அடேங்கப்பா.. 30+ அமெரிக்க நகரங்களுக்கு "விபூதி" அடித்த நித்தியானந்தா! கைலாசா போட்ட மெகா பிளான்?
நித்தியானந்தா உருவாக்கியுள்ள கைலாசா குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
வாஷிங்டன்: இந்தியாவில் இருந்து தப்பியோடிய நித்தியானந்தா கைலாசா என்ற நாட்டை உருவாக்குவதாக அறிவித்துள்ளார். இதனிடையே கைசாலா அமெரிக்காவில் பல நகரங்களை ஏமாற்றி போலியான ஒப்பந்தங்களைப் போட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நமது நாட்டில் ஒரு காலத்தில் பிரபல சாமியாராக இருந்தவர் நித்தியானந்தா.. அடுத்தடுத்து பாலியல் புகார்களில் சிக்கிய இவர், சில காலம் கைதாகி சிறையிலும் இருந்தார். அதன் பிறகு பிணையில் வெளியே வந்த இவர் தலைமறைவானார்.
அவ்வப்போது ஆன்மீக வீடியோக்களை மட்டுமே வெளியிட்டு வந்த நித்தியானந்தா திடீரென தலைமறைவானார். மேலும், யாருமே எதிர்பார்க்காத வகையில் புதிதாக கைலாசா என்ற நாட்டை உருவாக்குவதாக நித்தியானந்தா அறிவித்தார்.

நித்தியானந்தா
அது இந்துக்களின் தேசமாக இருக்கும் என்றும் நித்தியானந்தா அறிவித்தார். இந்த கைலாசா எங்கே இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது. ஈகுவடார் அருகே ஒரு தீவை வாங்கி அதையே கைலாசாவாக மாற்றுவதாகவும் தகவல் வெளியானது. இருப்பினும், இதை உறுதி செய்ய முடியவில்லை.. கைலாசாவுக்கு தனியாக நாட்டிற்குத் தனிக்கொடி, நாணயம், வெளியுறவுத்துறை உள்ளிட்டவற்றை அறிவித்தார். இது மட்டுமின்றி கைலாசாவுக்கான இ குடியுரிமைக்காகவும் விண்ணப்பிக்கலாம் என்று சொல்லி அதிர்ச்சி அளித்தார்.

கைலாசா
இந்துக்களின் புனித தளமான திபெத் கைலாச மலையின் பெயரையே தனது பகுதிக்கு நித்தியானந்தா வைத்துள்ளார். இந்தச் சூழலில் கைலாசா பிரதிநிதி என்று கூறி கடந்த மாதம் நடைபெற்ற ஐநா மாநாடு பெண் ஒருவர் ஐநா மாநாட்டில் கலந்து கொண்டார். இது தொடர்பான படங்கள் இணையத்தில் வெளியான நிலையில், ஐநா அமைப்பே கைலாசாவை அங்கீகரித்துவிட்டதாகப் போலியான தகவல்களை இணையத்தில் பரப்பப்பட்டன. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பின்னரே ஐநா கைலாசா பிரதிநிதி என்று கூறிக் கொண்டு அந்த பெண் அளித்த தகவல்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என்று அறிவித்தார்.

ஒப்பந்தம் போட்ட அமெரிக்க நகரம்
இது ஒரு பக்கம் இருக்க, அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரம் (Newark city) கைலாசா நாட்டுடன் சிஸ்டர் சிட்டி ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது. இதில் விஷயம் என்னவென்றால் நியூயார்க் நகருக்கு கைலாசா ஒரு போலியான நாடு, அது எங்கே இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது உள்ளிட்ட எதுவுமே தெரியாது. இருந்த போதிலும், கடந்த ஜனவ.12ஆம் தேதி நியூயார்க் நகரத்திற்கும் கைலாசா நாட்டிற்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த உண்மையைத் தெரிந்து கொண்ட நியூயார்க் நகரம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு, கைலாசாவுடன் போட்டிருந்த ஒப்பந்தத்தை ரத்து செய்தன.

மெகா பிளான்
அமெரிக்காவில் இருக்கும் முக்கிய நகரம் எப்படி இதுபோல போலி நாட்டுடன் ஒப்பந்தம் போட்டது என்றே பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கிடையே ஒரு அதிர்ச்சி தகவல் இப்போது வெளியாகி உள்ளது. அதாவது நித்தியானந்தா நியூயார்க் நகருடன் மட்டும் சிஸ்டர் சிட்டி ஒப்பந்தம் போடவில்லை. அமெரிக்கா முழுக்க இருக்கும் 30 நகரங்களுடன் கைசாலா கலாச்சார ஒப்பந்தத்தைப் போட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 30 நகரங்களுடன் கைலாசா பல்வேறு சிஸ்டர் சிட்டி ஒப்பந்தங்களைப் போட்டுள்ளது. இதுபோல போலியான ஒப்பந்தங்களை போட்டு, அப்போது எடுக்கப்பட்ட படங்களை வைத்து, இணையத்தில் கைலாசா அங்கீகரிக்கப்பட்ட நாடு என்பதை போன்ற பிம்பத்தை ஏற்படுத்த முயல்கின்றனர்.

மொத்தம் 30 நகரங்கள்
அமெரிக்கா முழுக்க ரிச்மண்ட், வர்ஜீனியா, டேடன், ஓஹியோ, புளோரிடா உள்ளிட்ட பல்வேறு நகரங்களும் கைலாசாவுடன் இந்த ஒப்பந்தத்தைக் கையெழுத்திட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. இதுபோல பல நகரங்களை கைலாசா ஏமாற்றியுள்ளதாக பாக்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து சில நகர நிர்வாகத்தைத் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர்களும் இதுபோல ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது உண்மைதான் என்று இதை உறுதிப்படுத்தவே செய்துள்ளனர். இது மிகப் பெரியளவில் பேசுபொருளாகியுள்ளது.

அலட்சியம்
இது குறித்து நார்த் கரோலினாவின் ஜாக்சன்வில் என்பவர் கூறுகையில், "கைலாசாவுடன் நாங்கள் கையெழுத்திட்டுள்ளதாலேயே அது ஒப்புதலாக ஆகாது. அவை கோரிக்கைக்கான பதில். அவர்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்குப் பதில் அளித்துள்ளோம். அவர்கள் கோரிக்கை வைத்த போது, நாங்கள் அவர்களின் பின்னணியைச் சரிபார்க்கவில்லை" என்றார். இந்த பதிலும் கடும் கடும் அதிருப்தியைக் கிளப்பியுள்ளது. சும்மா கூகுள் செய்து பார்த்தாலே கூட கைலாசா எப்படிப்பட்ட போலி நாடு என்பது தெரிந்துவிடும். ஆனால், அதைக் கூடச் செய்யாமல் இந்த நகரங்கள் ஒப்பந்தம் போட்டுள்ளதாகச் சாடி வருகின்றனர்.

எம்பிக்கள்
இது இன்னொரு முக்கிய விஷயம் இருக்கிறது. ஏதோ உள்ளூர் நிர்வாகம் மட்டும் கைலாசாவுக்கு ஏமாறவில்லை. அமெரிக்கா நாடாளுமன்றத்தில் இருக்கும் இருவரும் இந்த விவகாரத்தில் ஏமாந்துள்ளனர். அமெரிக்க நாடாளுமன்றத்தில் இருக்கும் இரண்டு உறுப்பினர்கள் கைலாசாவுக்கு "சிறப்பு அங்கீகாரம்" வழங்கியுள்ளனர். அவர்களில் ஒருவர் கலிபோர்னியாவைச் சேர்ந்த காங்கிரஸ் பெண்மணி நார்மா டோரஸ், மற்றொருவர் ஓஹியோவைச் சேர்ந்த குடியரசுக் கட்சியின் டிராய் பால்டர்சன் ஆவர். இந்த விவகாரத்தில் வரும் நாட்களில் மேலும் சில பகீர் தகவல்கள் வெளியாகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications