறுவனங்களின் கட்டுப்பாடுகளைத் தளர்த்த எலான் மஸ்க் வலியுறுத்தி வந்தார். இருப்பினும், அமெரிக்க நாடாளுமன்றம் அதற்குக் கட்டுப்பாடுகளை விதித்து இருந்தது. அந்த நிலை மாறலாம்.
வாய்ப்பு குறைவு: இப்படி எல்லா பக்கங்களும் டிரம்ப் வெற்றியால் லாபம் அடையப் போவது எலான் மஸ்க் தான். டிரம்ப் ஆட்சியில் முக்கிய துறையின் அமைச்சராகக் கூட எலான் மஸ்க் பொறுப்பேற்கலாம் எனக் கூறப்பட்டது. இருப்பினும், அதற்கான வாய்ப்புகள் குறைவு. எலான் மஸ்கின் பிஸ்னஸ் அனைத்தும் இப்போது சிறப்பாக இருக்கும் நிலையில், இந்தச் சூழலில் அவர் நேரடியாக அரசியலில் குதிக்க மாட்டார் என்றே வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications