டிரம்பால் கைகோர்த்த ரஷ்யா - அமெரிக்கா.. உக்ரைனுக்கு எந்தெந்த நாடுகள் ஆதரவு? ஒன்றிணைந்த ஐரோப்பா
வாஷிங்டன்: உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரில் முதலில் அமெரிக்கா உக்ரைன் பக்கம் இருந்தது. இப்போது டொனால்ட் டிரம்ப் ரஷ்யா பக்கம் சாய்ந்துவிட்டார். மேலும் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை அவமானப்படுத்தி வெள்ளை மாளிகையில் இருந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விரட்டியடித்துள்ள நிலையில் உக்ரைனுக்கு எந்தெந்த நாடுகள் சப்போர்ட்டாக உள்ளனர்? என்பது பற்றிய பட்டியல் வெளியாகி உள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா 3 ஆண்டுகளாக போர் தொடர்ந்து வருகிறது. இந்த போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தபோது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக இருந்தன. அதோடு ரஷ்யா மீது கடும் பொருளாதார தடைகளை விதித்தன.

ஆனால் தற்போது அமெரிக்காவின் நிலைப்பாடு மொத்தமாக மாறிவிட்டது. உக்ரைனை கடுமையாக விமர்சிக்கும் அமெரிக்கா ரஷ்யாவின் பக்கம் சாய்ந்துவிட்டது. இதற்கு முக்கிய காரணம் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனை வீழ்த்தி டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றது தான். தற்போது டொனால்ட் டிரம்ப் உக்ரைன் போரை நிறுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறார்.
மேலும் எலியும், பூனையுமாக இருந்த அமெரிக்கா - ரஷ்யா இப்போது ஒன்றாக சேர்ந்துவிட்டன. போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன், டிரம்ப் தொலைபேசியில் பேசினார். அதன்பிறகு ரஷ்யா, அமெரிக்கா பிரதிநிதிகள் சவுதி அரேபியாவில் வைத்து போர் நிறுத்தம் தொடர்பாக பேசினர். இதில் உக்ரைன் புறக்கணிப்பட்டது. இந்த பேச்சுவார்த்தைக்கு உக்ரைனை, அமெரிக்கா அழைக்கவில்லை. இதனால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி அதிருப்தியடைந்தார்.
‛‛ரஷ்யாவின் போரால் பாதிக்கப்பட்ட எங்களையே அமெரிக்க பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை என்று வருத்தம் தெரிவித்தார்'' உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி. அதேபோல் அமெரிக்கா, ரஷ்யாவின் பக்கம் சாய்ந்து விட்டதை அவர் உணர்ந்தார். இதனால் உக்ரைன் இல்லாமல் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டால் அதனை ஏற்கமாட்டோம் என்று கூறினார். இதற்கிடையே தான் டிரம்ப் அழைப்பை ஏற்று உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி அமெரிக்கா சென்று அவரை சந்தித்தார். இந்த சந்திப்பு என்பது வெள்ளை மாளிகையில் நடந்தது. அப்போது போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தது. அதுமட்டுமின்றி 350 பில்லியன் டாலர் அளவுக்கு உக்ரைனுக்கு அமெரிக்கா உதவி செய்துள்ளது. இதனை திரும்ப பெறும் வகையில் உக்ரைன் நாட்டின் அரியவகை கனிமங்களில் 50 சதவீதத்தை அமெரிக்கா கைப்பற்றும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது பற்றி பேசப்பட்டது.
அப்போது திடீரென்று யாரும் எதிர்பாராத வகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், துணை அதிபர் ஜேடி வான்ஸ் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பத்திரிகையாளர்கள் முன்னிலையில் மோதிக்கொண்டனர். இதனால் பேச்சுவார்த்தை வெற்றி பெறவில்லை. அதோடு வெள்ளை மாளிகையில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இருதரப்புக்கும் இடையே எந்த ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை. அதுமட்டுமின்றி ஒப்பந்தத்துக்கு ஓகே சொன்னால் மட்டுமே வெள்ளை மாளிகைக்கு மீண்டும் வாருங்கள் என்று டிரம்ப் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் அவரது குழுவை வெள்ளை மாளிகையில் இருந்து வெளியே அனுப்பினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் வரும் நாட்களில் ரஷ்யாவின் போரை சமாளிக்க உக்ரைனுக்கு, அமெரிக்கா எந்த விதத்திலும் உதவி செய்யாது என்று கூறப்படுகிறது. இதனால் உக்ரைன் பெரும் சிக்கலை எதிர்கொள்ள உள்ளது. ஒருபுறம் ரஷ்யா, இன்னொரு புறம் அமெரிக்கா என்று இரு பெரும் வல்லரசுக்கு இடையே
உக்ரைன் சிக்கி தவிக்கிறது. ஏற்கனவே 3 ஆண்டு போரில் உக்ரைன் ஏராளமான பொதுமக்களை பலி கொடுத்துவிட்டது. வீடு உள்பட பல்வேறு வணிக கட்டடங்கள் தரைமட்டம் ஆக்கப்பட உள்ளது. இதனால் பெரும் பொருளாதார நெருக்கடியில் உக்ரைன் சிக்கி தவித்து வரும் நிலையில் வரும் காலம் என்பது உக்ரைனுக்கு ரஷ்யாவின் போரை சமாளிப்பது என்பது பெரும் சவாலாக இருக்கும்.
இப்படியான சூழலில் தான் தற்போது பலருக்கும் ஒரு கேள்வி எழுந்துள்ளது. அதாவது ரஷ்யாவின் பக்கம் அமெரிக்கா கட்சி மாறிவிட்டது. இப்படியான சூழலில் உக்ரைனுக்கு வேறு எந்தெந்த நாடுகள் ஆதரவு தெரிவிக்கின்றன? என்ற கேள்வி பலருக்கும் வந்துள்ளது. அதன்படி தற்போதைய சூழலில் ஏற்கனவே உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்த நாடுகளில் அமெரிக்கா மட்டும் தான் ரஷ்யா பக்கம் சாய்ந்துள்ளது. இருப்பினும் வேறு பல நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக தான் உள்ளன.
அதன்படி கனடா, பிரான்ஸ், பிரிட்டன், ஆஸ்திரியா ஸ்லோவேனியா, ரோமானியா, போலந்து, ஜெர்மனி, இத்தாலி, பெல்ஜியம், குரோடியா, சீசெக் ரீபப்ளிக், எஸ்டோனியா, பின்லாந்து, அயர்லாந்து, லாடிவியா, லிதுவேனியா, லக்சம்பர்க், நெதர்லாந்து, போர்ச்சுக்கல், ஸ்பெயின், ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக உள்ளன. இதுதவிர ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உசூலா வான்டர், ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியா கோஸ்டா ஆகியோரும் உக்ரைனுக்கு ஆதரவாக உள்ளனர்.
இன்று டொனால்ட் டிரம்ப், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியிடம் கடுமையாக நடந்து கொண்டதற்கு இந்த நாடுகளின் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதில் பெரும்பாலான நாடுகள் ஐரோப்பிய கண்டத்தில் உள்ளன. இந்த நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நல்ல உறவு என்பது இருந்தது. ஆனால் இப்போது அந்த உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக நேட்டோ படையில் உள்ள நாடுகளிடம் அமெரிக்கா விவாதிக்கவில்லை. மொத்தமாக ஐரோப்பிய நாடுகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புறக்கணித்துவிட்டு தன்னிச்சையாக ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார் என்று ஐரோப்பிய நாடுகள் அதிருப்தியில் உள்ளன.
மேலும் அமெரிக்காவை தொடர்ந்து ரஷ்யா மீது நேட்டோவில் இருக்கும் ஐரோப்பிய நாடுகளும் பொருளாதார தடைகளை விதித்தன. இப்படி அமெரிக்காவுக்கு ஆதரவாக கண்மூடித்தனமாக ஆதரவு தெரிவித்த தங்களை இப்போது ரஷ்யா உடனான பேச்சுவார்த்தையில் டிரம்ப் சேர்க்கவில்லை என்பதை அந்த நாடுகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இதனால் அமெரிக்காவுக்கு எதிராக ஐரோப்பிய நாடுகள் ஓரணியில் திரண்டு உக்ரைனுக்கு பக்கப்பலமாக இருப்பதில் உறுதியாக உள்ளன. மேலும் இதன் பின்னணியில் இன்னொரு காரணமும் உள்ளது. அதாவது உக்ரைன் போருக்கு காரணமான நேட்டோ படையில் பல நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. உக்ரைன் நேட்டோவில் இணைய விரும்பியது தான் ரஷ்யாவின் போருக்கு காரணமாக அமைந்தது. இதனால் ஐரோப்பிய கண்டத்தில் உள்ள பல நாடுகள் உக்ரைன் பக்கம் தான் உள்ளன.
இருப்பினும் கூட அமெரிக்கா போல் ரஷ்யாவை சமாளிக்க உக்ரைனுக்கு ஐரோப்பிய நாடுகளால் ஆயுதங்கள், விமானங்கள் வழங்க முடியுமா? என்றால் அது கேள்விக்குறிதான். ஒருவேளை இதனை ஐரோப்பிய நாடுகள் செய்யும்பட்சத்தில் ரஷ்யாவுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கலாம். இது உக்ரைனுக்கு பெரும் சிக்கலை தரும். இதனால் பரிதாப நிலைக்கு உக்ரைன் தள்ளப்பட்டுள்ளது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications